மேலும் அறிய

Indian currency: ரூபாய் நோட்டுகளில் இனி அப்துல் கலாம், ரவீந்தரநாத் தாகூர் படங்கள்: RBI பரிசீலனை

இனிமேல் அச்சிடப்படும் இந்திய ரூபாய் நோட்டுகளில் அப்துல்கலாம் மற்றும் ரவீந்தரநாத் படங்களோடு அச்சிட இந்திய ரிசர்வ் வங்கி பரிசீலனையில் ஈடுபட்டுள்ளது.

இனிமேல் அச்சிடப்படும் இந்திய ரூபாய் நோட்டுகளில் அப்துல்கலாம் மற்றும் ரவீந்தரநாத் படங்களோடு அச்சிட இந்திய ரிசர்வ் வங்கி பரிசீலனையில் ஈடுபட்டுள்ளது.

இந்திய ரூபாய் நோட்டுகளில் மாகாத்மா காந்தி அவர்களின்  படத்தினை அச்சிட்டு வெளியிடுவதைப்போல்  இனிவரும் காலாங்களில் புதிதாக அச்சிடப்படும் இந்திய ரூபாய் நோட்டுகளில் முன்னாள் இந்திய குடியரசுத் தலைவரும் ஏவுகணை நாயகனுமான டாக்டர் ஏ.பி.ஜே அப்துல் கலாம் மற்றும் இந்திய தேசிய கீதத்தினை எழுதியவரும் கவிதைக்காக நோபல் பரிசு பெற்றவருமான ரவீந்திரநாத் தாஹூர் அவர்களின் படங்களோடு இனி புதிதாக ரூபாய்  நோட்டுகளை அச்சிட இந்திய ரிசர்வ் வங்கியும் மத்திய நிதி அமைச்சகமும் பரிசீலனையில் ஈடுபட்டுவருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

அப்துல் கலாமும் ரவீந்தரநாத் தாஹூரும்

இனி புதிதாக அச்சிடப்படும் ரூபாய் நோட்டுகளில் மகாத்மா காந்தியின் படத்துடன்  டாக்டர் ஏ.பி.ஜே அப்துல் கலாம் மற்றும் ரவீந்திரநாத் தாஹூர் ஆகியோரின் படங்களை வாட்டர் மார்க் வடிவங்களில் அச்சிட, இந்திய  ரிசர்வ் வங்கியும், நிதி அமைச்சகத்தின் கீழ் உள்ள செக்யூரிட்டி பிரிண்டிங் அண்ட் மிண்டிங் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியாவும் (SPMCIL) இரண்டு தனித்தனி மாதிரி ரூபாய் நோட்டுகளை ஐஐடி டெல்லி எமரிட்டஸ் பேராசிரியர் திலிப் டி ஷஹானிக்கு அனுப்பியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஐஐடி டெல்லி எமரிட்டஸ் பேராசிரியர் திலிப் டி ஷஹானியிடம் கொடுக்கப்பட்டுள்ள மாதிரிகளில் அரசின் பாதுகாப்பு காரணிகளைப் பூர்த்தி செய்யும் ஏதாவது ஒன்றினை அரசிடம் ஒப்படைக்கும் படி மத்திய நிதி அமைச்சகம் அறிவுருத்தியுள்ளதாக கூறப்படுகிறது.

அமெரிக்காவைப் போல் இந்தியாவிலும்

அமெரிக்க டாலர்களில் ஜார்ஜ் வஷிங்டன், பெஞ்சமின் பிராங்க்ளின், தாமஸ் ஜெபர்சன், ஆண்ட்ரூ ஜாக்சன், அலெக்சாண்டர் ஹாமில்டன் மற்றும் ஆபிரகாம் லிங்கன் மற்றும் 19  நூற்றாண்டின் முக்கிய ஜனாதிபதிகளின் உருவப்படங்களோடு அச்சிடப்படுகின்றன. இதேபோல் இந்தியாவிலும் இந்திய நாட்டின் சுதந்திரத்திற்கும், சுதந்திர இந்தியாவின் வளர்ச்சிக்கும் தங்களின் வாழ்வினை அர்ப்பணித்த தலைவர்களான நேரு, அம்பேத்கர், பெரியார், நாராயண குரு, அய்யங்காளி, பட்டேல், பகத் சிங் போன்றோரின்  புகைப்படங்கள்  இனி புதிதாக அச்சிடப்படும் ரூபாய் நோட்டுகளில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.            

தற்போது வெளியாகியுள்ள தகவலால், படத்துடன்  டாக்டர் ஏ.பி.ஜே அப்துல் கலாம் தமிழகத்தினைச் சேர்ந்தவர் என்பதால் தமிழ் நாட்டிற்கு புதிய பெருமை சேரவுள்ளதாக தமிழக மக்கள் கருத்து தெரிவித்துள்ளனர். இனிவரும் காலங்களில் அச்சிடப்படும் புதிய ரூபாய் நோட்டுகளில் இருக்கப்போகும்  டாக்டர் ஏ.பி.ஜே அப்துல் கலாம் மற்றும் ரவீந்தரநாத் தாஹூரின் படங்கள் இடம் பெறுவதைப் பார்க்க மக்கள் ஆர்வமாக உள்ளனர்.  

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

ADMK: யார் அந்த சார்? சட்டசபைக்குள் சட்டைப் போராட்டம்! ஆட்டத்தை தொடங்கிய அ.தி.மு.க.!
ADMK: யார் அந்த சார்? சட்டசபைக்குள் சட்டைப் போராட்டம்! ஆட்டத்தை தொடங்கிய அ.தி.மு.க.!
'இந்திய அரசமைப்பும் தேசிய கீதமும் தமிழக சட்டப்பேரவையில் அவமதிப்பு’ ஆளுநர் பரபரப்பு குற்றச்சாட்டு..!
'இந்திய அரசமைப்பும் தேசிய கீதமும் தமிழக சட்டப்பேரவையில் அவமதிப்பு’ ஆளுநர் பரபரப்பு குற்றச்சாட்டு..!
உரையை வாசிக்காமல் பேரவையில் இருந்து வெளியேறினார் ஆளுநர் ஆர்.என்.ரவி..!
உரையை வாசிக்காமல் பேரவையில் இருந்து வெளியேறினார் ஆளுநர் ஆர்.என்.ரவி..!
TN Assembly Session LIVE: அரசியலமைப்பிற்கு எதிராக ஆளுநர் ஆர்.என்.ரவி செயல்படுகிறார் - அமைச்சர் துரைமுருகன் கண்டனம்
TN Assembly Session LIVE: அரசியலமைப்பிற்கு எதிராக ஆளுநர் ஆர்.என்.ரவி செயல்படுகிறார் - அமைச்சர் துரைமுருகன் கண்டனம்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

சு.வெங்கடேசனுக்கு நெஞ்சுவலி! PHONE போட்ட மூர்த்தி! HEALTH REPORTபொன்முடிக்கு செருப்பு மாட்டிவிட்ட நிர்வாகி! மஸ்தான் ரியாக்‌ஷன்ரெய்டில் சிக்கிய கோடிகள்! தலைவலியில் அண்ணாமலை! பற்றவைத்த ஆளுங்கட்சியினர்”அரியணை நோக்கி கனிமொழி” மகளிரணியின் சம்பவம்! ஷாக்கான திமுகவினர்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ADMK: யார் அந்த சார்? சட்டசபைக்குள் சட்டைப் போராட்டம்! ஆட்டத்தை தொடங்கிய அ.தி.மு.க.!
ADMK: யார் அந்த சார்? சட்டசபைக்குள் சட்டைப் போராட்டம்! ஆட்டத்தை தொடங்கிய அ.தி.மு.க.!
'இந்திய அரசமைப்பும் தேசிய கீதமும் தமிழக சட்டப்பேரவையில் அவமதிப்பு’ ஆளுநர் பரபரப்பு குற்றச்சாட்டு..!
'இந்திய அரசமைப்பும் தேசிய கீதமும் தமிழக சட்டப்பேரவையில் அவமதிப்பு’ ஆளுநர் பரபரப்பு குற்றச்சாட்டு..!
உரையை வாசிக்காமல் பேரவையில் இருந்து வெளியேறினார் ஆளுநர் ஆர்.என்.ரவி..!
உரையை வாசிக்காமல் பேரவையில் இருந்து வெளியேறினார் ஆளுநர் ஆர்.என்.ரவி..!
TN Assembly Session LIVE: அரசியலமைப்பிற்கு எதிராக ஆளுநர் ஆர்.என்.ரவி செயல்படுகிறார் - அமைச்சர் துரைமுருகன் கண்டனம்
TN Assembly Session LIVE: அரசியலமைப்பிற்கு எதிராக ஆளுநர் ஆர்.என்.ரவி செயல்படுகிறார் - அமைச்சர் துரைமுருகன் கண்டனம்
Gangai amaran : கங்கை அமரனுக்கு என்ன ஆச்சு! திடீரென மருத்துவமனையில் அனுமதி... அதிர்ச்சியில் திரையுலகம்
Gangai amaran : கங்கை அமரனுக்கு என்ன ஆச்சு! திடீரென மருத்துவமனையில் அனுமதி... அதிர்ச்சியில் திரையுலகம்
பயங்கர பிளானா இருக்கே! விசிக Mission ON.. அடுத்து கம்யூனிஸ்ட்களுக்கு ரூட்டு போடும் விஜய்!
பயங்கர பிளானா இருக்கே! விசிக Mission ON.. அடுத்து கம்யூனிஸ்ட்களுக்கு ரூட்டு போடும் விஜய்!
CPI-M: சிபிஎம் புதிய மாநில செயலாளராக பெ.சண்முகம் தேர்வு.! யார் இவர்?
சிபிஎம் புதிய மாநில செயலாளராக பெ.சண்முகம் தேர்வு.! யார் இவர்?
TN Assembly: இன்று தொடங்கும் சட்டசபை! என்ன செய்யப்போகிறார் ஆளுநர் ஆர்.என்.ரவி? இந்த முறையும் வாக் அவுட்டா?
TN Assembly: இன்று தொடங்கும் சட்டசபை! என்ன செய்யப்போகிறார் ஆளுநர் ஆர்.என்.ரவி? இந்த முறையும் வாக் அவுட்டா?
Embed widget