மேலும் அறிய

Stock Market:பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி;முதலீட்டாளர்கள் செய்ய வேண்டியதென்ன?நிபுணர்களின் பரிந்துரை!

Stock Market: வர்த்தகம் தொடங்கிய ஒரு மணி நேரத்தில் பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு ரூ.15 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 இந்திய பங்குச்சந்தை கடும் வீழ்ச்சியை சந்தித்துள்ளது. வர்த்தக நேர முடிவில், இந்திய பங்குச்சந்தை சரிவுடன் வர்த்தகத்தை நிறைவு செய்துள்ளது. மும்பை பங்குச்சந்தை குறியீடான சென்செக்ஸ் 2,182.73 அல்லது 2.76% புள்ளிகள் சரிந்து 78,760.75 ஆகவும், தேசிய பங்குச்சந்தை குறியீடான நிஃப்டி 675.50 அல்லது 2.70% புள்ளிகள் சரிந்து 24,057140 ஆக வர்த்தகமாகியது. 

இந்திய பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி:

அமெரிக்க பொருளாதார மந்தநிலை, அமெரிக்காவில் கடந்த ஜூலை மாதத்தில் வேலைவாய்ப்பின்மை நிலை மோசமடைந்தது, அந்நாட்டில் வேலையின்மை ரேட் 4.3 சதவிகிதம் உயர்வு, தொடர்ந்து நான்காவது மாதமாக வேலையின்மை விகிதம் உயர்வு  உள்ளிட்ட காரணங்களால் ஜப்பான், தென் கொரியா, ஆஸ்திரேலியா அகிய நாடுகளிலும் பங்குச்சந்தை வீழ்ச்சியடைந்துள்ளது. ஜப்பானில் வட்டி விகிதம் உயர்த்தப்பட்டுள்ளது. இவை இந்திய பங்குச்சந்தையில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. அதோடு, பட்ஜெட் அறிவிப்பும் பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு சாதகமாக இல்லை என்பதாலும் பங்குச்சந்தை சரிவுடன் வர்த்தகமானது. 

வர்த்தகம் தொடங்கிய ஒரு மணி நேரத்தில் பங்குச்சந்தை வீழ்ச்சியால் முதலீட்டாளர்களுக்கு ரூ.15 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.BSE ரூ.457 லட்சம் கோடியில் இருந்து ரூ.447 லட்சம் கோடியாக குறைந்துள்ளது. 

கடந்த 2023-ம் ஆண்டு மே மாதம் சென்செக்ஸ் 61,000 புள்ளிகளில் இருந்து கடந்த வாரம் ரூ.82,000 புள்ளிகளாக உயர்ந்தது. 15 மாதங்களில் 34 சதவிகிதம் அதிகரித்தது. இந்நிலையில், ஆகஸ்ட் இரண்டாவது வாரத்தில் திங்கள் கிழமையில் சென்செக்ஸ் 2,500 புள்ளிகள் வீழ்ச்சியடைந்துள்ளது. இதே நிலை அடுத்த வர்த்தக நேரத்திலும் தொடருமா என்பதற்கும் இந்திய முதலீட்டாளர்கள் இதை கவனிக்க வேண்டுமா என்பதற்கு பங்குச்சந்தை முதலீட்டாளர்கள் சொல்லும் அறிவிரைகளை இங்கே காணலாம். 

சந்தை மற்றும் ரீடெயில் முதலீட்டாளர்கள் இது குறித்து பெரிதாக அச்சம் கொள்ள வேண்டிய அவசியம் இல்லை என்று நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். சர்வதேச சந்தைகளில் நிலவும் சூழல் காரணமாக இந்திய பங்குச்சந்தை வீழ்ச்சியடைந்துள்ளது. இருப்பினும், இதே நிலை வெகு நாட்களுக்கு நீடிக்கும் என்று சொல்ல முடியாது. ஆனால், முதலீட்டாளர்கள் கவனமுடன் முதலீடு செய்ய வேண்டும். முதலீட்டாளர்கள் தங்களது எதிர்பார்ப்புகளை குறைத்து சந்தை நிலவரம் தெரிந்து அதற்கேற்றவாறு செயல்பட வேண்டும் என்று தெரிவிக்கின்றனர். 

அமெரிக்கா பொருளாதார நிலை, அமெரிக்க வேலையின்மை விகிதம் 4.3% உயர்வு, மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் அரசியல் அழுத்தம், ஜப்பான் Nikkei 12 % சரிவு, தென் கொரியாவின் Kospi Composite index 8.8 சதவிகித சரிவு,  ஐரோப்பிய சந்தை 2.5% சைர்வு ஊள்ளிட்டவைகள் காரணமாக இந்திய பங்குச்சந்தை வீழ்ச்சியடைந்தாலும் பெரிதாக அச்சம் கொள்ள தேவையில்லை. கவனத்துடன் அணுகினால் இழப்புகளை தவிர்க்க முடியும் என்று நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். 

இந்திய பங்குச்சந்தை வீழ்ச்சி பொருளாதாரத்தில் எவ்வித பாதிப்பை ஏற்படுத்தும் வாய்ப்புகள் இல்லை என்பதால் பங்குச்சந்தை மீண்டு வரும். நீண்ட நாட்களாக பங்குச்சந்தையில் முதலீடு செய்திருப்பவர்கள் கவனத்துடன் இருக்க வேண்டும். புதிதாக முதலீடு செய்ய விரும்புபவர்கள் சந்தை சரிவிலிருந்து மீளும் வரை காத்திருக்கலாம் என்று நிபுணர்கள் அறிவுறுத்துகின்றனர்.

செய்ய கூடியவைகளும் கூடாதவைகளும்:

  • பங்குச்சந்தை முதலீட்டாளர்கள் வீழ்ச்சி நிலையைல் கருத்தில் கொண்டு பங்குகளை அவசரத்தில் பங்குகளை விற்பனை செய்துவிட கூடாது. வீழ்ச்சியடைந்துள்ள சூழலிலும் கவனமுடன் இருக்க வேண்டும். 
  • ரீடெயில் முதலீட்டாளர்கள் டே-ட்ரேடிங்கில் ஈடுபடகூடாது. சர்வதேச சந்தைகளில் நிலவும் அசாதாரண சூழலில் ரீடெயில் முதலீட்டாளர்கள் இப்போது வர்த்தகம் மேற்கொள்வது நஷ்டம் ஏற்பட காரணமாக இருக்கும். 
  • ஸ்மால் மற்றும் மிட்கேப் நிறுவனங்களில் முதலீடு செய்ய இது உகந்த நேரம் இல்லை. 
  • முதலீட்டாளர்கள் கவனமுடன் செயல்படுவது நல்லது. 

Freelancer Jhansi Rani. MA
Read
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

ரூ 750 மதிப்பிலான பொங்கல் பரிசு தொகுப்பு .! பொதுமக்களுக்கு குஷியான அறிவிப்பு
ரூ 750 மதிப்பிலான பொங்கல் பரிசு தொகுப்பு .! பொதுமக்களுக்கு குஷியான அறிவிப்பு
ADMK general committee meeting: அதிமுக தான் கூட்டணிக்கு தலைமை... புதிய கட்சிகளை சேர்க்க இபிஎஸ்க்கு அதிகாரம்- 16 தீர்மானங்கள் இதோ
அதிமுக தான் கூட்டணிக்கு தலைமை... புதிய கட்சிகளை சேர்க்க இபிஎஸ்க்கு அதிகாரம்- 16 தீர்மானங்கள் இதோ
அன்புமணியா.? எல்.கே.சுதீஷா.? காலியாகும் மாநிலங்களவை பதவி- இபிஎஸ் எடுக்கப்போகும் முடிவு என்ன.?
அன்புமணியா.? எல்.கே.சுதீஷா.? காலியாகும் மாநிலங்களவை பதவி- இபிஎஸ் எடுக்கப்போகும் முடிவு என்ன.?
படிப்பிற்குப் பணம் ஒரு தடையல்ல! பிரதம மந்திரி 'யாசஸ்வி' கல்வி உதவித்தொகைக்கு விண்ணப்பிக்க இதுவே கடைசி சான்ஸ் !
படிப்பிற்குப் பணம் ஒரு தடையல்ல! பிரதம மந்திரி 'யாசஸ்வி' கல்வி உதவித்தொகைக்கு விண்ணப்பிக்க இதுவே கடைசி சான்ஸ் !
ABP Premium

வீடியோ

Kanchi Ekambareswarar Temple Kumbabishekam | காஞ்சி ஏகாம்பரநாதர் கோயில்மகா கும்பாபிஷேக விழா!
KN NEHRU ED | ’’உடனே FIR போடுங்க!’’நெருக்கும் அமலாக்கத்துறைசிக்கலில் K.N.நேரு?
பல்லத்தில் கவிழ்ந்த கார் ஒரே குடும்பத்தில் மூவர் பலிபதற வைக்கும் காட்சி | Villupuram Accident News
“என் கல்யாணம் நின்னுருச்சு” இது தான் காரணம்? ஸ்மிருதி மந்தனா பகீர் பதிவு | Palash Muchchal Smriti Mandhana Marriage Called Off
Sabareesan Meet Rahul | DEAL-ஐ முடித்த சபரீசன்! OK சொன்ன ராகுல்.. பிரவீன் சக்ரவர்த்தி அதிர்ச்சி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ரூ 750 மதிப்பிலான பொங்கல் பரிசு தொகுப்பு .! பொதுமக்களுக்கு குஷியான அறிவிப்பு
ரூ 750 மதிப்பிலான பொங்கல் பரிசு தொகுப்பு .! பொதுமக்களுக்கு குஷியான அறிவிப்பு
ADMK general committee meeting: அதிமுக தான் கூட்டணிக்கு தலைமை... புதிய கட்சிகளை சேர்க்க இபிஎஸ்க்கு அதிகாரம்- 16 தீர்மானங்கள் இதோ
அதிமுக தான் கூட்டணிக்கு தலைமை... புதிய கட்சிகளை சேர்க்க இபிஎஸ்க்கு அதிகாரம்- 16 தீர்மானங்கள் இதோ
அன்புமணியா.? எல்.கே.சுதீஷா.? காலியாகும் மாநிலங்களவை பதவி- இபிஎஸ் எடுக்கப்போகும் முடிவு என்ன.?
அன்புமணியா.? எல்.கே.சுதீஷா.? காலியாகும் மாநிலங்களவை பதவி- இபிஎஸ் எடுக்கப்போகும் முடிவு என்ன.?
படிப்பிற்குப் பணம் ஒரு தடையல்ல! பிரதம மந்திரி 'யாசஸ்வி' கல்வி உதவித்தொகைக்கு விண்ணப்பிக்க இதுவே கடைசி சான்ஸ் !
படிப்பிற்குப் பணம் ஒரு தடையல்ல! பிரதம மந்திரி 'யாசஸ்வி' கல்வி உதவித்தொகைக்கு விண்ணப்பிக்க இதுவே கடைசி சான்ஸ் !
வாச்சாத்தி வன்கொடுமை: கதையை முடிக்கச் சொன்னதே செங்கோட்டையன்தான் - மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் பகீர்
வாச்சாத்தி வன்கொடுமை: கதையை முடிக்கச் சொன்னதே செங்கோட்டையன்தான் - மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் பகீர்
Car Sale: மாருதியை பின்னுக்கு தள்ளி டாடா முதலிடம்.. ஆனால் மொத்த லிஸ்டில் யாரு கெத்து? நவம்பர் கார் விற்பனை
Car Sale: மாருதியை பின்னுக்கு தள்ளி டாடா முதலிடம்.. ஆனால் மொத்த லிஸ்டில் யாரு கெத்து? நவம்பர் கார் விற்பனை
பள்ளிகளில் அரையாண்டுத் தேர்வு ஆரம்பம்; வினாத்தாளை புகைப்படம் எடுக்கத்தடை- விடுமுறை எப்போது?
பள்ளிகளில் அரையாண்டுத் தேர்வு ஆரம்பம்; வினாத்தாளை புகைப்படம் எடுக்கத்தடை- விடுமுறை எப்போது?
Pongal Gift: மக்களே! ரூபாய் 3 ஆயிரம்.. பொங்கல் பரிசுத்தொகுப்புடன் வழங்க அரசு முடிவு?
Pongal Gift: மக்களே! ரூபாய் 3 ஆயிரம்.. பொங்கல் பரிசுத்தொகுப்புடன் வழங்க அரசு முடிவு?
Embed widget