இனி யுபிஐ சேவைகளுக்கும் கட்டணம்.. வணிகர்கள் தலையில் இடியை இறக்கிய மத்திய அரசு!
எதிர்க்காலத்தில் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை எந்த மாதிரியான கட்டணம் விதிக்கலாம் என்பதை தீர்மானிக்கும் வகையிலான அனுமதியை இந்த சட்டம் வழங்குகிறது. உதாரணமாக ரூ.2000க்கு மேல் பணப்பரிவர்த்தனை செய்தால் இந்த கட்டணம் அமலாகும் என வைத்துக் கொள்ளலாம்.

UPI போன்ற டிஜிட்டல் பணப் பரிவர்த்தனைகளுக்கு வணிகர்களிடம் இருந்து கட்டணம் வசூலிக்க வங்கிகளுக்கும், பிற சேவை வழங்குநர்களுக்கும் அதிகாரம் வழங்கும் மசோதாவை திருத்தம் மேற்கொண்டு மக்களவையில் மத்திய அரசு நிறைவேற்றியுள்ளது.
இதன்மூலம் MDR எனப்படும் வணிகர் தள்ளுபடி விகிதத்தை மீண்டும் கொண்டு வருவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளது. UPI பரிவர்த்தனைகளுக்கு இதுவரை சேவை கட்டணம் வசூலிக்கப்படாத நிலையில் தற்போது விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இந்த மசோதா குரல் வாக்கெடுப்பு மூலம் மக்களவை அமளிக்கு மத்தியில் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இந்த சட்ட மசோதாவாது நுகர்வோர் மற்றும் சிறு வணிகங்களுக்கான டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை சேவைகளுக்கு ஒரு சிறிய கட்டணத்தை விதிப்பதையும், அதே நேரத்தில் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனையை இயக்கும் வங்கிகள், பணப்பரிவர்த்தனை சேவை வழங்கும் செயலிகள் மற்றும் பணப்பரிவர்த்தனை உள்கட்டமைப்பு நிறுவனங்களுக்கு ஒரு நிலையான வருவாய் மாதிரியை உறுதி செய்வதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.
உடனடியாக இந்த கட்டணம் நடைமுறைக்கு வராது என்றாலும் எதிர்க்காலத்தில் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை எந்த மாதிரியான கட்டணம் விதிக்கலாம் என்பதை தீர்மானிக்கும் வகையிலான அனுமதியை இந்த சட்டம் வழங்குகிறது. உதாரணமாக ரூ.2000க்கு மேல் பணப்பரிவர்த்தனை செய்தால் இந்த கட்டணம் அமலாகும் என வைத்துக் கொள்ளலாம். மானியச் செலவுகளைக் குறைக்கவும், நிதி ரீதியாக நிலையான ஒரு டிஜிட்டல் பணப்பரிவர்த்தனைச் சூழலை உருவாக்கவும் மத்திய அரசு முயற்சித்து வரும் நிலையில் இந்த நடவடிக்கை மிக முக்கியமான ஒன்றாகப் பார்க்கப்படுகிறது. இதனால் இதுவரை இலவசமாக வழங்கப்பட்டு வந்த யுபிஐ பணப்பரிவர்த்தனை விரைவில் முடிவுக்கு வரப்போகிறது.
இது எப்படி செயல்படும்?
இந்த கட்டணம் முழுக்க முழுக்க வணிகர்களால் செலுத்தப்பட வேண்டிய கட்டணம் ஆகும். இதனை வாடிக்கையாளர்களிடமிருந்து வசூலிக்கக்கூடாது என்பது விதியாகும். மொத்த பரிவர்த்தனை மதிப்பில் ஒரு குறிப்பிட்ட சதவீதம் ஒவ்வொரு மாதமும் கட்டணமாக வசூலிக்கப்படும். இது மிகப்பெரிய அளவில் பிசினஸ் செய்பவர்களுக்கு பேரிடியாக அமையும். காரணம் அனைத்து தரப்பு மக்களும் தற்போது யுபிஐ மூலம் பணம் செலுத்த தொடங்கியுள்ள நிலையில் இது தொடக்கத்தில் மிகப்பெரிய குழப்பத்தை ஏற்படுத்தும் என கணிக்கப்பட்டுள்ளது.
சமீபத்தில் நாடாளுமன்ற நிதிநிலைக்குழு, கூகுள்பே, ஃபோன்பே, பேடிஎம் போன்ற நிறுவனங்கள் UPI சேவைகளை முற்றிலும் இலவசமாக வழங்குவதால் தொழில்நுட்ப உள்கட்டமைப்பு மற்றும் இணையப் பாதுகாப்பை மேம்படுத்த அவர்களுக்குப் போதிய வருவாய் கிடைப்பதில்லை என கவலை தெரிவித்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
ட்ரெண்டிங் செய்திகள்






















