![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
Petrol and diesel prices Today: அதிகரித்தது இன்றைய பெட்ரோல், டீசல் விலை
சென்னையில் இன்றைய பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிலவரம்.
![Petrol and diesel prices Today: அதிகரித்தது இன்றைய பெட்ரோல், டீசல் விலை Petrol and diesel rate today Petrol and diesel prices price in on may 10th Petrol and diesel prices Today: அதிகரித்தது இன்றைய பெட்ரோல், டீசல் விலை](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/04/10/7a1d597af7af91df7bce8a65d8a6b7d0_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
கடந்த இரண்டு நாட்களாக பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாற்றமும் செய்யப்படாத நிலையில், இன்றைய பெட்ரோல் மற்றும் டீசல் விலை ஏற்றம் கண்டுள்ளது.
சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலையின் அடிப்படையில், பெட்ரோல் மற்றும் டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்களே நிர்ணயித்துக்கொள்ள மத்திய அரசு அனுமதி அளித்தது. அதன்படி, எண்ணெய் நிறுவனங்கள் தினமும் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை நிர்ணயித்து வருகின்றன. சென்னையில் தேர்தல் முடிவுக்கு முன்பு பெட்ரோல் லிட்டருக்கு ரூ.92.43-க்கும், டீசல் லிட்டருக்கு ரூ.85.75-க்கும் விற்பனை செய்யப்பட்டது.
இந்நிலையில், தமிழ்நாடு உள்பட 5 மாநில தேர்தல் முடிவுகள் வெளியான நாளிலிருந்து பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்ந்து, சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 12 காசு அதிகரித்து ரூ.92.55க்கு விற்பனை செய்யப்பட்டது. இதேபோல், ஒரு லிட்டர் டீசல் விலை 15 காசு அதிகரித்து ரூ.85.90க்கு விற்பனையானது.
அதனைத்தொடர்ந்து, கடந்த இரண்டு நாட்களாக பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. இந்நிலையில், இன்று பெட்ரோல் மற்றும் டீசல் விலை அதிகரித்துள்ளது. அதன்படி, சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 23 காசு அதிகரித்து ரூ.93.38க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதேபோல், ஒரு லிட்டர் டீசல் விலை 31 காசு அதிகரித்து ரூ.86.96க்கும் விற்பனையாகிறது.
தமிழகத்தை பொறுத்த வரை திமுக ஆட்சிக்கு வந்ததும் பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்படும் என பிரசாரத்தின் போது முக ஸ்டாலின் தெரிவித்திருந்தார். அதுமட்டுமின்றி தேர்தல் அறிக்கையாகவும் வெளியிடப்பட்டது.
கடந்த சில நாட்களாக விலை நிலையாக இருந்த நிலையில், மீண்டும் திமுக ஆட்சிக்கு வந்துள்ளதால் அவர்கள் தெரிவித்தபடி பெட்ரோல், டீசல் விலை மேலும் குறையும் என வாகன ஓட்டிகள் உற்சாகத்தில் இருந்தனர். ஆனால் அதற்கு மாறாக திடீரென பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து உயர்த்தப்பட்டு வருவது வாகன ஓட்டிகளுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திமுக ஆட்சிக்கு வந்தது பெட்ரோல் மற்றும் டீசலின் விலை குறைக்கப்படும் என்று தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)