Share Market : இரண்டாம் நாளாக அடிவாங்கும் இந்திய பங்குச்சந்தை... சென்செக்ஸ் 200 புள்ளிகளுக்கு மேல் சரிவு... அதிர்ச்சியில் முதலீட்டாளர்கள்...!
இந்திய பங்குச்சந்தை சரிவுடன் தொடங்கியிருப்பது முதலீட்டாளர்கள் மத்தியில் வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.
Share Market : இன்று காலை தொடங்கிய இந்திய பங்குச்சந்தையானது சரிவுடன் தொடங்கி வர்த்தகமாகி வருகிறது.
மும்பை பங்குச்சந்தை குறியீடான சென்செக்ஸ் 245.97 அல்லது 0.40 % புள்ளிகள் குறைந்து 61,686.50 ஆகவும், தேசிய பங்குச் சந்தை குறியீடான நிஃப்டி 66.50 அல்லது 0.36% புள்ளிகள் குறைந்து 18,220.00 புள்ளிகளாகவும் வர்த்தகமாகி வருகிறது. வாரத்தின் இரண்டவது நாளாக இந்திய பங்குச்சந்தை பலத்த அடிவாங்கி வருவது முதலீட்டாளர்கள் மத்தியில் வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.
லாபம்-நஷ்டம்
ஹிரோ மோட்டோகோர்ப், பிபிசிஎல், சிப்ளா, கிராசிம், அல்ட்ரா டெக் சிமெண்ட், எஸ்பிஐ, நெஸ்டீலே, எம்எம், பிரிட்டானியா, பஜாஜ் ஆட்டோ, கோல் இந்தியா, ஐடிசி, லார்சன், ஆக்சிஸ் வங்கி, லார்சன், மாருதி சுசிகி, சன் பார்மா உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் ஏற்றம் கண்டுள்ளன.
எச்சிஎல் டெக், இன்போசிஸ், கோடக் மகேந்திரா, டைட்டன் கம்பெணி, அப்போலோ மருத்துவமனை, விப்ரோ, டெக் மகேந்திரா, டிசிஎஸ், ஓஎன்ஜிசி, ஹின்டல்கோ, என்டிபிசி, டாடா ஸ்டீல், ஐசிஐசிஐ வங்கி, பவர் கிரிட் கார்ப், பாரதி ஏர்டெல் உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் சரிவை கண்டுள்ளன.