மேலும் அறிய

மீன்பிடி தடைகாலத்தில் படகுகளுக்கு முழு ஊரடங்கு; மீனவர்கள் கோரிக்கை !

மீன் பிடி தடைகாலத்திற்கு பிறகு வழக்கமான அளவு மீன்கள் கூட கிடைக்கவில்லை என ராமேஸ்வரம் மீனவர்கள் புலம்புகின்றனர்.

ஊரடங்கு காலத்தில் மீன் பிடி தடைக்காலம் நீடித்தும் மீன்கள் இனப்பெருக்கம் அதிகரிக்கவில்லை என மீனவர்கள் வருத்தம் தெரிக்கின்றனர். கடந்த ஏப்ரல் 14-ம் தேதி முதல் ஜூன் 15-ம் தேதி வரை மீன்பிடி தடைக்காலம் முடிந்தது. ஆனாலும் பல்வேறு காரணங்களால் இராமேஸ்வரம், மண்டபம், சோலியக்குடி, ஜெகதாபட்டினம், நாகப்பட்டினம் உள்ளிட்ட பல்வேறு பகுதி மீனவர்கள் அதிகளவு கடலுக்கு செல்லவில்லை. இந்நிலையில் நேற்று ஜூன் 30-ம் தேதி கடலுக்கு சென்ற மீனவர்கள் இன்று கரை திரும்பினர். இந்நிலையில்  மீன்கள், இறால்கள் அதிகளவு கிடைக்கவில்லை என தெரிவித்தனர்.

மீன்பிடி தடைகாலத்தில் படகுகளுக்கு முழு ஊரடங்கு; மீனவர்கள் கோரிக்கை !
 
 இது குறித்து இராமேஸ்வரத்தை சேர்ந்த அனைத்து விசைப்படகு மீனவர் சங்க செயலாளர் ஜெசுராஜிடம் கேட்டபோது.....," மத்திய அரசு உத்தரவுபடி மீன்பிடி தடைகாலம் முடிந்தும் விசைப்படகுகள் கடலுக்கு செல்லவில்லை.  கொரோனா அச்சம் காரணமாகவும், அதிகளவு  தடுப்பூசி போட்டுக் கொள்ளாத காரணத்தால் ஜூன்-30ல் தான் கடலுக்கே சென்றோம். அதிகளவு தடை காலம் இருந்த போதும் அதிகளவு மீன்கள் கிடைக்கவில்லை.  ஒவ்வொரு விசைப்படகுகளுக்கும் சுமார் 200 கிலோ முதல் 350 கிலோ இறாலும், 25 கிலோ முதல் 80 கிலோ வரை நண்டும், 40 கிலோ முதல் 200 கிலோ வரை கனவாவும் மட்டுமே கிடைத்தது. காரணம் மீன்பிடி தடைக்காலம் முழுமையாக வைக்கப்படுவதில்லை.
 
இலங்கை தொடுக்கும் கடல் அரசியல் : மீனவர் உயிருக்கு ஆபத்தா ?
 
விசைப்படகுகளுக்கு மட்டும் கட்டுபாடுகளை வைத்துவிட்டு நாட்டுப்படகுகளை அனுமதிக்கின்றனர். நாட்டுப் படகில் அதிக குதிரை திறன் கொண்ட எஞ்சின்களை பயன்படுத்தி மீன் பிடிக்கின்றனர். அதனால் ஒட்டுமொத்த இனப்பெருக்கமும் பாதிப்படைகிறது. கொரோனாவிற்கு எப்படி முழு ஊரடங்கு போட்டு கட்டுப்படுத்துகிறோமோ அதே போல் மீன்பிடி தடைகலாம் முழுமையாக்க வேண்டும். அது தான் அனைவருக்கும் ஆரோக்கியம். அதே போல்  டீசல் விலை உயர்வு எங்களுக்கு மிகப்பெரும் சவாலாக இருக்கின்றது. அதனை உடனடியாக குறைக்க வேண்டும். மேலும்  எக்ஸ்போர்ட் கம்பெனிகள் எங்களிடம் பொருட்களை விலை குறைவாக எடுக்கின்றனர். கெட்டு போகும் பொருள் என்பதால் வேறு வழியில்லாமல் விற்பனை செய்து விடுகிறோம். 4 கம்பெனிகள் சிண்டிகேட் அமைத்துக் கொண்டு விலை நிர்ணயம் செய்கின்றனர். எனவே அதனை நீக்கி அரசு நியாயமான விலை நிர்ணயம் செய்து நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்" என கேட்டுக்கொண்டார்.
பொதுவாக மீன்பிடி தடைகாலம் முடிந்து கடலுக்குச் செல்லும் மீனவர்கள், திரும்பும் போது படகு நிறைய மீன்களுடன் திரும்புவர். ஆனால் கடந்த சில ஆண்டுகளாக மீன்கள் கிடைப்பதில்லை. மாறாக மீன்குஞ்சுகள் கிடைக்கிறது. மீன்களின் இனப்பெருக்க காலம் மாறியதாகவே தெரிகிறது. 
 
 

தலைப்பு செய்திகள்

சென்னையில் பிளிப்கார்ட்டின் பிரம்மாண்ட திட்டம்! 1.30 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு... யார் யாருக்கெல்லாம் அதிர்ஷ்டம்?
சென்னையில் பிளிப்கார்ட்டின் பிரம்மாண்ட திட்டம்! 1.30 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு... யார் யாருக்கெல்லாம் அதிர்ஷ்டம்?
LIVE | Kerala Lottery Result Today (13.08.2026): கோடிகளை தாண்டி.. கேரளா காருண்யா பிளஸ் லாட்டரி குலுக்கல் முடிவுகள்
LIVE | Kerala Lottery Result Today (13.08.2026): கோடிகளை தாண்டி.. கேரளா காருண்யா பிளஸ் லாட்டரி குலுக்கல் முடிவுகள்
Gold and silver rate today : மீண்டும் உயர்ந்தது தங்கம் விலை.! ஒரு சவரன் இவ்வளவா.? இன்றைய தங்கம், வெள்ளி விலை நிலவரம் இதோ..
மீண்டும் உயர்ந்தது தங்கம் விலை.! ஒரு சவரன் இவ்வளவா.? இன்றைய தங்கம், வெள்ளி விலை நிலவரம் இதோ..
Vivo S2 Sales Begins: அசத்தலான அம்சங்களுடன் அறிமுகமான விவோ S2-ன் விற்பனை தொடக்கம்; மெகா பேட்டரி; விலை என்ன.?
அசத்தலான அம்சங்களுடன் அறிமுகமான விவோ S2-ன் விற்பனை தொடக்கம்; மெகா பேட்டரி; விலை என்ன.?

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் விஜய் பரபரப்பு கடிதம்! என்ன எழுதியிருக்காரு தெரியுமா?
CM Vijay: பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் விஜய் பரபரப்பு கடிதம்! என்ன எழுதியிருக்காரு தெரியுமா?
Tasmac Shop Holiday : மதுப்பிரியர்களுக்கு ஷாக் நியூஸ்.! தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிப்பு- எப்போ தெரியுமா.?
மதுப்பிரியர்களுக்கு ஷாக் நியூஸ்.! தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிப்பு- எப்போ தெரியுமா.?
ஒரு பக்கம் சூர்யாவின் விஸ்வநாத் அன் சன்ஸ்.. இன்னொரு பக்கம் விஷாலின் மகுடம்! நாளைக்கு எந்த படத்துக்கு போறீங்க?
ஒரு பக்கம் சூர்யாவின் விஸ்வநாத் அன் சன்ஸ்.. இன்னொரு பக்கம் விஷாலின் மகுடம்! நாளைக்கு எந்த படத்துக்கு போறீங்க?
சீர்காழி அருகே பரபரப்பு: மணல் குவாரியில் 40 அடி ஆழத்திற்கு மண் எடுக்க எதிர்ப்பு - பெண்கள் சாலைமறியல்! வட்டாட்சியரை முற்றுகையிட்டு காரசார வாக்குவாதம்..
சீர்காழி அருகே பரபரப்பு: மணல் குவாரியில் 40 அடி ஆழத்திற்கு மண் எடுக்க எதிர்ப்பு - பெண்கள் சாலைமறியல்! வட்டாட்சியரை முற்றுகையிட்டு காரசார வாக்குவாதம்..
CM Vijay: மத்திய அரசுக்கு திடீரென கடிதம் எழுதிய முதலமைச்சர் விஜய்! எதற்காக?
CM Vijay: மத்திய அரசுக்கு திடீரென கடிதம் எழுதிய முதலமைச்சர் விஜய்! எதற்காக?
இனி ஆபீஸில் உட்கார முடியாது... காட்டிற்குள் 7 நாட்கள் கட்டாய முகாம் – அதிகாரிகளுக்கு வனத்துறை செக்!
இனி ஆபீஸில் உட்கார முடியாது! காட்டிற்குள் 7 நாட்கள் கட்டாய முகாம்! அதிகாரிகளுக்கு வனத்துறை செக்!
"வாக்குறுதி என்ன ஆச்சு?" - 110 விதியில் அறிவிப்பு வருமா? முதல்வருக்குப் பகுதிநேர ஆசிரியர்கள் கோரிக்கை!
Vettri Investment Conclave: தொழில் முதலீடுகள் - எந்தெந்த மாவட்டங்களுக்கு எவ்வளவு நிதி? வேலை வாய்ப்புகள் - முழு விவரம்
தொழில் முதலீடுகள் - எந்தெந்த மாவட்டங்களுக்கு எவ்வளவு நிதி? வேலை வாய்ப்புகள் - முழு விவரம்
Embed widget