மேலும் அறிய

உங்கள் PF அக்கவுண்ட்டில் எவ்வளவு இருப்பு இருக்கிறது தெரிந்து கொள்ள வேண்டுமா? இதோ ஈஸியான வழிகள்!

முன்பெல்லாம், பணியாளர்கள் தங்கள் வருங்கால வைப்பு நிதி கணக்கு இருப்பு குறித்த தகவலை பெற, தங்கள் முதலாளிகளால் பகிரப்படும் வருடாந்திர EPF அறிக்கையை நம்பியிருக்க வேண்டும். தற்போது அவை எளிதாகியுள்ளது.

மாத சம்பளத்தில் பணிபுரியும் ஒவ்வொரு நபரின் வாழ்க்கையிலும் ஓய்வூதியத்திற்கான திட்டமிடல் ஒரு முக்கியமான அம்சமாகும். இந்தியாவில் ஓய்வூதியத்திற்காக சேமிப்பதற்கான முதன்மையான வழிகளில் ஒன்று பணியாளர் வருங்கால வைப்பு நிதி (EPF) ஆகும். இந்த சேமிப்புத் திட்டம் பணியாளர்கள் தங்களின் வேலை ஆண்டுகளை மிகச் சிறப்பாகப் பயன்படுத்தவும், வசதியான எதிர்காலத்தை உறுதி செய்யவும் உதவும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. உங்களின் EPF கணக்கு இருப்பு குறித்து தொடர்ந்து தெரிந்துகொள்வதன் முக்கியத்துவத்தை புரிந்துகொண்டு, EPFO (பணியாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு) பணியாளர்கள் தங்கள் EPF இருப்பை ஆன்லைனில் மற்றும் ஆஃப்லைனில் சரிபார்க்க புதிய வழிகளை அறிமுகப்படுத்தியுள்ளது. முன்பெல்லாம், பணியாளர்கள் தங்கள் வருங்கால வைப்பு நிதி கணக்கு இருப்பு குறித்த தகவலை பெற, தங்கள் முதலாளிகளால் பகிரப்படும் வருடாந்திர EPF அறிக்கையை நம்பியிருக்க வேண்டும். சமீபத்திய அப்டேட்டுகளின் மூலம், EPF இருப்பைச் சரிபார்ப்பது எளிதில் அணுகக்கூடியதாக மாறியுள்ளது. 

உங்கள் PF அக்கவுண்ட்டில் எவ்வளவு இருப்பு இருக்கிறது தெரிந்து கொள்ள வேண்டுமா? இதோ ஈஸியான வழிகள்!

மிஸ்டு கால் மூலம் அறியலாம்

UAN (யுனிவர்சல் கணக்கு எண்) போர்ட்டலில் உங்கள் மொபைல் எண்ணைப் பதிவுசெய்து செயல்படுத்தி, உங்கள் UANக்கான KYC ஐ முடித்திருந்தால், மிஸ்டு கால் கொடுத்து உங்கள் EPF இருப்பைச் சரிபார்க்கலாம். உங்கள் UAN உடன் பதிவுசெய்யப்பட்ட மொபைல் எண்ணிலிருந்து 011-22901406 என்ற எண்ணுக்கு டயல் செய்யுங்கள். இரண்டு ரிங்களுக்குப் பிறகு, அழைப்பு தானாகவே துண்டிக்கப்படும். அதன்பின் உங்கள் PF இருப்பு மற்றும் கணக்கில் கடைசியாகச் செலுத்தப்பட்ட தொகை பற்றிய விவரங்கள் அடங்கிய செய்தியை மேசேஜாக பெறுவீர்கள்.

தொடர்புடைய செய்திகள்: Rahul Gandhi on Modi: ”இப்ப மணிப்பூர், அடுத்து ஹரியானா, பஞ்சாப், உ.பி-ய பாஜக விற்கும்” - ராகுல் காந்தி சாடல்

SMS மூலம் பெறலாம்

உங்கள் UAN ஐ EPFO இல் பதிவு செய்வதன் மூலம், SMS அனுப்பி, PF இருப்பை விரைவாகச் சரிபார்க்கலாம். EPFOHO <UAN> ENG என்று டைப் செய்து உரைச் செய்தியை 7738299899 என்ற எண்ணிற்கு அனுப்பவும். <UAN> என்ற இடத்தில் உங்கள் தனிப்பட்ட UAN எண்ணை உள்ளிடவும். ENG என்று குறிப்பிட்டால் ஆங்கிலத்தில் செய்தி வரும். நீங்கள் விரும்பும் மொழியின் முதல் மூன்று எழுத்துக்களை உள்ளிட்டால் அந்த மொழியில் செய்தி வரும். தமிழுக்கு TAM என்று உள்ளிடவும்.  

உங்கள் PF அக்கவுண்ட்டில் எவ்வளவு இருப்பு இருக்கிறது தெரிந்து கொள்ள வேண்டுமா? இதோ ஈஸியான வழிகள்!

EPFO ஆன்லைன் போர்ட்டல்

புதிய EPFO ஆன்லைன் போர்டல் உங்கள் PF பாஸ்புக்கைப் பார்ப்பதற்கு வசதியான வழியை வழங்குகிறது. இந்த அம்சத்தை அணுக, EPFO இணையதளத்திற்குச் சென்று, 'Our Services' பகுதிக்குச் செல்லவும், பின்னர் 'For Employees' என்பதைத் தேர்ந்தெடுக்கவும். அதில் 'Services' என்பதைக் கிளிக் செய்து, 'Member Passbook' ஆப்ஷனை தேர்வு செய்யவும். உங்கள் பாஸ்புக்கைப் பார்க்க, உங்கள் UAN மற்றும் கடவுச்சொல்லை உள்ளிடவும். இந்தச் சேவைகளைப் பயன்படுத்த, உங்கள் UAN-ஐ உங்கள் முதலாளி சரிபார்க்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

உமாங் மொபைல் ஆப்

உங்கள் PF இருப்பைச் சரிபார்க்கும் செயல்முறையை எளிதாக்குவதற்காக UMANG செயலியை அரசாங்கம் அறிமுகப்படுத்தியுள்ளது. உங்கள் பாஸ்புக்கைப் பார்ப்பதோடு, பல வசதிகளையும் இந்த ஆப் அளிக்கிறது. இந்த ஆப்பை பயன்படுத்த, உங்கள் மொபைல் எண்ணுக்கு அனுப்பப்படும் OTP எண்ணை உள்ளிட்டு பதிவு செய்யவும்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Seeman:
Seeman: "நான் புலி.. நான் பெரியாரை ஏத்துக்கவே மாட்டேன்" மீண்டும் சீறிய சீமான்
TNPSC Controversy: தமிழ்நாட்டின் தாயுமானவர் யார்? டிஎன்பிஎஸ்சி குரூப் 2 வினாத்தாளால் வெடித்த சர்ச்சை! விவரம்
TNPSC Controversy: தமிழ்நாட்டின் தாயுமானவர் யார்? டிஎன்பிஎஸ்சி குரூப் 2 வினாத்தாளால் வெடித்த சர்ச்சை! விவரம்
Minister Raghupathi on EPS: கட்சியை கட்டுப்படுத்தவே படாத பாடு படுகிறார்.? எடப்பாடி பழனிசாமியை விளாசிய அமைச்சர்...
கட்சியை கட்டுப்படுத்தவே படாத பாடு படுகிறார்.? எடப்பாடி பழனிசாமியை விளாசிய அமைச்சர்...
தைப்பூச விழா.. மதுரை மாட்டுத்தாவணி பூ மார்கெட்டில் பூக்கள் விலையை தெரிஞ்சுக்கோங்க
தைப்பூச விழா.. மதுரை மாட்டுத்தாவணி பூ மார்கெட்டில் பூக்கள் விலையை தெரிஞ்சுக்கோங்க
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

செங்கோட்டையனுக்கு வந்த PHONE CALL.. ஆட்டத்தை ஆரம்பித்த சசிகலா! எடப்பாடிக்கு ஆப்பு ரெடி!ஆதங்கத்தில் கோகுல இந்திரா! கடுப்பான ஜெயக்குமார்! என்ன செய்யப்போகிறார் EPS?Rajini fans vs TVK: விஜய் சுற்றுப்பயணம்” அழுகிய முட்டை வீசுவோம்” ரஜினி ரசிகர்கள் சதி திட்டம்?மணிப்பூர் CM திடீர் ராஜினாமா! காலைவாரிய பாஜக MLA-க்கள்! அமித்ஷாவுடன் மீட்டிங்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Seeman:
Seeman: "நான் புலி.. நான் பெரியாரை ஏத்துக்கவே மாட்டேன்" மீண்டும் சீறிய சீமான்
TNPSC Controversy: தமிழ்நாட்டின் தாயுமானவர் யார்? டிஎன்பிஎஸ்சி குரூப் 2 வினாத்தாளால் வெடித்த சர்ச்சை! விவரம்
TNPSC Controversy: தமிழ்நாட்டின் தாயுமானவர் யார்? டிஎன்பிஎஸ்சி குரூப் 2 வினாத்தாளால் வெடித்த சர்ச்சை! விவரம்
Minister Raghupathi on EPS: கட்சியை கட்டுப்படுத்தவே படாத பாடு படுகிறார்.? எடப்பாடி பழனிசாமியை விளாசிய அமைச்சர்...
கட்சியை கட்டுப்படுத்தவே படாத பாடு படுகிறார்.? எடப்பாடி பழனிசாமியை விளாசிய அமைச்சர்...
தைப்பூச விழா.. மதுரை மாட்டுத்தாவணி பூ மார்கெட்டில் பூக்கள் விலையை தெரிஞ்சுக்கோங்க
தைப்பூச விழா.. மதுரை மாட்டுத்தாவணி பூ மார்கெட்டில் பூக்கள் விலையை தெரிஞ்சுக்கோங்க
ADMK EPS Discussion: செங்கோட்டையன் மீது நடவடிக்கையா.? முக்கிய ஆலோசனை மேற்கொண்ட எடப்பாடி பழனிசாமி...
செங்கோட்டையன் மீது நடவடிக்கையா.? முக்கிய ஆலோசனை மேற்கொண்ட எடப்பாடி பழனிசாமி...
Annamalai: திமுக அரசு.. நம்பர் ஒன் அமைச்சர் இவர் தான், பாஜக தூக்குவது உறுதி - ஸ்கெட்ச் போட்ட அண்ணாமலை
Annamalai: திமுக அரசு.. நம்பர் ஒன் அமைச்சர் இவர் தான், பாஜக தூக்குவது உறுதி - ஸ்கெட்ச் போட்ட அண்ணாமலை
NEET UG Exam: நீட் இளங்கலைத் தேர்வு கட்டணம், மையம்..விண்ணப்பிப்பது எப்படி? ஸ்டெப் பை ஸ்டெப் விளக்கம்!
NEET UG Exam: நீட் இளங்கலைத் தேர்வு கட்டணம், மையம்..விண்ணப்பிப்பது எப்படி? ஸ்டெப் பை ஸ்டெப் விளக்கம்!
Sengottaiyan : ”சசிகலாவோடு பேசினாரா செங்கோட்டையன்?” எடப்பாடி பழனிசாமி அதிருப்திக்கு என்ன காரணம்..?
Sengottaiyan : ”சசிகலாவோடு பேசினாரா செங்கோட்டையன்?” எடப்பாடி பழனிசாமி அதிருப்திக்கு என்ன காரணம்..?
Embed widget