மேலும் அறிய

Petrol Diesel Price Today: விற்பனையில் மாற்றம்! சென்னையில் இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம் இதோ!

Petrol Diesel Price Today, January 16: உலகமே எரிபொருளை மையமாகக் கொண்டு இயங்கி வரும் வேளையில் முழுமையான மின்சார சக்தியில் செயல்படும் அளவிற்கு உலக நாடுகள் தங்களை உயர்த்திக் கொள்ள முயற்சித்து வருகின்றன.

Petrol Diesel Price Today, January 16: கிட்டதட்ட மாற்றம் இல்லாமல் 600 நாட்கள் கடந்து விட்ட நிலையில், சென்னையில்  இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரத்தை அறியலாம்.

பெட்ரோல், டீசல்:

உலகமே எரிபொருளை மையமாகக் கொண்டு தான் இயங்கி வரும் வேளையில் முழுமையான மின்சார சக்தியில் செயல்படும் அளவிற்கு உலக நாடுகள் தங்களை உயர்த்திக் கொள்ள முயற்சித்து வருகின்றன. அந்த வரிசையில் இந்தியாவும்  முழுமையாகக் களம் கண்டுள்ளது. இந்தியாவில் பெட்ரோல், டீசல் சம்பந்தமான பொருட்கள் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டு வருகின்றன.  அதேசமயம் வெகு விரைவில் முற்றிலுமான மின்மயமான நாட்டினை நோக்கி இந்தியா தன்னை நகர்த்திக் கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

இந்தியாவை பொறுத்தவரை 80% வாகனங்கள் பெட்ரோல், டீசல் ஆகியவற்றில் இயங்கி வருகிறது. இதன் காரணமாக பெட்ரோல், டீசல் விலை உயர்வு மக்களின் அன்றாட வாழ்க்கையில் பெரும் மாற்றத்தினை ஏற்படுத்துகிறது. அதேபோல் எரிபொருட்களின் விலை உயர்வு என்பது அன்றாட அத்தியாவசியப் பொருட்களின் மீதான விலை உயர்வில் மிகப்பெரிய அளவில் பிரதிபலிக்கும். எனவே சாமானிய மக்களும் எரிபொருள் விலை நிலவரத்தை ஒவ்வொரு நாளும் கண்காணித்து வருகிறார்கள்.

இன்றைய விலை நிலவரம்

இந்நிலையில் சென்னையில் இன்று (ஜனவரி 16ஆம் தேதி) ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.102.63 க்கும், டீசல் விலை லிட்டருக்கு 94.24 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இந்த விலை நிர்ணயமானது தொடர்ந்து மாற்றமின்றி 605வது நாளாக தொடர்கிறது. அதாவது, விலை மாற்றமின்றி பெட்ரோல், டீசல் விற்பனை செய்யப்படுவது 19 மாதங்களை பூர்த்தி செய்துள்ளது. இதனால் மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். முன்னதாக கடந்த 2020, 2021 ஆம் ஆண்டுகளில் பரவிய கொரோனா வைரஸ் தொற்றால் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கால் பொதுமக்கள் மிகப்பெரிய பொருளாதார பாதிப்பை சந்தித்தனர்.

அப்போது கலால் வரி குறைப்பால் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூபாய்க்கு 8ம், டீசல் விலை 6 ரூபாய்க்கும் குறைந்தது.   இத்தகைய சூழலில் பெட்ரோல், டீசல் விலை மாற்றமின்றி 16 மாதங்களை கடந்துள்ளது மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தேசிய உயிரி எரிபொருள் கொள்கை

கடந்த 2018ஆம் ஆண்டில் மத்திய அரசு அறிவித்த தேசிய உயிரி எரிபொருள் கொள்கை 2030ஆம் ஆண்டுக்குள் பெட்ரோலில் 20 விழுக்காடு எத்தனாலைக் கலந்து விற்க இலக்கு நிர்ணயித்திருந்தது. ஆனால், அந்த இலக்கு தற்போது ஐந்து ஆண்டுகளுக்கு முன்பாக 2025 ஆம் ஆண்டு என மாற்றியமைக்கப்பட்டது.

இயற்கை எரிவாயுத்துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி, ”இருபது சதவீதம் எத்தனால் கலந்த பெட்ரோல் டிசம்பர் அல்லது ஜனவரி முதல் நாட்டில் கிடைக்கும்” எனத்தெரிவித்துள்ளார்.  இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், "எத்தனால் உற்பத்தியை நாங்கள் தொடர்ந்து ஆய்வு செய்து வருகிறோம். ஏப்ரல் 2023க்கு முன்னதாக டிசம்பர் அல்லது ஜனவரியில் 20 சதவீதம் கலப்பு எரிபொருள் சந்தைக்கு வரும் என்று நான் நம்புகிறேன்" என் கூறினார். 

நெகிழ்வான எரிபொருள் வாகனங்கள் (கலப்பு எரிபொருளில் இயங்கும் வாகனங்கள்) கிடைக்கும் பிரேசிலை உதாரணமாக மேற்கோள் காட்டி பேசிய ஹர்தீப் சிங் பூரி, "நுகர்வோர் விருப்பப்படி எத்தனால் அல்லது பெட்ரோலை எடுத்துக் கொள்ளலாம். இது அரசாங்கத்தின் இறுதி இலக்காக இருக்கும். 

இருப்பினும், அந்த நிலையை அடைய, சில தொழில்நுட்ப அம்சங்கள் உள்ளன. அதற்கான, பணிகள் நடந்து வருகின்றன. எத்தனால் கலப்படம் தொடர்பாக ஆட்டோமொபைல் உற்பத்தியாளர்களுடன் ஒரு முக்கிய சந்திப்பை நடத்த உள்ளோம். பெட்ரோலில் 20 சதவிகிதம் எத்தனால் கலப்பதை அடைவதற்கான இலக்கு தேதியை 2025ஆம் ஆண்டுக்கு ஐந்து ஆண்டுகளுக்குள் இந்தியா முன்னெடுத்துள்ளது.

பெட்ரோலில் 20 சதவீதம் எத்தனால் கலப்பதற்கு, நமது நாட்டிற்கு 1,000 கோடி லிட்டர் கொள்ளளவு தேவைப்படுகிறது. 450 கோடி லிட்டர் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. 400 கோடி லிட்டருக்கு டெண்டர் விடப்பட்டுள்ளது. 20 சதவிகித கலப்பிற்கான போதுமான எத்தனால் கைவசம் உள்ளது. 2025ஆம் ஆண்டுக்குள் நாட்டில் விற்பனை செய்யப்படும் அனைத்து பெட்ரோலிலும் 20 சதவீதம் எத்தனால் இருக்க வேண்டும் என இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது" எனத் தெரிவித்தார்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

உரிமைக்காக போராடும் ஆசிரியர்களை பொங்கல் நாளிலும் கைது செய்து அடைத்து வைப்பதா? அன்புமணி ராமதாஸ் கண்டனம் !
உரிமைக்காக போராடும் ஆசிரியர்களை பொங்கல் நாளிலும் கைது செய்து அடைத்து வைப்பதா? அன்புமணி ராமதாஸ் கண்டனம் !
தமிழகத்தில் நாளை மழை பெய்யும்? குளிர் எப்படி இருக்கும்? அடுத்த சில நாட்களுக்கான வானிலை அறிக்கை இதோ
தமிழகத்தில் நாளை மழை பெய்யும்? குளிர் எப்படி இருக்கும்? அடுத்த சில நாட்களுக்கான வானிலை அறிக்கை இதோ
Iran Trump War?: ''இந்த முறை குறி தப்பாது“; ட்ரம்ப்புக்கு நேரடி மிரட்டல் விடுத்த ஈரான்; அப்போ போர் கன்ஃபார்மா.?!!
''இந்த முறை குறி தப்பாது“; ட்ரம்ப்புக்கு நேரடி மிரட்டல் விடுத்த ஈரான்; அப்போ போர் கன்ஃபார்மா.?!!
சரத்குமார் குறி வைக்கும் அந்த 3 தொகுதி.! மல்லுக்கு நிற்கும் அதிமுக, தமாகா- கைப்பற்றப்போவது யார்.?
சரத்குமார் குறி வைக்கும் அந்த 3 தொகுதி.! மல்லுக்கு நிற்கும் அதிமுக, தமாகா- கைப்பற்றப்போவது யார்.?
ABP Premium

வீடியோ

”மானத்த பத்தி நீங்க பேசலாமா?” அடக்குமுறைகளை எதிர்க்கும் இஸ்லாமிய தமிழச்சி! | Wahitha Begum
அயோத்தி செல்லும் ராகுல்! காங்கிரஸ் பக்கா ப்ளான் கொந்தளிக்கும் பாஜகவினர் | Rahul Gandhi Visit Ayodhya
’’ரவுடிகள்..கோமாளிகள்’’விஜய் ரசிகர்களை திட்டிய சுதா கொங்கரா

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
உரிமைக்காக போராடும் ஆசிரியர்களை பொங்கல் நாளிலும் கைது செய்து அடைத்து வைப்பதா? அன்புமணி ராமதாஸ் கண்டனம் !
உரிமைக்காக போராடும் ஆசிரியர்களை பொங்கல் நாளிலும் கைது செய்து அடைத்து வைப்பதா? அன்புமணி ராமதாஸ் கண்டனம் !
தமிழகத்தில் நாளை மழை பெய்யும்? குளிர் எப்படி இருக்கும்? அடுத்த சில நாட்களுக்கான வானிலை அறிக்கை இதோ
தமிழகத்தில் நாளை மழை பெய்யும்? குளிர் எப்படி இருக்கும்? அடுத்த சில நாட்களுக்கான வானிலை அறிக்கை இதோ
Iran Trump War?: ''இந்த முறை குறி தப்பாது“; ட்ரம்ப்புக்கு நேரடி மிரட்டல் விடுத்த ஈரான்; அப்போ போர் கன்ஃபார்மா.?!!
''இந்த முறை குறி தப்பாது“; ட்ரம்ப்புக்கு நேரடி மிரட்டல் விடுத்த ஈரான்; அப்போ போர் கன்ஃபார்மா.?!!
சரத்குமார் குறி வைக்கும் அந்த 3 தொகுதி.! மல்லுக்கு நிற்கும் அதிமுக, தமாகா- கைப்பற்றப்போவது யார்.?
சரத்குமார் குறி வைக்கும் அந்த 3 தொகுதி.! மல்லுக்கு நிற்கும் அதிமுக, தமாகா- கைப்பற்றப்போவது யார்.?
விஜய்க்கு ஷாக் கொடுத்த உச்சநீதிமன்றம்.! ஜனநாயகன் மனு தள்ளுபடி- நடந்தது என்ன.?
விஜய்க்கு ஷாக் கொடுத்த உச்சநீதிமன்றம்.! ஜனநாயகன் மனு தள்ளுபடி- நடந்தது என்ன.?
Toyota Urban Cruiser BEV: தரமான சம்பவம்.. ஒரே சார்ஜ்.. 550 கி.மீ ரேஞ்ச்; இந்தியாவில் முதல் EV காரை களமிறக்கும் டொயோட்டா
தரமான சம்பவம்.. ஒரே சார்ஜ்.. 550 கி.மீ ரேஞ்ச்; இந்தியாவில் முதல் EV காரை களமிறக்கும் டொயோட்டா
Poco M8 5G Review: சிம்ப்பிள், ஆனா செம்ம.. அன்றாட பயனர்களுக்கு அம்சமான போன்; போகோ M8 5G-ன் சிறப்புகள் என்ன.?
சிம்ப்பிள், ஆனா செம்ம.. அன்றாட பயனர்களுக்கு அம்சமான போன்; போகோ M8 5G-ன் சிறப்புகள் என்ன.?
Suzuki e-Access Vs Ather 450: சுசூகி இ-அக்சஸ்-ஆ அல்லது ஏதர் 450-ஆ.? எது சிறந்தது.? வாங்குவதற்கு முன் தெரிந்துகொள்ளுங்கள்
சுசூகி இ-அக்சஸ்-ஆ அல்லது ஏதர் 450-ஆ.? எது சிறந்தது.? வாங்குவதற்கு முன் தெரிந்துகொள்ளுங்கள்
Embed widget