மேலும் அறிய

கடனை திரும்ப வாங்க தொந்தரவு பண்ணக்கூடாது.. வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி புதிய உத்தரவு..

சில நேரங்களில் கடன் பெற்ற நபர்கள் மீது தாக்குதல், வீட்டு பொருட்களை சூறையாடுதல், வாகனங்களை தூக்குவது, வீட்டிற்கு பூட்டுப் போடுவது போன்ற மோசமான செயல்களில் சம்பந்தப்பட்ட நிதி நிறுவனம் அல்லது பணம் கொடுக்கும் நபர்கள் ஈடுபடுகின்றனர்.

மாதத் தவணைகளைத் தவறவிடுபவர்கள் கடன் வாங்கியவர்களால் துன்புறுத்தப்படாமல் இருப்பதை தடுக்க இந்திய ரிசர்வ் வங்கி புதிய விதிகளை வெளியிட்டுள்ளது. இதன் கடன் வாங்கியவர்கள் சற்று நிம்மதியடைந்துள்ளனர். 

கடன் வாங்குவதும், வழங்குவதும் என்பது நம் சமூகத்தில் ஊறிப்போன ஒரு விஷயமாக உள்ளது. தனி நபர் கடன், வீட்டுக்கடன், கார், நகை என பல வகையான கடன்கள் வழங்கப்படுகிறது. அதனைத் தவிர தனி நபர்களும், தனியார் நிதி நிறுவனங்களும் கடன் வழங்குகிறார்கள். வாங்கும்போது அனைத்து விதிகளையும் சரியாக பின்பற்றுவேன் என சொல்லும் நபர்களால் சில நேரங்களில் மாதத்தவணை அல்லது கடனை குறிப்பிட்ட நேரத்தில் திரும்ப செலுத்த முடியாமல் போகிறது. 

இதனால் சில நேரங்களில் கடன் பெற்ற நபர்கள் மீது தாக்குதல், வீட்டு பொருட்களை சூறையாடுதல், வாகனங்களை தூக்குவது, வீட்டிற்கு பூட்டுப் போடுவது போன்ற மோசமான செயல்களில் சம்பந்தப்பட்ட நிதி நிறுவனம் அல்லது பணம் கொடுக்கும் நபர்கள் ஈடுபடுகின்றனர். இது காவல்துறை, நீதிமன்றம் வரை சட்ட பிரச்னையாகவும் செல்கிறது. அதேசமயம் தற்கொலை போன்ற விபரீத முடிவுக்கு செல்லும் சூழலும் உருவாகிறது. இதனை தடுக்கும் பொருட்டு ரிசர்வ் வங்கி சட்டமியற்றி உள்ளது. 

இதில் வங்கிகளும், கடன் வழங்குபவர்களும், கடன் வாங்கியவர்களை எவ்வாறு தொடர்புகொள்வது, கடன் வாங்க செல்லும் முகவர்கள் என்ன கூறலாம், எப்போது அழைக்கலாம் மற்றும் களப் பயணங்களை எவ்வாறு மேற்கொள்வது என்பன போன்றவற்றில் கடுமையான விதிகளைப் பின்பற்ற வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விதிகள் ஜனவரி 1, 2027 முதல் அமலுக்கு வரும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. 

வங்கிகளும், கடன் பெற செல்பவர்களும்  காலை 8 மணி முதல் மாலை 7 மணி வரை மட்டுமே கடனாளிகளைத் தொடர்பு கொள்ளலாம். இந்த நேரங்களுக்கு வெளியே அழைப்பதோ அல்லது சந்திப்பதோ கடன் பெற்றவர்கள் கோரிக்கை விடுத்திருந்தாலோ அல்லது அனுமதி அளித்திருந்தாலோ மட்டுமே அனுமதிக்கப்படும்.

துக்க நிகழ்வு, மருத்துவ அவசரநிலை அல்லது திருமண விழா போன்ற குடும்ப நிகழ்வுகளின் போது கடன் வாங்கியவர்களைத் தொடர்புகொள்வதைத் தவிர்க்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் தகாத அல்லது மிரட்டும் வகையிலான வார்த்தைகளைப் பயன்படுத்தக்கூடாது. அடையாளம் தெரியாத அல்லது அச்சுறுத்தும் அழைப்புகளைச் செய்யக்கூடாது. கடன் வாங்கியவர்களைத் திரும்பத் திரும்பத் தொடர்பு கொள்ளவோ , அவர்களைப் பொதுவெளியில் அவமானப்படுத்தவோ அல்லது அவர்களின் குடும்பம், சொத்துக்கள் அல்லது நற்பெயருக்கு அச்சுறுத்தல் விடுக்கவோ கூடாது எனவும் கூறப்பட்டுள்ளது. மேலும் சமூக ஊடகங்களில் கடன் பெற்றவர்கள் பற்றி எந்தவொரு தகவலும் பகிரக்கூடாது. 

கடன் தொகை, வட்டி என எது வாங்க வருவதாக இருந்தாலும் ஒருநாள் முன்பே தெரிவிக்க வேண்டும். எங்கு வர வேண்டும் என்பதையும் கடன் பெற்றவர்கள் தான் சொல்ல வேண்டும். கடன் வாங்கியவர் தேர்ந்தெடுக்கப்பட்ட இடத்திற்கு மீண்டும் மீண்டும் வராமல் தவறினால் ஊழியர் கடன் வாங்கியவரின் வீட்டிற்கோ அல்லது பணியிடத்திற்கோ நேரில் செல்லலாம். கடனைப் பெற செல்லும் ஊழியர்கள் அடையாள ஆவணங்களை கையில் வைத்திருக்க வேண்டும் எனவும் ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. 

Advertisement

தலைப்பு செய்திகள்

டிஜிட்டல் அணுகலை உள்ளடக்கிய வளர்ச்சியுடன் இணைக்கும் ரிலையன்ஸின் சமூக நலன், AI Course
டிஜிட்டல் அணுகலை உள்ளடக்கிய வளர்ச்சியுடன் இணைக்கும் ரிலையன்ஸின் சமூக நலன், AI Course
சராசரி இந்தியர்களையும் பங்குச் சந்தை பக்கம் திருப்பிய திருபாய் அம்பானி..! 1997ல் ரிலையன்ஸ் குழுமத்தின் IPO
சராசரி இந்தியர்களையும் பங்குச் சந்தை பக்கம் திருப்பிய திருபாய் அம்பானி..! 1997ல் ரிலையன்ஸ் குழுமத்தின் IPO
DA Hike: மத்திய அரசு ஊழியர்கள், ஓய்வூதியதாரர்களுக்கு சூப்பர் செய்தி! விரைவில் காத்திருக்கும் தீபாவளி பரிசு?
DA Hike: மத்திய அரசு ஊழியர்கள், ஓய்வூதியதாரர்களுக்கு சூப்பர் செய்தி! விரைவில் காத்திருக்கும் தீபாவளி பரிசு?
எதிர்பாராத ட்விஸ்ட்.. தாறுமாறா குறைந்த தங்கம் விலை.! நகை கடைகளில் குவிந்த இல்லத்தரசிகள்!
எதிர்பாராத ட்விஸ்ட்.. தாறுமாறா குறைந்த தங்கம் விலை.! நகை கடைகளில் குவிந்த இல்லத்தரசிகள்!
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

Nepal Flood | அதிகாலையில் திடீர் வெள்ளம் அலறியடித்து ஓடிய மக்கள் நேபாளத்தில் மீண்டும் பேரதிர்ச்சி!
லவ் டார்ச்சர் கொடுத்த இளைஞர் இளம்பெண் விபரீத முடிவு அடித்தே கொன்ற உறவினர்கள்!
கோவிலுக்குள் பாலியல் தொல்லை சிறுமிக்கு நேர்ந்த கொடூரம் அதிர்ச்சியூட்டும் CCTV காட்சிகள்!
அன்று இந்தியாவுக்கு நெருக்கடி இன்று ரஷ்யாவுடன் டீல் அந்தர் பல்டி அடித்த ட்ரம்ப்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Rice: ரூ.30-க்கு அரிசி.. ரூ.130-க்கு துவரம்பருப்பு.. எங்கு கிடைக்கும்? தமிழ்நாடு அரசின் சூப்பர் அறிவிப்பு!
Rice: ரூ.30-க்கு அரிசி.. ரூ.130-க்கு துவரம்பருப்பு.. எங்கு கிடைக்கும்? தமிழ்நாடு அரசின் சூப்பர் அறிவிப்பு!
விஜய்யின் ரகசிய ஆந்திரப் பயணம்? துரைமுருகன் கேட்ட நறுக் கேள்வி... அலறும் தவெக!
விஜய்யின் ரகசிய ஆந்திரப் பயணம்? துரைமுருகன் கேட்ட நறுக் கேள்வி... அலறும் தவெக!
TASMAC: ரீல்ஸ் ஆட்சி நடத்தும் மிஸ்டர் விஜய்.. இதுதான் டாஸ்மாக் குறைக்கும் லட்சணமா? கீதா ஜீவன் கொந்தளிப்பு!
TASMAC: ரீல்ஸ் ஆட்சி நடத்தும் மிஸ்டர் விஜய்.. இதுதான் டாஸ்மாக் குறைக்கும் லட்சணமா? கீதா ஜீவன் கொந்தளிப்பு!
தொடங்கியது வடகிழக்கு பருவமழை.. எந்தெந்த மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை! லிஸ்ட் இதோ
தொடங்கியது வடகிழக்கு பருவமழை.. எந்தெந்த மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை! லிஸ்ட் இதோ
Thirumavalavan: ”தொகுதி மாறி நிற்க சொன்னேன், ஸ்டாலின் என் பேச்சை கேட்கவே இல்லை” SIR சதி - திருமாவளவன் அதிரடி
”தொகுதி மாறி நிற்க சொன்னேன், ஸ்டாலின் என் பேச்சை கேட்கவே இல்லை” SIR சதி - திருமாவளவன் அதிரடி
Actor Sarathkumar : ’தமிழக பாஜக தலைவராகிறார் நடிகர் சரத்குமார்?’ எல்.முருகனுக்கும் முக்கிய பொறுப்பு..!
Actor Sarathkumar : ’தமிழக பாஜக தலைவராகிறார் நடிகர் சரத்குமார்?’ எல்.முருகனுக்கும் முக்கிய பொறுப்பு..!
’100 கோடி ரூபாய் முறைகேடு வழக்கு’ முன் ஜாமீன் கோரினார் அன்பில் மகேஷ்..!
’100 கோடி ரூபாய் முறைகேடு வழக்கு’ முன் ஜாமீன் கோரினார் அன்பில் மகேஷ்..!
Jailer 2 Review: இரண்டாம் பாதியில் சொதப்பிய ஜெயிலர் 2? தாராளமாய் குவிந்த கேமியோக்கள்? ரஜினி படம் எப்படி?
இரண்டாம் பாதியில் சொதப்பிய ஜெயிலர் 2? தாராளமாய் குவிந்த கேமியோக்கள்? ரஜினி படம் எப்படி?
Embed widget