Share Market: முதல்முறையாக 67 ஆயிரம் புள்ளிகள்.. முதலீட்டாளர்களுக்கு ஜாக்பாட்! உச்சத்தில் இந்திய பங்குச்சந்தை!
Stock Market Update:இந்திய பங்குச்சந்தை ஏற்றத்துடன் முடிவடைந்துள்ளது.
Share Market Closing Bell: இந்திய பங்குச்சந்தை கடந்த சில நாட்களாக ஏற்றத்தில் இருந்து வந்த நிலையில் முதல் முறையாக மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் 67 ஆயிரம் புள்ளிகளை தாண்டியுள்ளது.
வர்த்த நேர முடிவில் மும்பை பங்குச் சந்தை குறியீடான சென்செக்ஸ் 302.30 அல்லது 0.45% புள்ளிகள் அதிகரித்து 67,097.44 ஆகவும், தேசிய பங்குச்சந்தை குறியீடான நிஃப்டி 83.90 அல்லது 0.42% புள்ளிகள் உயர்ந்து 19,833.15 புள்ளிகளாகவும் வர்த்தகமாகின.
Bull run continues: Sensex ends above 67,000-mark, Nifty at new closing peak of 19,833.15https://t.co/HrDQOqmnc2 pic.twitter.com/7qVEdmUU5x
— Press Trust of India (@PTI_News) July 19, 2023
இந்திய பங்குச்சந்தை கடந்த சில நாட்களாக ஏற்றத்தில் இருந்து வந்த நிலையில் முதன் முறையாக மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் 67 ஆயிரம் புள்ளிகளை தாண்டியது முதலீட்டாளர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஒரு வாரமாக முதலீட்டாளர்கள், வெளிநாட்டில் இருந்து முதலீடுகள் அதிகம் வருவதால், இன்றைய வர்த்தக முடிவில் சென்செக்ஸ் 67 ஆயிரம் புள்ளிகளில் வர்த்தகமாகி உள்ளது.
லாபத்துடன் வர்த்தகமாகும் நிறுவனங்கள்:
பஜார்ஜ் ஃபினான்ஸ், என்.டி.பி.சி, அல்ட்ரா டெக் சிமெண்ட், பஜார்ஜ் பின்சர்வ், எஸ்.பி.ஐ, பி.பி.சி.எல், டாடா மோட்டார்ஸ், சன் பார்மா, ஐடிசி, கோடக் மகேந்திரா, லார்சன், ரிலையன்ஸ்., எம்.எம், எச்.டி.எஃப்.சி வங்கி, சிப்ளா, கிராசிம், அதானி போர்ட்ஸ், எச்.டி.எஃப்.சி லைஃப், அப்போலோ மருத்துவமனை, விப்ரோ, எச்.சி.எல் டெக், கோல் இந்தியா, டாடா ஸ்டீல், பிரிட்டானியா, ஆக்ஸிஸ் வங்கி உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் லாபத்தில் வர்த்தகமாகி வருகிறது.
நஷ்டத்துடன் வர்த்தகமாகும் நிறுவனங்கள்:
ஹின்டல்கோ, டி.சி.எஸ், பஜார்ஜ் ஆட்டோ, ஹிரோ மோட்டோகோர்ப், மாருதி சுசிகி, பாரதி ஏர்டெல், டெக் மகேந்திரா, ஐ.சி.ஐ.சி.ஐ வங்கி, டைட்டன் கம்பெனி, நெஸ்டீலே, ஓ.என்.ஜி.சி, யு.பி.எல், இன்போசிஸ் உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் நஷ்டத்தில் வர்த்தகமாகிறது.
மேலும் படிக்க