Stock Market Today: ஐ.டி. பங்குகள் சரிவு - ஏற்ற, இறக்கத்துடன் வர்த்தகமாகும் பங்குச்சந்தை!
Stock Market Today: இந்திய பங்குச்சந்தை நிலவரம் பற்றி இங்கே காணலாம்.
![Stock Market Today: ஐ.டி. பங்குகள் சரிவு - ஏற்ற, இறக்கத்துடன் வர்த்தகமாகும் பங்குச்சந்தை! Stock Market Updates Sensex Nifty trade flat M&M, Bharti Airtel, Tata Motors top losers Stock Market Today: ஐ.டி. பங்குகள் சரிவு - ஏற்ற, இறக்கத்துடன் வர்த்தகமாகும் பங்குச்சந்தை!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/08/16/9ee1ed402e666980bbe5cafd10e7471b1723805201791314_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
இந்திய பங்குச்சந்தை ஏற்ற, இறக்கத்துடன் வர்த்தகமாகியது. சென்செக்ஸ் மீண்டும் 80 ஆயிரம் புள்ளிகளில் வர்த்தகமாகியது.
வாரத்தின் முதல் நாளில், வர்த்தகம் தொடங்கியவுடன் சென்செக்ஸ் 150 புள்ளிகள் உயர்ந்த நிலையில், சிறது நேரத்து 50 புள்ளிகள் சரிவுடன் வர்த்தகமானது. பங்குச்சந்தை ஏற்ற, இறக்கத்துடன் வர்த்தகமாகியது.
மும்பை பங்குச்சந்தை குறியீடான சென்செக்ஸ் 47.08% அல்லது 0.059% புள்ளிகள் உயர்ந்து 80,436. 47 ஆகவும், தேசிய பங்குச்சந்தை குறியீடான நிஃப்டி 35.45 அல்லது 1.14% புள்ளிகள் உயர்ந்து 24,576.00 ஆக வர்த்தகமாகியது.
கடந்த வாரம் முழுக்க பங்குச்சந்தை சரிவுடன் வர்த்தகமாகியது. இந்த வாரமும் பங்குச்சந்தை சற்று சரிவுடனேயே இருக்கும் எதிர்பார்க்கப்பட்டது. அதன்படி, சரிவுடன் தொடங்கிய பங்குச்சந்தை சிறிது நேரத்தில் ஏற்றம் கண்டது.
லாப - நஷ்டத்துடன் வர்த்தகமான நிறுவனங்களின் விவரம்:
ஹிண்டால்கோ, எல்.டி.ஐ. மைண்ட் ட்ரீ, பி.பி.சி.எல்,, ஓ.என்.ஜி.சி.,ம் ஸ்ரீராம் ஃபினான்ஸ், டாக்டர் ரெட்டிஸ் லேப்ஸ், என்.டி.பி.சி.,ம் பவர்கிரிட் கார்ப், டாடா ஸ்டீல், ரிலையன்ஸ், எஸ்.பி.ஐ., கோல் இந்தியா, விப்ரோ, டெக் மஹிந்திரா, ஏசியன் பெயிண்ட்ஸ், டி.சி.எஸ்., அதானி எண்டர்பிரைசிஸ், பஜாஜ் ஃபினான்ஸ், ஹெச்.சி.எல். டெக், கோடாக் மஹிந்திரா, அல்ட்ரா டெக் சிமெண்ட், டைட்டன் கம்பெனி, பிரிட்டானியா, சன் ஃபார்மா, பஜாஜ் ஃபின்சர்வ், ஹீரோ மோட்டர்கார்ப், ஐ.டி.சி., அப்பல்லோ மருத்துவமனை, இன்போசிஸ், அதானி போர்ட்ஸ், ஹெச்.யு.எல்., இந்தஸ்லேண்ட் வங்கி, ஆகிய நிறுவனங்கள் மட்டும் லாபத்துடன் வர்த்தகமாகின.
எம்.&எம்., ஹெச்.டி.எஃப்.சி. லைஃப், எஸ்.பி.ஐ. லைஃப் இன்சுரா, பாரதி ஏர்டெல், டாடா மோட்டர்ஸ், டாட்டா கான்ஸ் ப்ராட், ஆக்சிஸ் வங்ஜி, பஜாஜ் ஆட்டோ, நெஸ்லே, ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கி, க்ரேசியம், லார்சன், ஈச்சர் மோட்டர்ஸ், மாருதி சுசூகி, டிவிஸ் லேப்ஸ், ஜெ.எஸ்.டபுள்யூ. ஹெச்.டி.எஃப்.சி. வங்கி, சிப்ளா ஆகிய நிறுவனங்களின் பங்குகள் சரிவுடன் வர்த்தகமாகின.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)