Petrol Diesel Price : பெட்ரோல், டீசல் விலையில் இன்று மாற்றம் உண்டா? இன்றைய நிலவரம் இதுதான்!!
மத்திய அரசு , பெட்ரோல் மற்றும் டீசல் விலையை தினசரி நிர்ணயம் செய்யும் உரிமையை எண்ணெய் நிறுவனங்களுக்கே கடந்த 2017ம் ஆண்டு வழங்கியது
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணையின் விலை 84 அமெரிக்க டாலராக உள்ள நிலையில், சென்னையில் இன்றும் பெட்ரோல் டீசல் விலை எவ்வித மாற்றமுமின்றி விற்கப்படுகிறது. தொடர்ந்து 70வது நாளாக பெட்ரோல் லிட்டருக்கு ரூபாய் 101.40க்கும், டீசல் லிட்டருக்கு ரூபாய் 91.43க்கும் விற்கப்பட்டு வருகிறது.
நவம்பர் மாத தொடக்கத்தில் 80 அமெரிக்க டாலராக இருந்த கச்சா எண்ணெயின் விலை, மாத இறுதியில் 70.86 அமெரிக்க டாலராக குறைந்தது. தற்போதைய, ஒமிக்ரான் தொற்று பரவலில் முழுமையான எல்லை மூடலை எந்த நாடும் அறிவிக்கவில்லை. அதன் காரணமாக, சர்வதேச சந்தையில் கச்சா எண்ணையின் விலை சற்றே அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. கடந்த புதன்கிழமையன்று, சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை 84 டாலாராக விற்பனை செய்யப்பட்டது.
மத்திய அரசு , பெட்ரோல் மற்றும் டீசல் விலையை தினசரி நிர்ணயம் செய்யும் உரிமையை எண்ணெய் நிறுவனங்களுக்கே கடந்த 2017ம் ஆண்டு வழங்கியது. அதன் பிறகு, தற்போது தான்,69 நாட்கள் தொடர்ந்து விலை மாற்றம் இல்லாமல் பெட்ரோல்,டீசல் விற்பனை செய்யப்படுவது முதன் முறையாகும்.
முன்னதாக, கடந்த நவம்பர் 3ம் தேதி தீபாவளியை முன்னிட்டு பெட்ரோல் மற்றும் டீசல் மீதான மத்திய கலால் வரியை முறையே ரூ 5 மற்றும் ரூ 10 குறைக்கும் குறிப்பிடத்தக்க முடிவை மத்திய அரசு எடுத்துது. மேலும், நுகர்வோருக்கு நிவாரணம் அளிக்கும் வகையில் பெட்ரோல் மற்றும் டீசல் மீதான வாட் வரியை (மதிப்புக் கூட்டு வரி) மாநிலங்கள் குறைக்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது. ஆனால், டெல்லி, பஞ்சாப் மற்றும் பாஜக ஆளும் சில மாநிலங்களில் மட்டுமே பெட்ரோல் மற்றும் டீசல் மீதான வாட் வரி குறைக்கப்பட்டது.
கொவிட்-19 காரணமாக ஏற்பட்ட மந்தநிலைக்குப் பிறகு இந்திய மக்களின் உழைப்பு மற்றும் திறமையின் காரணமாக இந்தியப் பொருளாதாரம் ஒரு குறிப்பிடத்தக்க திருப்பத்தைக் கண்டுள்ளது. பொருளாதாரத்தின் அனைத்துத் துறைகளும்- உற்பத்தி, சேவை அல்லது விவசாயம்- குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தைக் கண்டு வருகின்றன.
பொருளாதாரத்தை மேலும் மேம்படுத்தும் வகையில், டீசல் மற்றும் பெட்ரோல் மீதான கலால் வரியைக் கணிசமாக குறைக்க மத்திய அரசு முடிவு செய்தது.
பெட்ரோல் மற்றும் டீசல் மீதான கலால் வரிக் குறைப்பு, நுகர்வை அதிகரிக்கும் மற்றும் பணவீக்கத்தைக் குறைக்கும். ஏழை மற்றும் நடுத்தர மக்களுக்கு இது மிகவும் உதவிகரமாக இருக்கும். இன்றைய முடிவு ஒட்டுமொத்த பொருளாதாரச் சுழற்சியை மேலும் தூண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Inflation: எகிறும் உதிரிப்பொருட்களின் விலை.. விடாமல் துரத்தும் பணவீக்கம்.. பாதிப்பு யார் யாருக்கு?