மனிதர்கள் கேட்கக்கூடிய வரம்பிற்கு கீழே உள்ள அதிர்வெண் கொண்ட, ஆதாவது 20 Hz-க்கு கீழே உள்ள ஒலி அலைகள் Infrasonic சத்தங்கள் எனப்படும்.
யானைகளால் Infrasonic சத்தங்களை எழுப்பவும் அதற்கு பதிலளிக்கவும் முடியும். தொலைதூர தொடர்பிற்காக யானைகள் இந்த சத்தங்களை பயன்படுத்துகின்றன.
நீலத் திமிங்கலம் மற்றும் ஃபின் திமிங்கலங்கள் உருவாக்கும் குறைந்த அதிர்வெண் சத்தங்களை 100 மைல் தூரத்தில் இருக்கும் திமிங்கலங்களால் கேட்க இயலும்.
டால்பின்கள் வழிகாட்டுதலுக்கும், தொடர்புகளுக்கும் Infrasonic சத்தங்களை பயன்படுத்துகின்றன.
புறாக்கள் இடம்பெயர்ந்து செல்லும்போது வழிகாட்ட குறைந்த அதிர்வெண் கொண்ட ஒலிகளை பயன்படுத்துவதாக ஆய்வுகள் கூறுகின்றன.
தனிப்பட்ட உரையாடல்களுக்கு ஒட்டகச்சிவிங்கிகள் Infrasonic சத்தங்களை பயன்படுத்துவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இனச்சேர்க்கையின்போதும், தொடர்புகொள்ளும்போதும் முதலைகள் குறைந்த அதிர்வெண் கொண்ட சத்தங்களையே பயன்படுத்துகின்றன.
தொடர்புகளுக்காகவும், வழிகாட்டுதலுக்காகவும் மாடு, ஆடு, கோழி போன்ற கால்நடைகள் குறைந்த அதிர்வெண் கொண்ட சத்தங்களை பயன்படுத்துவது தெரியவந்துள்ளது.
இனச்சேர்கை மற்றும் தொடர்பு இவற்றிற்காக காண்டாமிருகங்கள் Infrasonic சத்தங்களை பயன்படுத்துகிறது.
நீர்யானைகளால் பிராந்திய உருவாக்கத்திற்காகவும், தொடர்புகொள்ளவும் இந்த சத்தங்களை பயன்படுத்துகின்றன.
தொடர்புகொள்ளவும், பயணிக்கவும் Infrasonic சத்தங்களை பயன்படுத்துவது கண்பிடிக்கப்பட்டுள்ளது.