Stock Market Update: சென்செக்ஸ் 638 புள்ளிகள் சரிவு - இந்திய பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி - இன்றைய நிலவரம்
Stock Market Update: இந்திய பங்குச்சந்தை சரிவுடன் தொடங்கி வர்த்தகமாகி வருகிறது.
Stock Market Update: இந்திய பங்குச்சந்தை சரிவுடன் தொடங்கி வர்த்தகமாகி வருகிறது. விநாயகர் சதுர்த்தி விடுமுறை முடிந்து இன்று காலை தொடங்கிய பங்குச்சந்தை சரிவுடன் வர்த்தகமாகி வருகிறது.
மும்பை பங்குச்சந்தை குறியீடான சென்செக்ஸ் 628.38 அல்லது 0.92% புள்ளிகள் சரிந்து 66,980.87 ஆகவும், தேசிய பங்குச்சந்தை குறியீடான நிஃப்டி 177.30 அல்லது 0.87 % புள்ளிகள் சரிந்து 19,956.85 புள்ளிகளாகவும் வர்த்தகமாகின.
லாபத்துடன் வர்த்தகமான நிறுவனங்கள்
கோல் இந்தியா, பவர்கிரிட் கார்ப், ஆக்சிஸ் வங்கி, பஜாஜ் ஆட்டோ, டாடா மோட்டார்ஸ், சன் பார்மா, ஐ.டி.சி., சிப்ளா, எம். & எம்., ஓ.என்.ஜி.சி., ஹீரோ மோட்டர்கார்ப் உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் லாபத்துடன் வர்த்தகமாகின.
நஷ்டத்துடன் வர்த்தகமான நிறுவனங்கள்
ஹெச்.டி.எஃப்.சி. வங்கி, அப்பல்லோ மருத்துவமனை, ஜெ.எஸ்.டபுள்யு., பிரிட்டானியா, ரியலைன்ஸ், ஜியோ ஃபினான்சியல், மாருது சுசூகி, கோடாக் மகிந்திரா, டெக் மஹிந்திரா, டாடா ஸ்டீல், க்ரேசியம், பாரதி ஏர்டெல், ஈச்சர் மோட்டர்ஸ், அதானி எண்டர்பிரிசிஸ், இன்ஃபோசிஸ், லார்சன், எஸ்.பி.ஐ., அதனை போர்ட்ஸ், டைட்டன் கம்பெனி, விப்ரோ உள்ளிட்ட நிறுவனங்கள் நஷ்டத்தில் வர்த்தகமாகி வருகின்றன.
இன்று இரவு நடைபெற உள்ள அமெரிக்க பெடரல் வங்கியின் கூட்டம் முதலீட்டாளர்களிடம் ஏற்படுத்திய எச்சரிக்கை உணர்வு, ஹெச்டிஎஃப்சி வங்கி பங்கின் வீழ்ச்சி போன்ற காரணங்களால் இந்திய பங்குச்சந்தைகள் இன்றைய வர்த்தகத்தை பெரும் சரிவுடன் தொடங்கின.
நிஃப்டி மிட்கேப்,ஸ்மால்கேப் உள்ளிட்டவை வரும் வாரங்களில் சரிவுடன் இருக்கும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.
ஹெச்.டி.எஃப்.சி. வங்கியில் நிர்வாக இயக்குநரான சஷிதர் ஜெகதீஷன் அக்டோபர்,27,2023 முதல் அக்டோபர் 2023 வரை நியமிக்கலாம் என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.
BHEL- பாரத் ஹெவி எலக்ட்ரானிஸ் லிமிடட் நிறுவத்தின் இயக்குநராக தஜிந்தர் குப்தா நியமிக்க மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இவர் என்.டி.பி.சி. நிறுவனத்தில் தலைமை பொது மேலாளராக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
தங்கம் விலை மாற்றமின்றி தொடர்கிறது. ஃபெடரல் ரிசர்வ் பாலிசி பற்றிய அறிவிப்பு இன்று இரவு வர இருக்கும் நிலையில் தங்கம் விலையில் மாற்றமின்றி இருக்கிறது.
இன்றைய வர்த்தக நேரத்தில் 1272 பங்குகள் ஏற்றத்துடனும், 1723 பங்குகள் சரிவுடனும் இருந்தன. 88 பங்குகளின் மதிப்பில் மாற்றமில்லை.
மேலும் வாசிக்க..