மேலும் அறிய

TABCEDCO Loan Schemes: ஆண்களுக்கு ஜாக்பாட் - ரூ.15 லட்சம் வரை கடன், 5% மட்டுமே வட்டி - அள்ளி கொடுக்கும் தமிழக அரசு

TABCEDCO Loan Details in Tamil: பிற்படுத்தப்பட்டோருக்கான தமிழக அரசின் டாப்செட்கோ அமைப்பு வழங்கும், ஆண்களுக்கான கடன் திட்டம் குறித்து இந்த தொகுப்பில் அறியலாம்.

TABCEDCO  Loan Schemes: பிற்படுத்தப்பட்டோருக்கான தமிழக அரசின் டாப்செட்கோ அமைப்பு, அதிகபட்சமாக 15 லட்ச ரூபாயை ஆண்களுக்கு கடனாக வழங்குகிறது.

டாப்செட்கோ ஆண்களுக்கான சிறு கடன் திட்டம்:

  • சிறுகடன் வழங்கும் திட்டத்தின் கீழ் சுய உதவிக் குழுவில் உறுப்பினர்களாக உள்ள ஆடவருக்கு கடனுதவி வழங்கப்படுகிறது.
  • ஒரு குழுவில் அதிகபட்சம் 20 உறுப்பினர்கள் அனுமதிக்கப்படுவர்.
  • அதிகபட்ச கடன் தொகை ஒரு நபருக்கு : ரூ. 1,00,000
  • அதிகபட்ச கடன் தொகை ஒரு குழுவுக்கு : ரூ. 15,00,000

கடன் பங்குத் தொகை விவரம் பின்வருமாறு:

  • தேசிய பிற்படுத்தப்பட்டோர் நிதி மற்றும் வளர்ச்சி கழகத்தின் பங்கு : 90%
  • தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டுக் கழகத்தின் பங்கு : 05%
  • பயனாளியின் பங்கு : 05%
  • ஆண்டு வட்டி வீதம் - 5%
  • திரும்பச் செலுத்தும் காலம் 4 ஆண்டுகள்

விண்ணப்பதாரருக்கான தகுதிகள்:

  • மாநில (அல்லது) மத்திய பட்டியலில் உள்ளபடி பயனாளி பிற்படுத்தப்பட்டோர் / மிகப் பிற்படுத்தப்பட்டோர் / சீர்மரபினர் வகுப்பினராக பட்டியலில் உள்ளபடி இருக்க வேண்டும்.
  • குடும்ப வருமானம் ஆண்டொன்றுக்கு ரூ.3,00,000/-க்கும் மிகாமல் இருக்க வேண்டும்.
  • பயனடைவோரின் வயது வரம்பு 18 ஆண்டுகளுக்கு மேல் 60 வயதிற்குள் இருக்க வேண்டும்.
  • ஒரு குடும்பத்தில் ஒருவருக்கு மட்டுமே கடனுதவி வழங்கப்படும்.

விண்ணப்பிக்கும் முறை

கடன் விண்ணப்பப் படிவங்கள் பின்வரும் அலுவலகங்களில் இலவசமாக வழங்கப்படும்:

  • சென்னையில் உள்ள தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டுக் கழகத்தின் தலைமை அலுவலகம்.
  • மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் மற்றும் மண்டல மேலாளர்.
  • கூட்டுறவுச் சங்கங்களின் இணைப்பதிவாளர் அலுவலகங்கள்.
  • கூட்டுறவு கடன் சங்கங்கள் / வங்கிகள்.

அளிக்கப்பட வேண்டிய ஆவணங்கள்

விண்ணப்பதாரர்கள் கடன் விண்ணப்பப் படிவங்களை பூர்த்தி செய்து கீழ்க்காணும் ஆவண நகல்களுடன் சம்பந்தப்பட்ட மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் (ம) சிறுபான்மையினர் நல அலுவலர் / மண்டல மேலாளர், கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் அலுவலகம் / கூட்டுறவு வங்கிகளில் ஒப்படைக்க வேண்டும்.

  • சாதி, வருமான மற்றும் பிறப்பிடச் சான்றிதழ்.
  • முன்னணியில் உள்ள நிறுவனமொன்றிலிருந்து திட்டத்திற்கான மதிப்பீடு
  • திட்ட அறிக்கை (பெரிய திட்டமாக இருந்தால் மட்டும் ).
  • குடும்ப அட்டை (Ration card).
  • ஓட்டுநர் உரிமம் (போக்குவரத்து வாகனங்களுக்கு கடன் பெறுவதற்காக இருந்தால் மட்டும்).
  • நிதி உதவி பெறுவதற்கான ஆவணங்கள் / வங்கி கோரும் அடமானத்திற்குரிய ஆவணங்கள்.
  • ஆதார் அட்டை

கடன் வழங்கும் முறை

பயனாளிகளுக்கு கடன் தொகை வழங்குவதற்கும், வசூல் செய்வதற்கும், 

  • மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகள்/தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் / நகர கூட்டுறவு வங்கிகள்.
  • தமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் இணையம் ஆகியவை அங்கீகரிக்கப்பட்ட துணை முகவர்களாக செயல்படுகின்றன.

கூட்டுறவு வங்கிகளில் கடன் தொகை கோரி பெறப்படும் விண்ணப்பங்கள், சம்மந்தப்பட்ட கூட்டுறவு வங்கிகளில் பரிசீலனை செய்யப்படும். பயனாளியின் செயல்பாடு, தகுதி மற்றும் கடனை திருப்பி செலுத்தும் திறன் குறித்து ஆய்வு செய்து பின்னர் விண்ணப்பங்கள் மாவட்ட அளவில் கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் தலைமையிலான கூர்ந்தாய்வுக் குழுவின் முன் வைக்கப்பட்டு, அக்குழு கடன் வழங்குவதற்கான பரிந்துரையை வழங்கும். கடன் தொகையினை, திட்டத்தினைப் பொறுத்து, மாதாந்திரம்/காலாண்டு அடிப்படையில், சம்பந்தப்பட்ட வங்கிகளுக்குத் திரும்பச் செலுத்திட வேண்டும்.

அபராத வட்டி

கடன் தொகையினை தவணை தேதியில் திரும்பச் செலுத்தாதவர்களிடமிருந்து ஆண்டுக்கு 5% அபராத வட்டி வசூலிக்கப்படும்

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

தமிழே படிக்காத கல்வி அமைச்சர் மகன்..! ”இதுதான் உங்க மொழிப்பற்றா?” பொளக்கும் எதிர்க்கட்சிகள்!
தமிழே படிக்காத கல்வி அமைச்சர் மகன்..! ”இதுதான் உங்க மொழிப்பற்றா?” பொளக்கும் எதிர்க்கட்சிகள்!
மோடியின் விமானத்திற்கு தொழில்நுட்ப கோளாறு.. பதறிய பாதுகாப்பு அதிகாரிகள்.. பிரதமருக்கு என்னாச்சு?
மோடியின் விமானத்திற்கு தொழில்நுட்ப கோளாறு.. பதறிய பாதுகாப்பு அதிகாரிகள்.. பிரதமருக்கு என்னாச்சு?
TAHDCO Loan: 100 கோடி டார்கெட்.. கம்மி வட்டியில் கடன்.. பயனாளிகள் யார்?
TAHDCO Loan: 100 கோடி டார்கெட்.. கம்மி வட்டியில் கடன்.. பயனாளிகள் யார்?
Durai Murugan: ”கொலை செய்ய வந்தாலும் மன்னிப்பேன்; ஆனால் இதை..” - கொதித்தெழுந்த அமைச்சர் துரைமுருகன்
Durai Murugan: ”கொலை செய்ய வந்தாலும் மன்னிப்பேன்; ஆனால் இதை..” - கொதித்தெழுந்த அமைச்சர் துரைமுருகன்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Maipi clarke | கிழித்தெறியப்பட்ட மசோதா! ஹக்கா நடனமாடிய பெண் MP! வாயடைத்து போன நாடாளுமன்றம்Tindivanam train | ரயிலில் சிக்கிய 7 மாத குழந்தை! ஓடிவந்து காப்பாற்றிய மக்கள்! திக் திக் நிமிடங்கள்5th Class Student Question to Nirmala Sitharaman | கேள்வி கேட்ட சிறுவன்..அசந்து போன நிர்மலாMa Subramanian Issue | மா.சு-வை மாத்துங்க!அமைச்சராகும் எழிழன்? பரபரக்கும் சுகாதாரத்துறை

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
தமிழே படிக்காத கல்வி அமைச்சர் மகன்..! ”இதுதான் உங்க மொழிப்பற்றா?” பொளக்கும் எதிர்க்கட்சிகள்!
தமிழே படிக்காத கல்வி அமைச்சர் மகன்..! ”இதுதான் உங்க மொழிப்பற்றா?” பொளக்கும் எதிர்க்கட்சிகள்!
மோடியின் விமானத்திற்கு தொழில்நுட்ப கோளாறு.. பதறிய பாதுகாப்பு அதிகாரிகள்.. பிரதமருக்கு என்னாச்சு?
மோடியின் விமானத்திற்கு தொழில்நுட்ப கோளாறு.. பதறிய பாதுகாப்பு அதிகாரிகள்.. பிரதமருக்கு என்னாச்சு?
TAHDCO Loan: 100 கோடி டார்கெட்.. கம்மி வட்டியில் கடன்.. பயனாளிகள் யார்?
TAHDCO Loan: 100 கோடி டார்கெட்.. கம்மி வட்டியில் கடன்.. பயனாளிகள் யார்?
Durai Murugan: ”கொலை செய்ய வந்தாலும் மன்னிப்பேன்; ஆனால் இதை..” - கொதித்தெழுந்த அமைச்சர் துரைமுருகன்
Durai Murugan: ”கொலை செய்ய வந்தாலும் மன்னிப்பேன்; ஆனால் இதை..” - கொதித்தெழுந்த அமைச்சர் துரைமுருகன்
Karthigai 2024: பக்தர்களே! நாளை பிறக்கிறது முக்தி தரும் கார்த்திகை - இத்தனை விசேஷங்களா?
Karthigai 2024: பக்தர்களே! நாளை பிறக்கிறது முக்தி தரும் கார்த்திகை - இத்தனை விசேஷங்களா?
CM Stalin: ’’ஸ்டாலின் பெயரும் திராவிட அரசும் வரலாற்றில் என்றென்றும் நிலைத்திருக்கும்’’ முதல்வர் பெருமிதப் பேச்சு!
CM Stalin: ’’ஸ்டாலின் பெயரும் திராவிட அரசும் வரலாற்றில் என்றென்றும் நிலைத்திருக்கும்’’ முதல்வர் பெருமிதப் பேச்சு!
Kalaignar Centenary Hospital : கிண்டி HOSPITAL-ல் மீண்டும் பகீர்! உயிரிழந்த இளைஞர்.. ஆத்திரத்தில் உறவினர்கள்
Kalaignar Centenary Hospital : கிண்டி HOSPITAL-ல் மீண்டும் பகீர்! உயிரிழந்த இளைஞர்.. ஆத்திரத்தில் உறவினர்கள்
அப்செட்டில் அறிவாலயம்! தி.மு.க. கோட்டையில் ஓட்டை போடும் விஜய் - அப்படி என்ன நடந்தது?
அப்செட்டில் அறிவாலயம்! தி.மு.க. கோட்டையில் ஓட்டை போடும் விஜய் - அப்படி என்ன நடந்தது?
Embed widget