Share Market: வாரத்தின் முதல் நாளே 800 புள்ளிகளை தாண்டிய சென்செக்ஸ்...ஏற்றத்தில் ஐ.டி, வங்கி நிறுவனங்கள்
இன்றைய நாள் முடிவில், சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி ஆகிய இரண்டு புள்ளிகளும் ஏற்றத்துடன் முடிவடைந்தது, முதலீட்டாளர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
இந்த வாரத்தின் முதல் நாளான இன்று, இந்திய பங்கு சந்தை ஏற்றத்துடன் தொடங்கி ஏற்றத்துடன் முடிவடைந்தது.
இன்றைய நாள் முடிவில், இந்திய பங்கு சந்தை ஏற்றத்துடன் தொடங்கி வர்த்தமாகி வருகிறது. மும்பை சந்தை குறியீடான சென்செக்ஸ், 846.94 புள்ளிகள் உயர்ந்து 60, 747.31 ஆகவும், தேசிய பங்குச் சந்தை குறியீடான நிஃப்டி 241.75 புள்ளிகள் உயர்ந்து 18,101.20 புள்ளிகளாகவும் வர்த்தகமானது.
Sensex rallies 846.94 points to end at 60,747.31; Nifty jumps 241.75 points to 18,101.20
— Press Trust of India (@PTI_News) January 9, 2023
இன்றைய காலை தொடக்கத்தில் மும்பை சந்தை குறியீடான சென்செக்ஸ், 360.17 புள்ளிகள் உயர்ந்து 60,260.54 ஆகவும், தேசிய பங்குச் சந்தை குறியீடான நிஃப்டி 113.90 புள்ளிகள் உயர்ந்து 17,973.35 புள்ளிகளாகவும் வர்த்தகமாகி வருகிறது.
லாபம் - நஷ்டம்:
மும்பை பங்கு சந்தையில் உள்ள 30 நிறுவனஙகளில், 27 நிறுவனங்கள் ஏற்றத்திடனும் 3 நிறுவனங்கள் சரிவிடனும் காணப்பட்டன.
ஹின்டல்கோ, டாடா ஸ்டீல், டெக் மகேந்திரா, டாடா மோட்டார்ஸ், ஓஎன்ஜிசி, விப்ரோ, பாரதி ஏர்டெல், டிசிஎஸ், எம்எம், பிபிசிஎல், அதாணி எட்டர்பிரிஸ், லார்சன், அப்போலோ மருத்துவமனை, அல்ட்ரா டெக் சிமெண்ட், சிப்ளா, ஐடிசி, இன்போசிஸ், என்டிபிசி, ஹீரோ மோட்டோகார்ப், எச்டிஎஃப்சி, கிராசிம், பஜாஜ் ஆட்டோ, கோடக் மகேந்திரா, நெஸ்ட்லே, பிரிட்டானியா உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் ஏற்றம் கண்டுள்ளன.
டைட்டான் கம்பெனி, மாருதி சுசுகி, பஜாஜ் ஃபின்சர்வ் உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் சரிவை கண்டுள்ளன.
முதல்நாளே ஏற்றம்:
ஆண்டின் முதல் வாரத்தில் அதாவது கடந்த வாரம் பங்குச்சந்தையான பலத்த அடிவாங்கியது. இதனால் முதலீட்டாளர்கள் மத்தியில் கவலையை ஏற்படுத்தியிருந்தது. ஆண்டின் முதல் வாரத்தில் பங்குச்சந்தையில் சென்செக்ஸ், நிப்ஃடி 2 சதவீதம் சரிந்ததாக கூறப்படுகிறது. அடுத்த வாரமும் இந்த நிலையே நீடிக்கும் என்ற பயத்திலே முதலீட்டாளர்கள் இருந்தனர்.
ஆனால், வாரத்தில் முதல் நாளான இன்று பங்குச் சந்தையில் சென்செக்ஸ் 846.94 புள்ளிகளும், நிப்ஃடி 241.75 புள்ளிகளும் உயர்ந்துள்ளதது முதலீட்டாளர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
ரூபாய் மதிப்பு:
Rupee gains 29 paise to close at 82.37 (provisional) against US dollar
— Press Trust of India (@PTI_News) January 9, 2023
அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பானது, 29 காசுகள் அதிகரித்து 82.37 ஆகவுள்ளதாக பிடிஐ செய்தி நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது.
தொடர்ந்து படிக்க: Gold, Silver Price Today : அதிரவைத்த விலை நிலவரம்.. ரூ. 42 ஆயிரத்தை தொட்ட தங்கம் விலை; இன்றைய நிலை இதுதான்..