மேலும் அறிய

Ratan Tata : “இதயங்களை வென்றவர்“ - உலக பணக்காரர் பட்டியலில் டாடா இடம்பெறாதது ஏன் தெரியுமா ?

இது மிகப்பெரிய விஷயம் அல்லவா! பில் கேட்ஸ் வருவதற்கு முன்னதாகவே டாட்டா ஒரு philanthropist-ஆக இருந்திருக்கிறார்.

உலகின் பிரபல ஃபோர்ப்ஸ் பத்திரிக்கையின் கணிப்பு படி , எலான் மஸ்க்தான் பணக்காரர். அவருடைய நிகர சொத்துமதிப்பு 268 பில்லியன் அமெரிக்க டாலராக இருக்கிறது. ஆனால் ஃபோர்ப்ஸ் பத்திரிக்கையின் கணிப்பு  நமது நாட்டி வணிக ஜாம்பவானான ,பல தொழில் முனைவோருக்கும் முன்னோடியாக விளங்கும் ரத்தன் டாட்டாவை பற்றி படிக்கும் பொழுது நிச்சயம் மாறலாம். இந்திய தொழில் அதிபர் ரத்தன் டாடா பலராலும் விரும்பப்படும் நபர்களில் ஒருவர். கிராமங்களில் ஒரு மூன்று தலைமுறையாக  ஒரு வசதி படைத்த நபர்களை சாட வேண்டும் என்றால் “இவரு பெரிய டாட்டா , பிர்லா“ என கூறுவது வழக்கம் . அப்படி பட்டி தொட்டி எங்கும் நிறைந்து கிடக்கும் டாட்டாவின் புகழ் , அவரது தொலைநோக்கு வணிக பார்வையாலும் , அவர் தொழிலதிபர்  என்பதாலும் மட்டுமல்ல . அவர் ஒரு சிறந்த மனிதநேயவாதி என்கிறது பத்திரிக்கைகள் . அப்படி என்னதான் செய்துவிட்டார் டாட்டா?
Ratan Tata : “இதயங்களை வென்றவர்“ - உலக பணக்காரர் பட்டியலில் டாடா இடம்பெறாதது ஏன் தெரியுமா ?

84 வயதாகும் ரத்தன் டாட்டா எந்தவொரு புகழ் போதைக்கும் அடிமையானவர் இல்லை. சமீபத்தில் கூட அவர் தனது பிறந்தநாளை எவ்வளவு எளிமையாக கொண்டாடினார் என்பதைத்தான் நாம் கண் கூடாக பார்த்தோமே!. நிச்சயமாக எலான் மஸ்கை போல டாடா பொருளாதார அளவில் உலக பணக்காரர் கிடையாது.  ஏன் இந்தியாவில் கடந்த 2021-ஆம் ஆண்டு வெளியான உலக பணக்காரர்களின் பட்டியலில் ரத்தன் டாடாவை விட  432 இந்தியர்கள் பணக்காரர்களாக உள்ளனர். கிராமங்கள்தோறும் சென்றடைந்த டாட்டாவால் முதல் 10 இடத்தை இந்திய பணக்காரர்கள் வரிசையில் கூட பிடிக்க முடியவில்லையா ? என உங்களுக்கு தோன்றலாம். ஆனால் இவர்களை விடவும் ரத்தன் டாட்டா மனதளவில் பணக்காரர் என்கிறது ஊடகங்கள். 

டாடா டிரஸ்ட் மூலம் அவர் செய்து வரும் தொண்டுகளால் சொத்துக்கள் எதையும் பணக்காரர் பட்டியலில் இடம்பெற சேர்த்து வைக்கவில்லை போலும். 2021 ஆம் ஆண்டு நிலவரப்படி 103 பில்லியன் அமெரிக்க டாலர் வருவாய் ஈட்டுகிறது டாடா குழுமம் இந்தியாவில் மட்டுமல்ல, உலகம் முழுவதிலும் உள்ள மிகப்பெரிய குழுக்களில் ஒன்றாக உள்ளது. இதன் வருவாயில் 66%  டாடா டிரஸ்ட்டுக்கே சென்றடைகின்றன. கடந்த ஒன்றரை வருடங்களாக டாடா இந்தியாவின் அவசர தேவைக்காக உதவி வருகிறார். சுகாதார வசதிகள், கல்வி முறையை மேம்படுத்துதல்  போன்ற பல விஷயங்கள் மூலம் இந்தியாவின் வளர்ச்சிக்கு அவர் நிறைய பங்களிப்புகளைச் செய்துள்ளார்.  அவர் வழியில்தான் அவர் குடும்பமும் செயல்படுகிறது. அதனால் அவர் தனிப்பட்ட நிதிநிலையில் எந்த பாதிப்பும் இருக்காது என்பதையும் நினைவில் கொள்ளுங்கள். தனக்கு மிஞ்சிய, தான தர்மத்தைதான் அவர் ஃபாலோ செய்கிறார். எந்த ஒரு வசதி படைத்த தொழிலதிபர்களுக்கும் இருக்கும் ஆசை, பணக்காரர் பட்டியலில் முதலிடம் பெற வேண்டும் என்பதுதான் . ஆனால் டாட்டா அந்த ரேஸில் தன்னை ஒருபோதும் இணைத்துக்கொள்ளவில்லை.

Ratan Tata : “இதயங்களை வென்றவர்“ - உலக பணக்காரர் பட்டியலில் டாடா இடம்பெறாதது ஏன் தெரியுமா ?

டாடா குழுமம் உலோகங்கள் மற்றும் சுரங்கம், தகவல் தொழில்நுட்பம், சில்லறை விற்பனை, வாகனம், , இரசாயனங்கள், போக்குவரத்து என கிட்டத்தட்ட 29 பட்டியலிடப்பட்ட நிறுவனங்களையும் மேலும் பட்டியலிடப்படாத நிறுவனங்களையும் கொண்டுள்ளது. இத்தனை நிறுவனங்கள் இருந்த போதிலும் டாடா இவற்றில் சில நிறுவனங்களின் பங்குகளை அனுபவித்தது கிடையாது. நேரடியாக டாட்டா  அறக்கட்டளைக்கு சேரும்படிதான் கட்டமைத்துள்ளார். இது மிகப்பெரிய விஷயம் அல்லவா! பில் கேட்ஸ் வருவதற்கு முன்னதாகவே டாட்டா ஒரு philanthropist ஆக இருந்திருக்கிறார். தன்னால் ஆனல் உதவிகளை எல்லா காலக்கட்டத்திலும் செய்து வந்தவர் ரத்தன் டாடா. இப்போது சொல்லுங்கள் ஃபோர்ப்ஸ் பத்திரிக்கையில் இடம்பெறாவிட்டாலும் டாட்டா இதயங்களை வென்ற பணக்காரர்தானே!

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

ஃபாலோ பண்ணா 5 ஆண்டு; வன்கொடுமைக்கு 14 ஆண்டு- மரண தண்டனையும் உண்டு! பெண்களுக்காக நிறைவேறியது புது சட்டம்!
ஃபாலோ பண்ணா 5 ஆண்டு; வன்கொடுமைக்கு 14 ஆண்டு- மரண தண்டனையும் உண்டு! பெண்களுக்காக நிறைவேறியது புது சட்டம்!
TN Assembly: ”தனி அலுவலர்கள் வேண்டாம்” சட்டப்பேரவையில் காங்கிரஸ் சம்பவம், திமுக அரசின் மசோதாவிற்கு எதிர்ப்பு
TN Assembly: ”தனி அலுவலர்கள் வேண்டாம்” சட்டப்பேரவையில் காங்கிரஸ் சம்பவம், திமுக அரசின் மசோதாவிற்கு எதிர்ப்பு
'டியர் இட்லி, சட்னி, நோ சாம்பார்' சர்ச்சையைக் கிளப்பிய மெயில், மன்னிப்பு கேட்ட ஐஐடி- பின்னணி!
'டியர் இட்லி, சட்னி, நோ சாம்பார்' சர்ச்சையைக் கிளப்பிய மெயில், மன்னிப்பு கேட்ட ஐஐடி- பின்னணி!
Pariksha Pe Charcha: அம்மாடியோவ்.. 2.8 கோடி பேர் முன்பதிவு- பரிக்‌ஷா பே சார்ச்சாவுக்கு விண்ணப்பித்து விட்டீர்களா?
Pariksha Pe Charcha: அம்மாடியோவ்.. 2.8 கோடி பேர் முன்பதிவு- பரிக்‌ஷா பே சார்ச்சாவுக்கு விண்ணப்பித்து விட்டீர்களா?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Tirupati Stampede |  Pawan  VS Jagan Mohan டவுன் டவுன் ஜெய் ஜெய் கோஷம் போர்களமான திருப்பதி HOSPITALSeeman Periyar Issue : Vadakalai Vs Thenkalai fight : வடகலை Vs தென்கலை”யார் பெரியவா..?”களேபரமான காஞ்சிபுரம் கோயில்TVK Vijay Meeting: பனையூரில் குவியும் தொண்டர்கள்..100 மா.செ-க்கள் ரெடி! புயலை கிளப்பும் விஜய்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ஃபாலோ பண்ணா 5 ஆண்டு; வன்கொடுமைக்கு 14 ஆண்டு- மரண தண்டனையும் உண்டு! பெண்களுக்காக நிறைவேறியது புது சட்டம்!
ஃபாலோ பண்ணா 5 ஆண்டு; வன்கொடுமைக்கு 14 ஆண்டு- மரண தண்டனையும் உண்டு! பெண்களுக்காக நிறைவேறியது புது சட்டம்!
TN Assembly: ”தனி அலுவலர்கள் வேண்டாம்” சட்டப்பேரவையில் காங்கிரஸ் சம்பவம், திமுக அரசின் மசோதாவிற்கு எதிர்ப்பு
TN Assembly: ”தனி அலுவலர்கள் வேண்டாம்” சட்டப்பேரவையில் காங்கிரஸ் சம்பவம், திமுக அரசின் மசோதாவிற்கு எதிர்ப்பு
'டியர் இட்லி, சட்னி, நோ சாம்பார்' சர்ச்சையைக் கிளப்பிய மெயில், மன்னிப்பு கேட்ட ஐஐடி- பின்னணி!
'டியர் இட்லி, சட்னி, நோ சாம்பார்' சர்ச்சையைக் கிளப்பிய மெயில், மன்னிப்பு கேட்ட ஐஐடி- பின்னணி!
Pariksha Pe Charcha: அம்மாடியோவ்.. 2.8 கோடி பேர் முன்பதிவு- பரிக்‌ஷா பே சார்ச்சாவுக்கு விண்ணப்பித்து விட்டீர்களா?
Pariksha Pe Charcha: அம்மாடியோவ்.. 2.8 கோடி பேர் முன்பதிவு- பரிக்‌ஷா பே சார்ச்சாவுக்கு விண்ணப்பித்து விட்டீர்களா?
Duraimurugan Seeman: ”ஏஜெண்ட், தற்குறி, அறிவு இருந்தா” சீமானை வெளுத்து வாங்கிய துரைமுருகன் - அடுத்து கைது?
Duraimurugan Seeman: ”ஏஜெண்ட், தற்குறி, அறிவு இருந்தா” சீமானை வெளுத்து வாங்கிய துரைமுருகன் - அடுத்து கைது?
NMMS Exam: என்எம்எம்எஸ் படிப்பு உதவித்‌ தொகை தேர்வு; முக்கிய அறிவிப்பை வெளியிட்ட தேர்வுகள் இயக்ககம்!
NMMS Exam: என்எம்எம்எஸ் படிப்பு உதவித்‌ தொகை தேர்வு; முக்கிய அறிவிப்பை வெளியிட்ட தேர்வுகள் இயக்ககம்!
Erode East By Election: ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல், எந்த கட்சிக்கு யார் வேட்பாளர்? திமுக+ Vs எதிர்க்கட்சிகள்: இன்று முதல் வேட்புமனுதாக்கல்
Erode East By Election: ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல், எந்த கட்சிக்கு யார் வேட்பாளர்? திமுக+ Vs எதிர்க்கட்சிகள்: இன்று முதல் வேட்புமனுதாக்கல்
Game Changer Review: தெலுங்கில் ஜெயித்தாரா இயக்குனர் ஷங்கர்? ராம் சரணின் கேம் சேஞ்சர் திரைப்படம் எப்படி இருக்கு? விமர்சனம் இதோ..!
Game Changer Review: தெலுங்கில் ஜெயித்தாரா இயக்குனர் ஷங்கர்? ராம் சரணின் கேம் சேஞ்சர் திரைப்படம் எப்படி இருக்கு? விமர்சனம் இதோ..!
Embed widget