புதிய தொழிலில் கால் பதிக்கும் ரிலையன்ஸ்...உலகின் புகழ்பெற்ற நிறுவனத்துடன் கூட்டணி
ரிலையன்ஸ் பிராண்ட்ஸ் லிமிடெட் (ஆர்பிஎல்) என்ற பெயரில், பெரிய நகரங்களில் தொடங்கி நாடு முழுவதும் சாண்ட்விச் மற்றும் காபி ஷாப் தொடங்கப்பட உள்ளது.
சர்வதேச அளவில் புகழ்பெற்று விளங்கும் பிரிட்டன் நாட்டின் சாண்ட்விச் ஷாப்பான Pret A Manger நிறுவனத்தை இந்தியாவில் தொடங்க ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் அந்நிறுவனத்துடன் கைகோர்த்துள்ளது. வளர்ச்சி அடைந்து வரும் உணவு மற்றும் பானத் துறையில் கால் பதிக்க முடிவு செய்துள்ளது ரிலையன்ஸ்.
Reliance to launch British sandwich outlet Pret A Manger in India https://t.co/bVqsOfxIuI pic.twitter.com/K0PnWgnPKI
— Reuters (@Reuters) June 30, 2022
ரிலையன்ஸ் பிராண்ட்ஸ் லிமிடெட் (ஆர்பிஎல்) என்ற பெயரில், பெரிய நகரங்களில் தொடங்கி நாடு முழுவதும் சாண்ட்விச் மற்றும் காபி ஷாப் தொடங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
வரும் 2023ஆம் ஆண்டு, மார்ச் மாதத்திற்கு முன்பு இந்தியாவின் வர்த்தக தலைநகரான மும்பையில் முதல் Pret A Manger ஷாப் தொடங்கப்படும் தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து ராய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
Pret A Manger plans to expand into India via an agreement with Reliance Brands, in what the UK sandwich chain described as its “most ambitious global franchise partnership” https://t.co/R4uoX6Ol8W
— Bloomberg (@business) June 30, 2022
மூன்றே ஆண்டுகளில், Pret நிறுவனத்தின் முதல் மூன்று சந்தைகளில் ஒன்றாக இந்தியா மாறும் என அந்நிறுவனம் எதிர்பார்க்கிறது. இதுகுறித்து அதிகாரப்பூர்வ தகவல் இன்னும் வெளியாகவில்லை.
Pret நிறுவனம், முதலீட்டு குழுமமான ஜேஏபி மற்றும் நிறுவனர் சின்க்ளேர் பீச்சம் ஆகியோருக்கு சொந்தமாக உள்ளது. இந்தியாவின் மிகப் பெரிய பணக்காரர்களில் ஒருவரான முகேஷ் அம்பானியால் நடத்தப்படும், ரிலையன்ஸ், ரிலையன்ஸ் பிராண்ட்ஸ் லிமிடெட் மூலம், ஏற்கனவே உலகளாவிய ஆடம்பர பிராண்டுகளான புர்பெர்ரி மற்றும் ஜிம்மி சூ போன்ற நிறுவனங்களுடன் கைகோர்த்துள்ளது.
Oh yay. Pret a Manger coming to India! pic.twitter.com/kNiZkQDgRk
— Chandra R. Srikanth (@chandrarsrikant) June 30, 2022
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்