Stock Market: ஏற்றத்துடன் நிறைவடைந்த இந்திய பங்குச்சந்தை; 620 புள்ளிகள் உயர்ந்த சென்செக்ஸ்!
Stock market today: இந்திய பங்குச்சந்தை இன்று மிகுந்த ஏற்றத்துடன் வர்த்தகத்தை நிறைவு செய்துள்ளது. இது முதலீட்டாளர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பங்குச்சந்தை நிலவரம்:
இந்திய பங்குச்சந்தை ஏற்றத்துடன் வர்த்தகத்தை நிறைவு செய்துள்ளது. மும்பை பங்குச்சந்தை குறியீடான சென்செக்ஸ் 620.73 அல்லது 0.80% புள்ளிகள் உயர்ந்து 78,674.25 ஆகவும், தேசிய பங்குச்சந்தை குறியீடான நிஃப்டி 147.50 அல்லது 0.62% புள்ளிகள் உயர்ந்து 23,868.80 ஆக வர்த்தகத்தை நிறைவு செய்துள்ளது.
சென்செக்ஸ், நிஃப்டி இரண்டும் ஏற்றத்துடன் வர்த்தகமாகி வரும் நிலையில், புதிய உச்சத்தை தொடும் வாய்ப்பிருக்கிறது.
இந்த வாரம் தொடக்கத்தில் முதல் நாளில் பங்குச்சந்தை ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்டது. பின்னர், நேற்றைய வர்த்த நேர முடிவில் சென்செக்ஸ் 769 புள்ளிகள் உயர்ந்து 78 ஆயிரத்தை கடந்து வரலாற்று சாதனை படைத்தது. இன்றைய வர்த்தக நேர தொடக்கத்தில் இருந்தே ஏற்றத்தை பதிவு செய்தது.
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், அல்ட்ராடெக் சிமெண்ட், பாரதி ஏர்டெல்,ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கி, க்ரேசியம் இண்டஸ்ட்ரீஸ் உள்ளிட்ட நிறுவனங்கள் லாபத்தை பதிவு செய்துள்ளது. கடந்த மூன்று நாட்களாக பங்குச்சந்தை ஏற்றத்துடன் வர்த்தகமாகி வருவது முதலீட்டாளார்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. 79 ஆயிரம் புள்ளிகளை சென்செக்ஸ் கடக்கும் என்றும் நிஃப்டி 24 ஆயிரம் புள்ளிகளை தாண்டும் என்று எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
சுமார் 1634 பங்குகள் ஏற்றத்துடன் நிறைவடைந்தன. 1763 பங்குகள் சரிவுடன் நிறைவடைந்தன, மேலும் 85 பங்குகள் மாறாமல் இருந்தன.
வங்கி பங்குகள்:
264. 50 புள்ளிகள் உயர்ந்த Bank Nifty 52,870. 50 புள்ளிகளை கடந்து வர்த்தகமாகியது.
லாபம் - நஷ்டத்துடன் வர்த்தகமான நிறுவனங்கள்:
ரிலையன்ஸ், பாரதி ஏர்டெல், அல்ட்ராடெக் சிமெண்ட், ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கி, க்ரேசியம், பிரிட்டானியா, பஜாஜ் ஃபினான்ஸ், என்.டி.பி.சி., ஆக்ஸிஸ் வங்கி, சன் பார்மா,கோடாக் மஹிந்திரா, அதானி போர்ட்ஸ்ம் நெஸ்லே,மாருதி சுசூகி, டி.சி.எஸ்., எஸ்.பி.ஐ., லார்சம், ஏசியன் பெயிண்ட்ஸ், இந்தஸ்லேண்ட் வங்கி, ஐ.டி.சி. டிவிஸ் லேப்ஸ் ஆகிய நிறுவனங்களின் பங்குகள் லாபத்துடன் வர்த்தகமாகின.
அப்பல்லோ மருத்துவமனை, பஜாஜ் ஆட்டோ, டாடா ஸ்டீல், ஹிண்டால்கோ, சிப்ளா, ஜெ.எஸ்.டபுள்யூ ஸ்டீஸ், ஹீரோ மோட்டர்கார்ப், டைட்டன் கம்பெனி, எஸ்.பி.ஐ. லைஃப் இன்சுரா, ஈச்சர் மோட்டர்ஸ், டாடா மோட்டர்ஸ், விர்போ, பவர்கிரிட் கார்ப், டாக்டர் ரெட்டிஸ் லேப்ஸ், கோல் இந்தியா, இன்ஃபோசிஸ், அதானி எண்டர்பிரைசர்ஸ்ஆகிய நிறுவனங்கள் நஷ்டத்துடன் வர்த்தகமாகின.
கவனிக்க வேண்டிய நிறுவனங்களின் ஐ.பி.ஓ.
Allied Blenders and Distillers
விஸ்கி உற்பத்தில் செய்யும் நிறுவனமாக Allied Blenders and Distiller ரூ.1,500 கோடி மதிப்பிலான ஐ.பி.ஓ. வழங்குகிறது. ரூ.267 - ரூ281 வரையில் ஒரு பங்கில் விலையாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஜூன் 27-ல் இதை சப்ஸ்க்ரைப் செய்ய கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
Vraj Iron and Steel IPO
சத்தீஸ்கர் மாநிலத்தை தலைமையிடமான கொண்டு செயல்படும் டி.எம்.டி. உற்பத்தி செய்யும் நிறுவனத்தில் ரூ.171 கோடி பப்ளிக் இஷ்யூ ஜூன் 26-ம் தேதி சப்ஸ்க்ரிப்சன் செய்ய விண்ணப்பிக்கலாம். இது ஜூன் 28-ம் தேதி முடிவடைகிறது. ரூ.195 - ரூ.207 ஒரு பங்கு விலையாக உள்ளது.