Petrol and diesel prices Today: இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்

சில தினங்களாக பெட்ரோல் மற்றும் டீசல் விலை அதிகரித்து வந்த நிலையில், இன்று விலைமாற்றமின்றி பெட்ரோல், டீசல் விற்பனை செய்யப்படுகிறது.

சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலையின் அடிப்படையில், பெட்ரோல் மற்றும் டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்களே நிர்ணயித்துக்கொள்ள மத்திய அரசு அனுமதி அளித்தது. அதன்படி, எண்ணெய் நிறுவனங்கள் தினமும் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை நிர்ணயித்து வருகின்றன. சென்னையில் தேர்தல் முடிவுக்கு முன்பு பெட்ரோல் லிட்டருக்கு ரூ.92.43-க்கும், டீசல் லிட்டருக்கு  ரூ.85.75-க்கும் விற்பனை செய்யப்பட்டது.  


இந்நிலையில், தமிழ்நாடு உள்பட 5 மாநில தேர்தல் முடிவுகள் வெளியான நாளிலிருந்து பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்ந்து, சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 12 காசு அதிகரித்து ரூ.92.55க்கு விற்பனை செய்யப்பட்டது. இதேபோல், ஒரு லிட்டர் டீசல் விலை 15 காசு அதிகரித்து ரூ.85.90க்கு விற்பனையானது. அதனைத்தொடர்ந்து, பெட்ரோல் மற்றும் டீசலின் விலை குறைவை விட அதிகம் உயர்ந்தே காணப்பட்டு வருகிறது.சென்னையில் கடந்த 16ஆம் தேதி  ஒரு லிட்டர் பெட்ரோல் விலை  ரூ.94.31க்கு விற்பனை செய்யப்பட்டது. ஒரு லிட்டர் டீசலின் விலை ரூ.88.7க்கு விற்பனை செய்யப்பட்டது. 


ரூ.96யை நெருங்கும் பெட்ரோல்; ரூ.90யை தாண்டிய டீசல்!


இதனைத்தொடர்ந்து, பெட்ரோல் மற்றும் டீசல் விலை அதிகரித்தும், எந்த மாற்றமும் இன்றியே விற்பனை செய்யப்பட்டு வருகிறது. சென்னையில் கடந்த சில நாட்களாக ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.94.86க்கும், இதேபோல், ஒரு லிட்டர் டீசல்  ரூ.88.87க்கும் விற்பனை செய்யப்பட்டது. 



Petrol and diesel prices Today: இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்






இந்நிலையில், சென்னையில் கடந்த 25ஆம் தேதி பெட்ரோல் விலை 95 ரூபாய் தாண்டி வாகன ஓட்டிகளுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதன்படி, சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 20 காசு அதிகரித்து ரூ.95.06க்கு விற்பனை செய்யப்பட்டது. இதேபோல், ஒரு லிட்டர் டீசலின் விலை 24 காசு அதிகரித்து ரூ.89.11க்கு விற்பனை செய்யப்பட்டது. இதையடுத்து, மறுநாள் பெட்ரோல் மற்றும் டீசல் விலை குறையும் என எதிர்பார்த்த நிலையில்,  மீண்டும் அதே விலைக்கே விற்பனை செய்யப்பட்டது.


சீனாவில் மனிதனுக்கு பறவைக் காய்ச்சல் - அச்சத்தில் மக்கள்


 


சென்னையில் நேற்று முன்தினம் ஒரு லிட்டர் பெட்ரோலின்  விலை 25 காசு அதிகரித்து ரூ.95.76க்கு விற்பனை செய்யப்பட்டது. ஒரு லிட்டர் டீசலின் விலை 25 காசு அதிகரித்து ரூ.89.65க்கு விற்பனை செய்யப்பட்டது. நேற்று ஒரு லிட்டர் பெட்ரோலின் விலை 23 காசு அதிகரித்து ரூ.95.99க்கு விற்பனை செய்யப்பட்டது. இதேபோல், ஒரு லிட்டர் டீசலின் விலை 22 காசு அதிகரித்து ரூ.90.12க்கு விற்பனை செய்யப்பட்டது. இந்நிலையில், இன்று எந்த மாற்றமுமின்றி நேற்றைய விலைக்கே பெட்ரோல், டீசல் விற்பனை செய்யப்படுகிறது.


தமிழகத்தை பொறுத்த வரை திமுக ஆட்சிக்கு வந்ததும் பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்படும் என பிரசாரத்தின் போது முக ஸ்டாலின் தெரிவித்திருந்தார். அதுமட்டுமின்றி தேர்தல் அறிக்கையாகவும் வெளியிடப்பட்டது.


 


 


மற்ற நகரங்களில் விலை 


நகரம்                   பெட்ரோல்                      டீசல் 


டெல்லி                    94.23                                85.15


கொல்கத்தா          94.25                                88.00


மும்பை                   100.47                              92.45


 


 


 

Tags: petrol price diesel price Petrol and diesel price Petrol Price Today Rise petrol price today Petrol and diesel price rise petrol price today

தொடர்புடைய செய்திகள்

Petrol and diesel prices Today: ரூ.97யை கடந்தது பெட்ரோல் விலை!

Petrol and diesel prices Today: ரூ.97யை கடந்தது பெட்ரோல் விலை!

Flipkart-இல் 3 நாட்களுக்கு அதிரடி தள்ளுபடி : ஈஸி பட்ஜெட்டில் வரவிருக்கும் ஸ்மார்ட்ஃபோன்கள்!

Flipkart-இல் 3 நாட்களுக்கு அதிரடி தள்ளுபடி : ஈஸி பட்ஜெட்டில் வரவிருக்கும் ஸ்மார்ட்ஃபோன்கள்!

கட்டுபடி ஆகாத விலையில் கட்டுமான பொருட்கள்; மக்கள் பட்ஜெட்டில் கீறல்!

கட்டுபடி ஆகாத விலையில் கட்டுமான பொருட்கள்; மக்கள் பட்ஜெட்டில் கீறல்!

Gold Silver Price Today: இரண்டு நாளாக உயர்ந்த தங்கம் இன்று குறைந்தது!

Gold Silver Price Today: இரண்டு நாளாக உயர்ந்த தங்கம் இன்று குறைந்தது!

TN petrol diesel price hike: இதுவரை இல்லாத உச்ச விலை.... சதத்தை நெருங்கியது பெட்ரோல்! கதறும் வாகன ஓட்டிகள்!

TN petrol diesel price hike: இதுவரை இல்லாத உச்ச விலை.... சதத்தை நெருங்கியது பெட்ரோல்! கதறும் வாகன ஓட்டிகள்!

டாப் நியூஸ்

Tamil Nadu Coronavirus LIVE News : தமிழ்நாட்டில் குறைந்து வரும் கொரோனா இறப்பு எண்ணிக்கை

Tamil Nadu Coronavirus LIVE News : தமிழ்நாட்டில் குறைந்து வரும் கொரோனா இறப்பு எண்ணிக்கை

ட்விட்டரில் பரிசு அறிவித்த அஸ்வின்; ஆர்வத்தில் கொட்டும் கமெண்ட்ஸ்!

ட்விட்டரில் பரிசு அறிவித்த அஸ்வின்; ஆர்வத்தில் கொட்டும் கமெண்ட்ஸ்!

Facebook Smartwatch | 'இரண்டு கேமராவுடன் ஸ்மார்ட் வாட்ச்' - அடுத்தக்கட்டத்திற்கு நகரும் பேஸ்புக்!

Facebook Smartwatch |  'இரண்டு கேமராவுடன் ஸ்மார்ட் வாட்ச்' - அடுத்தக்கட்டத்திற்கு நகரும் பேஸ்புக்!

'இந்தி அச்சுறுத்தலை எதிர்ப்போம்' ராஜ்யசபாவில் அண்ணா ஆற்றிய உரையின் சுருக்கம் !

'இந்தி அச்சுறுத்தலை எதிர்ப்போம்' ராஜ்யசபாவில் அண்ணா ஆற்றிய உரையின் சுருக்கம் !