Petrol and diesel prices: பெட்ரோல், டீசல் விலை மீண்டும் உயர்வு
சென்னையில் பெட்ரோல் மற்றும் டீசலின் விலை மீண்டும் அதிகரித்துள்ளது.
சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலையின் அடிப்படையில், பெட்ரோல் மற்றும் டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்களே நிர்ணயித்துக்கொள்ள மத்திய அரசு அனுமதி அளித்தது. அதன்படி, எண்ணெய் நிறுவனங்கள் தினமும் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை நிர்ணயித்து வருகின்றன. சென்னையில் தேர்தல் முடிவுக்கு முன்பு பெட்ரோல் லிட்டருக்கு ரூ.92.43-க்கும், டீசல் லிட்டருக்கு ரூ.85.75-க்கும் விற்பனை செய்யப்பட்டது.
இந்நிலையில், தமிழ்நாடு உள்பட 5 மாநில தேர்தல் முடிவுகள் வெளியான நாளிலிருந்து பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்ந்து, சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 12 காசு அதிகரித்து ரூ.92.55க்கு விற்பனை செய்யப்பட்டது. இதேபோல், ஒரு லிட்டர் டீசல் விலை 15 காசு அதிகரித்து ரூ.85.90க்கு விற்பனையானது. அதனைத்தொடர்ந்து, பெட்ரோல் மற்றும் டீசலின் விலை குறைவை விட அதிகம் உயர்ந்தே காணப்பட்டு வருகிறது.சென்னையில் கடந்த 16ஆம் தேதி ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.94.31க்கு விற்பனை செய்யப்பட்டது. ஒரு லிட்டர் டீசலின் விலை ரூ.88.7க்கு விற்பனை செய்யப்பட்டது.
இதனைத்தொடர்ந்து, பெட்ரோல் மற்றும் டீசல் விலை அதிகரித்தும், எந்த மாற்றமும் இன்றியே விற்பனை செய்யப்பட்டு வருகிறது. சென்னையில் கடந்த சில நாட்களாக ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.94.86க்கும், இதேபோல், ஒரு லிட்டர் டீசல் ரூ.88.87க்கும் விற்பனை செய்யப்பட்டது.
இந்நிலையில், சென்னையில் கடந்த 25ஆம் தேதி பெட்ரோல் விலை 95 ரூபாய் தாண்டி வாகன ஓட்டிகளுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதன்படி, சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 20 காசு அதிகரித்து ரூ.95.06க்கு விற்பனை செய்யப்பட்டது. இதேபோல், ஒரு லிட்டர் டீசலின் விலை 24 காசு அதிகரித்து ரூ.89.11க்கு விற்பனை செய்யப்பட்டது. இதையடுத்து, மறுநாள் பெட்ரோல் மற்றும் டீசல் விலை குறையும் என எதிர்பார்த்த் நிலையில், மீண்டும் அதே விலைக்கே விற்பனை செய்யப்பட்டது.
சென்னையில் நேற்று முன்தினம் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 22 காசு அதிகரித்து ரூ.95.28க்கு விற்பனை செய்யப்பட்டது. இதேபோல், ஒரு லிட்டர் டீசலின் விலை 28 காசு அதிகரித்து ரூ.89.39க்கு விற்பனை செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து, நேற்று பெட்ரோல் மற்றும் டீசல் விலை மாற்றமின்றி விற்பனை செய்யப்பட்டது.
இந்நிலையில், சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோலின் விலை 23 காசு அதிகரித்து ரூ.95.51க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதேபோல், ஒரு லிட்டர் டீசலின் விலை 26 காசு அதிகரித்து ரூ.89.65க்கு விற்பனை செய்யப்படுகிறது.
தமிழகத்தை பொறுத்த வரை திமுக ஆட்சிக்கு வந்ததும் பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்படும் என பிரசாரத்தின் போது முக ஸ்டாலின் தெரிவித்திருந்தார். அதுமட்டுமின்றி தேர்தல் அறிக்கையாகவும் வெளியிடப்பட்டது.
சில தினங்களுக்கு முன்பு, திமுக அறிக்கையில் அறிவித்ததுபோல, பெட்ரோல், டீசல் விலையை குறைக்க வேண்டும் என மநீம தலைவர் கமல்ஹாசன், பாமக எம்பி அன்புமணி ராமதாஸ் உள்ளிட்டோர் வலியுறுத்தினர். கடந்த சில நாட்களாகவே பெட்ரோல், டீசல் விலை நிலையாக இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.