Stock Market Update: அதிக ஏற்ற இறக்கத்துடன் வர்த்தகமாகி வரும் இந்திய பங்குச்சந்தை: இன்றைய நிலவரம்
Stock Market Update: இந்திய பங்குச்சந்தை நிலையற்றதன்மையுடன் வர்த்தகமாகியது.
Stock Market Update: இந்திய பங்குச்சந்தை சரிவுடன் தொடங்கி வர்த்தகமாகிறது.
வர்த்தக நேர தொடக்கத்தில் மும்பை பங்குச் சந்தை குறியீடான சென்செக்ஸ் 34.66 (0.055%) சரிந்து 65,048.42 ஆகவும், தேசிய பங்குச்சந்தை குறியீடான நிஃப்டி 24.70 அல்லது 0.12 % புள்ளிகள் சரிந்து 19,324.50 புள்ளிகளாகவும் வர்த்தகமாகின.
லாபத்துடன் வர்த்தகமான நிறுவனங்கள்
மாருதி சுசூகி, ஹிண்டால்கோ, டெக் மகேந்திரா, அல்ட்ராடெக் சிமெண்ட், ஹெச்.சி.எல்., டெக், டைட்டன் கம்பெனி, கோல் இந்தியா, டாடா ஸ்டீல், டி.சி.எஸ்.,பவர்கிரிட் கார்ப், இன்ஃபோசிஸ், டாக்டர்.ரெட்டி லேப்ஸ், ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கி, விப்ரோ, என்.டி.பி.சி., டாடா மோட்டர்ஸ், ஆக்சிஸ் வங்கி உள்ளிட்ட நிறுவனங்கள் லாபத்துடன் வர்த்தகமாகின.
நஷ்டத்துடன் வர்த்தகமான நிறுவனங்கள்
அதானி போர்ட்ஸ், ஈச்சர் மோட்டர்ஸ், பஜாஜ் ஃபினான்ஸ், நெஸ்லே, பிரிட்டானியா, ஏசியன் பெயிண்ட்ஸ், லார்சன், இந்தஸ்லேண்ட் வங்கி, ஹெச்.டி.எஃப்.சி. வங்கி, ஐ.டி.சி., ஓ.என்.ஜி.சி., சன் ஃபார்மா, ஹீரோ மோட்டர்கார்ப் உள்ளிட்ட நிறுவனங்கள் நஷ்டத்தில் வர்த்தகமாகின.
வர்த்தக நேர தொட்டத்தில் காலை 9.03 நிலவரப்படி, சென்செக்ஸ் 122.21 புள்ளிகளும் நிஃப்டி 40.40 புள்ளிகளும் உயர்ந்தது. ஆனால், சற்று நேரத்தில் பங்குகளின் மதிப்பு சரிவை சந்தித்தன.
இந்திய ரூபாய் மதிப்பு
டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ரூ.82.65 ஆக இருந்தது. இது நேற்று 82.73 ஆக இருந்தது.