மேலும் அறிய

Petrol Diesel Price: மழை, வெயில், பனி... மாறி மாறி வரும் வானிலை.. மாற்றம் கண்டதா பெட்ரோல், டீசல் விலை..!

Petrol Diesel Price: இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம் குறித்து இந்த தொகுப்பில் காணலாம்

தமிழ்நாட்டில் தொடர்ந்து 247வது நாளாக பெட்ரோல், டீசல் விலை மாற்றமின்றி விற்பனையாகி வருவது வாகன ஓட்டிகள் இடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

கொரோனா வைரஸ் தொற்றால் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கால் பொதுமக்கள் கடந்த இரண்டு ஆண்டுகளாக அவதிப்பட்டு வந்த நிலையில், கடந்த 2021ஆம் ஆண்டு நவம்பர் 4 ஆம் தேதி, பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ. 5ம், டீசல் விலை ரூ. 10ம் மத்திய அரசால் குறைக்கப்பட்டது. அன்றைய தினம் தமிழ்நாட்டில் லிட்டர் பெட்ரோல் ரூ 101.40 க்கும் டீசல் விலை ரூ 91.43க்கும் விற்பனையானது. இதனைத் தொடர்ந்து ஐந்து மாநிலத் தேர்தல் நடைபெற்றதால் விலை உயர்த்தப்படாமல் இருந்தது. குஜராத் சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுக்கு பின்னர் பெட்ரோல் டீசல் விலையில் மாற்றம் ஏற்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அதன் பின்னரும் விலையில் எந்தவிதமான மாற்றமும் ஏற்படவில்லை. 

இன்றைய விலை

இதன் பின்னர் பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் கடந்த ஆண்டு மே மாதம் 22ஆம் தேதி மாற்றம் ஏற்பட்டது. ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூபாய்க்கு 8ம், டீசல் விலை ரூபாய்க்கு 6ம் கலால் வரி குறைப்பால் இறக்கம் கண்டது. இச்சூழலில் பெட்ரோல், டீசல் விலை 247ஆவது நாளாக தொடர்ந்து விலை மாற்றமின்றி விற்பனை செய்யப்படுகிறது.

அதன்படி இன்று (ஜனவரி.23) ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.102.63க்கும், டீசல் விலை லிட்டருக்கு 94.24 ரூபாய்க்கும் விற்பனையாகிறது. முன்னதாக எரிபொருள் விலை உயர்வால் பால், டீ, காய்கறிகள், இதர உணவுப் பொருள்களின் விலை ஏறியிருந்தது. இச்சூழலில், விலை மாற்றமின்றி பெட்ரோல், டீசல் விலை இருநூறு நாள்களை கடந்துள்ளது.  

எத்தனால் கலந்த பெட்ரோல்

கடந்த 2018ஆம் ஆண்டில் மத்திய அரசு அறிவித்த 'தேசிய உயிரி எரிபொருள் கொள்கை 2030ஆம் ஆண்டுக்குள் பெட்ரோலில் 20 விழுக்காடு எத்தனாலைக் கலந்து விற்க இலக்கு நிர்ணயித்திருந்தது. ஆனால், அந்த இலக்கு தற்போது ஐந்து ஆண்டுகளுக்கு முன்பாக 2025ஆம் ஆண்டு என மாற்றியமைக்கப்பட்டது.

 இருபது சதவீதம் எத்தனால் கலந்த பெட்ரோல் டிசம்பர் அல்லது ஜனவரி முதல் நாட்டில் கிடைக்கும் என பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயுத்துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி தெரிவித்துள்ளார்.  இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், "எத்தனால் உற்பத்தியை நாங்கள் தொடர்ந்து ஆய்வு செய்து வருகிறோம். ஏப்ரல் 2023க்கு முன்னதாக டிசம்பர் அல்லது ஜனவரியில் 20 சதவீதம் கலப்பு எரிபொருள் சந்தைக்கு வரும் என்று நான் நம்புகிறேன்" என்றார்.

நெகிழ்வான எரிபொருள் வாகனங்கள் (கலப்பு எரிபொருளில் இயங்கும் வாகனங்கள்) கிடைக்கும் பிரேசிலை உதாரணமாக மேற்கோள் காட்டி பேசிய ஹர்தீப் சிங் பூரி, "நுகர்வோர் விருப்பப்படி எத்தனால் அல்லது பெட்ரோலை எடுத்துக் கொள்ளலாம். இது அரசாங்கத்தின் இறுதி இலக்காக இருக்கும். 

இருப்பினும், அந்த நிலையை அடைய, சில தொழில்நுட்ப அம்சங்கள் உள்ளன. அதற்கான, பணிகள் நடந்து வருகின்றன. எத்தனால் கலப்படம் தொடர்பாக ஆட்டோமொபைல் உற்பத்தியாளர்களுடன் ஒரு முக்கிய சந்திப்பை நடத்த உள்ளோம். பெட்ரோலில் 20 சதவிகிதம் எத்தனால் கலப்பதை அடைவதற்கான இலக்கு தேதியை 2025ஆம் ஆண்டுக்கு ஐந்து ஆண்டுகளுக்குள் இந்தியா முன்னெடுத்துள்ளது.

பெட்ரோலில் 20 சதவீதம் எத்தனால் கலப்பதற்கு, நமது நாட்டிற்கு 1,000 கோர் லிட்டர் கொள்ளளவு தேவைப்படுகிறது. 450 கோடி லிட்டர் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. 400 கோடி லிட்டருக்கு டெண்டர் விடப்பட்டுள்ளது. 20 சதவிகித கலப்பிற்கான போதுமான எத்தனால் கைவசம் உள்ளது. 2025ஆம் ஆண்டுக்குள் நாட்டில் விற்பனை செய்யப்படும் அனைத்து பெட்ரோலிலும் 20 சதவீதம் எத்தனால் இருக்க வேண்டும் என இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது" எனத் தெரிவித்தார்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

PM Modi US Visit: அமெரிக்காவில் கால் வைத்ததுமே சம்பவம்..! ட்ரம்ப் சந்திப்பு - 36 மணி நேரம், மோடியின் 6 முக்கிய திட்டங்கள்
PM Modi US Visit: அமெரிக்காவில் கால் வைத்ததுமே சம்பவம்..! ட்ரம்ப் சந்திப்பு - 36 மணி நேரம், மோடியின் 6 முக்கிய திட்டங்கள்
Annamalai Vs TVK: தவெக-வை நக்கலடித்த அண்ணாமலை... என்ன சொல்லியிருக்கார் தெரியுமா.?
தவெக-வை நக்கலடித்த அண்ணாமலை... என்ன சொல்லியிருக்கார் தெரியுமா.?
New Income Tax Bill 2025: இன்று தாக்கலாகிறது புதிய வருமான வரி மசோதா - 622 பக்கங்கள், கடுமையான விதிகள்
New Income Tax Bill 2025: இன்று தாக்கலாகிறது புதிய வருமான வரி மசோதா - 622 பக்கங்கள், கடுமையான விதிகள்
Chennai-Tada NH: கவலை வேண்டாம்..! சென்னை டூ தடா ரூட் ரெடி, திருப்பதி பயணம் ரொம்ப ஈசி - தயாரான 6 வழிச்சாலை
Chennai-Tada NH: கவலை வேண்டாம்..! சென்னை டூ தடா ரூட் ரெடி, திருப்பதி பயணம் ரொம்ப ஈசி - தயாரான 6 வழிச்சாலை
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

TVK Transgender Issue | ”9-ஆடா நாங்க?...இன்னும் எத்தனை நாளைக்கு..” SURRENDER ஆன தவெக! | Vijayதிமுகவுக்கு பக்கா ஸ்கெட்ச்! ஆட்டத்தை தொடங்கிய PK! குஷியில் EPS, விஜய்அந்தர்பல்டி அடித்த மம்தா!ராகுல் காந்திக்கு செக்!உடைகிறதா கூட்டணி?Karthi Visit Tirupati | லட்டு சர்ச்சை விவகாரம் திருப்பதி சென்ற கார்த்தி”என் மகன் தான் காரணம்”

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
PM Modi US Visit: அமெரிக்காவில் கால் வைத்ததுமே சம்பவம்..! ட்ரம்ப் சந்திப்பு - 36 மணி நேரம், மோடியின் 6 முக்கிய திட்டங்கள்
PM Modi US Visit: அமெரிக்காவில் கால் வைத்ததுமே சம்பவம்..! ட்ரம்ப் சந்திப்பு - 36 மணி நேரம், மோடியின் 6 முக்கிய திட்டங்கள்
Annamalai Vs TVK: தவெக-வை நக்கலடித்த அண்ணாமலை... என்ன சொல்லியிருக்கார் தெரியுமா.?
தவெக-வை நக்கலடித்த அண்ணாமலை... என்ன சொல்லியிருக்கார் தெரியுமா.?
New Income Tax Bill 2025: இன்று தாக்கலாகிறது புதிய வருமான வரி மசோதா - 622 பக்கங்கள், கடுமையான விதிகள்
New Income Tax Bill 2025: இன்று தாக்கலாகிறது புதிய வருமான வரி மசோதா - 622 பக்கங்கள், கடுமையான விதிகள்
Chennai-Tada NH: கவலை வேண்டாம்..! சென்னை டூ தடா ரூட் ரெடி, திருப்பதி பயணம் ரொம்ப ஈசி - தயாரான 6 வழிச்சாலை
Chennai-Tada NH: கவலை வேண்டாம்..! சென்னை டூ தடா ரூட் ரெடி, திருப்பதி பயணம் ரொம்ப ஈசி - தயாரான 6 வழிச்சாலை
Chiranjeevi: மகளிர் தினத்தில் சிரஞ்சீவியை ரவுண்டு கட்டும் நெட்டிசன்கள் - ”பெரிய மனுஷன் இப்படி பேசலாமா?”
Chiranjeevi: மகளிர் தினத்தில் சிரஞ்சீவியை ரவுண்டு கட்டும் நெட்டிசன்கள் - ”பெரிய மனுஷன் இப்படி பேசலாமா?”
Womens Day Wishes: தாய்மையை போற்றும் தேசிய மகளிர் தினம் - இந்தியாவின் நைட்டிங்கேல் சொன்ன வார்த்தைகள், வாழ்த்துச் செய்தி
Womens Day Wishes: தாய்மையை போற்றும் தேசிய மகளிர் தினம் - இந்தியாவின் நைட்டிங்கேல் சொன்ன வார்த்தைகள், வாழ்த்துச் செய்தி
என்னைச் சோதிக்காதீங்க! எடப்பாடி பழனிச்சாமிக்கு எச்சரிக்கை விடுக்கிறாரா செங்கோட்டையன்?
என்னைச் சோதிக்காதீங்க! எடப்பாடி பழனிச்சாமிக்கு எச்சரிக்கை விடுக்கிறாரா செங்கோட்டையன்?
PM Modi On Pakistan: பாகிஸ்தான் எல்லைக்குள் பறந்த மோடி.! 46 நிமிடங்கள் விமானத்தில் இருந்தே விசிட்...
பாகிஸ்தான் எல்லைக்குள் பறந்த மோடி.! 46 நிமிடங்கள் விமானத்தில் இருந்தே விசிட்...
Embed widget