மேலும் அறிய

kalaignar Loan Scheme: முதலாளிகளே..! ரூ.20 லட்சம் வரை கடன், 7% மட்டுமே வட்டி - அரசின் கலைஞர் கடனுதவி திட்டம் பற்றி தெரியுமா?

kalaignar Loan Scheme: தமிழ்நாடு அரசின் கலைஞர் சிறப்பு கடனுதவி திட்டம் குறித்து இந்த தொகுப்பில் அறியலாம்.

kalaignar Loan Scheme: தமிழ்நாடு அரசின் கலைஞர் சிறப்பு கடனுதவி திட்டத்திற்கு விண்ணப்பிக்க தேவையான தகுதிகள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.

கலைஞர் சிறப்பு கடனுதவி திட்டம்:

தமிழ்நாடு அரசு மாநிலத்தின் பொருளாதாரத்தை மேம்படுத்தும் வகையில், பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. குறிப்பாக தொழில்துறையை ஊக்குவிப்பதில் அதிக கவனம் செலுத்துகிறது. ஏற்கனவே உள்ள தொழில்களை விரிவாக்கவும், பட்டபடிப்பு முடித்து வேலையற்று இருக்கும் இளைஞர்கள் மற்றும் முதல் தலைமுறை பட்டதாரி இளைஞர்களை தொழில்முனைவோராக்குவதற்கு ஏற்ப பல கடனுதவி திட்டங்களையும் நடைமுறைப்படுத்தி வருகிறது. அந்த வகையில் தமிழ்நாடு அரசு செயல்படுத்தி வரும் கலைஞர் சிறப்பு கடனுதவி திட்டம் குறித்து இந்த தொகுப்பில் அறியலாம்.

தாய்கோ வங்கி மூலம் கடனுதவி:

சிறு மற்றும் குறு நிறுவனங்கள் விரிவடைய உதவிடும் நோக்கில் தாய்கோ வங்கி மூலமாக, கலைஞர் சிறப்பு கடனுதவி வழங்கப்பட்டு வருகிறது. குறுந்தொழில் உற்பத்தி நிறுவனங்கள் என்பது ரூ.25 லட்சத்திற்கு மிகாத அளவில் இயந்திரங்களை நிறுவி, உற்பத்தியில் ஈடுபட்டு வரும் நிறுவனங்கள் ஆகும்.  அதன்படி, மேற்குறிப்பிடப்பட்ட நிறுவனங்களுக்கு,ரூ.20 லட்சம் வரை கடனுதவி வழங்கப்படுகிறது. இத்திட்டத்தின் கீழ், தமிழ்நாடு அரசு (Tamil Nadu Government) 7 சதவீத வட்டி விகிதத்தில் குறுந்தொழில் நிறுவனங்களுக்கு கடனுதவி வழங்கி, முதலீட்டாளர்கள் தங்களது நிறுவனங்களை விரிவுபடுத்த உதவுகிறது. நடப்பு நிதியாண்டில் இத்திட்டத்திற்கு ரூ.100 கோடி வரை ஒதுக்கீடு செய்து தமிழக அரசு அறிவித்துள்ளது. இதன் மூலம் தொழில்துறை விரிவடைந்து, வேலைவாய்ப்பும் அதிகரிக்கும் என நம்பப்படுகிறது.

கூடுதல் வசதி:

இரண்டு ஆண்டுகளாக லாபத்தில் இயங்கும் நிறுவனங்கள், ஏற்கனவே அதிக வட்டிக்கு பிற நிறுவனங்களில் கடன் பெற்றிருந்தால், விதிமுறைகளுக்கு உட்பட்டு குறைந்த வட்டிக்கு அந்த கடனை தாய்கோ வங்கியில் கலைஞர் சிறப்பு கடனுதவி திட்டத்தின் கீழ் மாற்றிக் கொள்ளலாம்.

தகுதிகள் என்ன?

  • கலைஞர் கடனுதவி திட்டத்தின் பலனை பெறுவதற்கு விண்ணப்பத்தாரர் குறைந்தபட்சமாக 18 முதல் அதிகபட்சமாக 65 வயதுக்கு மிகாமல் இருப்பவராக இருக்க வேண்டும். 
  • ஏற்கனவே இயங்கி வரும் மற்றும் புதிய குறு தொழில் நிறுவனங்கள் மற்றும் தொழில் முனைவோர்களின் சிபில் ஸ்கோர் 600 புள்ளிகள் இருக்க வேண்டும்.
  • சிபில் ஸ்கோர் 600-க்கு  கீழ் இருக்கக் கூடாது.

விண்ணப்பிப்பது எப்படி?

தாய்கோ வங்கியின் அனைத்து கிளைகளிலும் கலைஞர் கடனுதவி திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. எனவே, கடன் தேவைப்படுவோர்கள் வங்கி கிளை மேலாளர்களை நேரில் அணுகி, அவர்களின் வழிகாட்டுதலின் பேரில் விண்ணப்பத்தை பூர்த்தி செய்து விண்ணப்பிக்கலாம்.

கடந்த 1961ம் ஆண்டு தாய்கோ வங்கி தொடங்கப்பட்டது. இது தமிழக சிறு, குறு, நடுத்தர, தொழில் துறையின்கீழ் இயங்கும்,  250க்கும் மேற்பட்ட தொழிற்கூட்டுறவு சங்கங்களுக்கு கடன் வழங்கும் பணியை மேற்கொண்டுவரும் தாய்கோ வங்கி, தனிநபர், சிறு தொழில் நிறுவனங்களுக்கும் தற்போது கடன் வழங்குகிறது.

Enthusiastic Journalist Kulasekaran Munirathnam, who has worked in leading news organizations, has 8 years of experience in the media industry. He entered the media industry on his own volition after completing his studies in Mechanical Engineering. He researches and provides accurate and detailed updated news on automobiles, which play a vital role in people's daily commute, financial advice for future savings, and infrastructure for development. In addition, he brings information related to politics and international events to the public through news. He works as an Associate Producer on the ABP NADU Tamil website.

Read More

தலைப்பு செய்திகள்

LIVE | Kerala Lottery Result Today (08.08.2026): அதிர்ஷ்டம் அடிக்குமா? கேரளா காருண்யா லாட்டரி குலுக்கல் இன்று!
LIVE | Kerala Lottery Result Today (08.08.2026): அதிர்ஷ்டம் அடிக்குமா? கேரளா காருண்யா லாட்டரி குலுக்கல் இன்று!
Gold rate today : ஜெட் வேகத்தில் தங்கம் விலை.! சவரனுக்கு 6,120 ரூபாய் உயர்வு- 5 நாளில் தலைகீழ் மாற்றம்- இன்றைய விலை இதோ..
ஜெட் வேகத்தில் தங்கம் விலை.! சவரனுக்கு 6,120 ரூபாய் உயர்வு- 5 நாளில் தலைகீழ் மாற்றம்- இன்றைய விலை இதோ..
தமிழக தொழில் துறை 17-க்கு சரிவு.. ஆர்.பி. உதயகுமார் த.வெ.க., மீது கொந்தளிப்பு !
தமிழக தொழில் துறை 17-க்கு சரிவு.. ஆர்.பி. உதயகுமார் த.வெ.க., மீது கொந்தளிப்பு !
இனி கூகுள் பே, போன்பே செய்பவர்களுக்கு பேரதிர்ச்சியா? மத்திய அரசு எடுத்த அதிரடி முடிவு!
இனி கூகுள் பே, போன்பே செய்பவர்களுக்கு பேரதிர்ச்சியா? மத்திய அரசு எடுத்த அதிரடி முடிவு!

வீடியோ

Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: காவிரி விவகாரம் - கருணாநிதியை குத்திக்காட்டிய விஜய்..! 1969ல் பேசியது என்ன? சட்டமன்ற குறிப்புகள் இதோ..!
காவிரி விவகாரம் - கருணாநிதியை குத்திக்காட்டிய விஜய்..! 1969ல் பேசியது என்ன? சட்டமன்ற குறிப்புகள் இதோ..!
CM Vijay: தொகுதி மறுவரையறை ஏன் கூடாது? முதலமைச்சர் விஜய் சொல்லும் காரணங்கள் - DMKவிற்கு செக்?
தொகுதி மறுவரையறை ஏன் கூடாது? முதலமைச்சர் விஜய் சொல்லும் காரணங்கள் - DMKவிற்கு செக்?
TVK Vijay: அதிமுகவில் இருந்து வந்தவர்களுக்கு முக்கிய பதவிகள்.. விஜய் எடுத்த முடிவு.. கொதிக்கும் தவெக தொண்டர்கள்!
TVK Vijay: அதிமுகவில் இருந்து வந்தவர்களுக்கு முக்கிய பதவிகள்.. விஜய் எடுத்த முடிவு.. கொதிக்கும் தவெக தொண்டர்கள்!
Sekar Babu: சாவின் விளிம்பிலும் ஸ்டாலின் வாழ்க தான்.. கட்சி மாறும் எண்ணமில்லை.. சேகர்பாபு திட்டவட்டம்!
Sekar Babu: சாவின் விளிம்பிலும் ஸ்டாலின் வாழ்க தான்.. கட்சி மாறும் எண்ணமில்லை.. சேகர்பாபு திட்டவட்டம்!
TN Weather News: சென்னையில் வெளுத்த மழை, எந்தெந்த மாவட்டங்களுக்கு இன்று வார்னிங்? தமிழக வானிலை அறிக்கை
சென்னையில் வெளுத்த மழை, எந்தெந்த மாவட்டங்களுக்கு இன்று வார்னிங்? தமிழக வானிலை அறிக்கை
Kia Seltos CNG: க்ராண்ட் விட்டாரா & ஹைரைடருக்கு சவால் - 28KM மைலேஜ் SUV-யை இறக்கும் கியா - முழு விவரம் இதோ
க்ராண்ட் விட்டாரா & ஹைரைடருக்கு சவால் - 28KM மைலேஜ் SUV-யை இறக்கும் கியா - முழு விவரம் இதோ
பாஜகவிற்கு பயந்து கூட்டத்தை புறக்கணித்த விஜய்.! இப்போ துரோகத்தை மறைக்க M.P.கூட்டமா.? திமுக கேள்வி
பாஜகவிற்கு பயந்து கூட்டத்தை புறக்கணித்த விஜய்.! இப்போ துரோகத்தை மறைக்க M.P.கூட்டமா.? திமுக கேள்வி
Rasi Palan Today (09-08-2026): மேஷத்துக்கு வெற்றி.. அப்ப இன்னைக்கு உங்க ராசிக்கு என்ன பலன்?
Rasi Palan Today (09-08-2026): மேஷத்துக்கு வெற்றி.. அப்ப இன்னைக்கு உங்க ராசிக்கு என்ன பலன்?
Embed widget