Rupee Hits Record Low:இந்திய ரூபாய் மதிப்பு கடும் வீழ்ச்சி; இன்னும் குறைய வாய்ப்பு - நிபுணர்கள் சொல்வது என்ன?
Rupee Hits Record Low: இந்திய ரூபாயின் மதிப்பு ஒரே நாளில் கடுமையாக வீழ்ச்சியடைந்துள்ளது.

Rupee Hits Record Low: அமெரிக்கா டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத அளவு சரிந்துள்ளது.
ரூபாய் மதிப்பு வீழ்ச்சி - காரணம் என்ன?'
'Dollar index' இரண்டு ஆண்டுகளில் இல்லாத அளவு 109.72 - 0.22 சதவீதம் உயர்ந்துள்ளது. அமெரிக்காவின் வேலைவாய்ப்பு விகிதம் எதிர்பார்த்ததைவிட அதிகரித்தது, பெடரல் ரிசர்வ் வட்டி விகித குறைப்பு அறிவிப்பு வெளியாவதில் தாமதம் ஆகியவை டாலர் மதிப்பை உயர்த்தியுள்ளது. கச்சா எண்ணெய் விலையையும் அதிகரித்திருக்கிறது.
இந்திய சந்தைகளில் ‘Foreign institutional investors (FIIs)’ தொடர்ந்து முதலீடுகளை விற்பனை செய்வது வருவதும் இதற்கு காரணமாக சொல்லப்படுகிறது. ஜனவரி 10,2025-ம் தேதி ரூ.2,254.68 கோடி மதிப்பிலான பங்குகளை விற்பனை செய்துள்ளனர். உலக அளவில் நிலவும் பொருளாதார மந்த நிலை, அமெரிக்க பொருளாதார நிலவரம் பற்றி தரவுகள் வெளியாகியுள்ளது, அமெரிக்க அதிபராக டோனால்டு ட்ரம்ப் பதவியேற்க இருப்பது உள்ளிட்ட காரணங்களால் டாலர் மதிப்பு உயர்ந்துள்ளதாக பொருளாதார வல்லுநர்கள் தெரிவிக்குன்றனர்.
ஜனவரி 3-ம் தேதி வரையிலான வாரத்தில் India’s forex reserves மதிப்பு $5.693 பில்லியன் - $634.585 பில்லியன் குறைந்தது ரூபாயின் மதிப்பின் சரிவிற்கு காரணம். இந்திய ரூபாயின் மதிப்பு 85.80–86.50 என்ற ரேஞ்ஜில் இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
ரூபாய் மதிப்பு - எப்படி இருக்கும்?
அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு தொடர்ந்து சரிய வாய்ப்பு இருப்பதாக ‘Nirmal Bang Institutional Equities’ நிறுவனம் தெரிவித்துள்ளது. டோனால்டு டிரம்ப் டாலர் மதிப்பை உயர்த்துவதாக தெரிவித்திருந்தார்,. 2025 - 2026 நிதியாண்டில் ரூபாயின் மதிப்பு 88 ஆக இருக்கலாம் என்று கணிக்கப்பட்டுள்ளது. தற்போதுள்ள சூழல் அடிப்படையில் மார்ச் மாத இறுதிக்குள் ரூபாய் மதிப்பு 87 ஆக குறையலாம் என்று வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.
இந்திய ரூபாய் மதிப்பு பிப்ரவரி, 6, 2023-ல் 68 பைசா சரிந்தது. இன்றைய வர்த்தக நேரத்தில் 58 பைசா அல்லது 0.67% அளவு சரிந்துள்ளது. இரண்டு ஆண்டுகளில் இல்லாத அளவு ரூபாய் மதிப்பு சரிந்துள்ளது. 2024, செப்டம்பர், 27-ம் வாரத்தில் ரிசர்வ் வங்கியின் foreign exchange reserves $704.88 பில்லியன் உயர்ந்து சாதனை படைத்தது. ஆனால், அதன்பிறகு $70 பில்லியன் சரிந்தது. 2024, டிசம்பர், 19-ல் இந்திய ரூபாய் மதிப்பு 85-க்கும் கீழ் குறைந்தது. ஒரு மதாத்திற்குள் வரலாறு காணாத அளவு குறைந்துள்ளது. ரூபாய் மதிப்பு ரூ.1.60 அளவுக்கு குறைந்துள்ளது. அந்நிய முதலீட்டாளர்கள் தொடர்ந்து பங்குகளை விற்பனை செய்து வருவது டாலர் மதிப்பை அதிகரித்துள்ளதாக வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர். அமெரிக்க தேர்தல் அறிவிப்பு, முடிவுகள் வெளியானதில் இருந்து டாலர் மதிப்பு உயர்ந்து வருகிறது. அமெரிக்க அதிபராக டொனால்டு ட்ரம் ஜனவரி,20-, தேதி பதவி ஏற்கிறார். அதனால், மார்ச் மாதம் வரையில் ரூபாய் மதிப்பு தொடர்ந்து சரிவை சந்திக்கலாம் என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.





















