மேலும் அறிய
Advertisement
அஞ்சலக சேமிப்பு திட்டங்களில் எத்தனை வருடங்களில் பணத்தை இரட்டிப்பாக்கலாம் - விரிவான தகவல்கள் இதோ...!
Post Office Scheme: தபால் அலுவலகத் திட்டங்களில் உள்ள சிறப்பு என்னவென்றால், அதில் பணம் வைப்பது பாதுகாப்பானது, அத்துடன் நல்ல வட்டியும் அதில் கிடைக்கும். தபால் அலுவலகம் நுகர்வோருக்கு வேறு பல வசதிகளையும் வழங்குகிறது.
இப்போதெல்லாம் பணத்தை சேமிப்பதில் அனைவரும் அதிக ஆர்வம் காட்டுகின்றனர். விரும்புகின்றனர், சேமிப்பதால், அந்த பணம் தேவைப்படும் போது பயனுள்ளதாக இருக்கும். இதற்காக, மக்கள் பல்வேறு வகையான திட்டங்களில் பணத்தை முதலீடு செய்யத் தொடங்குகிறார்கள்.நாம் அனைவரும் கடினமாக உழைத்து பணம் சம்பாதிக்கும் சூழலில், நாம் சேமிக்கும் பணம் முற்றிலும் பாதுகாப்பானதாக உள்ளதா? என்பது முக்கியம். இன்று பணத்தை முதலீடு செய்வதன் மூலம் நல்ல லாபம் ஈட்டக்கூடிய சில திட்டங்களைப் பற்றிய தகவல்கள் இங்கு தரப்பட்டுள்ளது.
தற்போது பலவிதமான திட்டங்கள் மற்றும் சலுகைகள், பங்கு சந்தை மற்றும் வங்கிகளில் பணத்தை முதலீடு செய்கிறோம். ஆனால் தபால் அலுவலக திட்டங்களில் பணத்தை முதலீடு செய்வது பாதுகாப்பான வழி. தபால் அலுவலகத் திட்டங்களில் உள்ள சிறப்பு என்னவென்றால், அதில் பணம் வைப்பது பாதுகாப்பானது, அத்துடன் நல்ல வட்டியும் அதில் கிடைக்கும். இது மட்டுமல்லாமல், தபால் அலுவலகம் நுகர்வோருக்கு வேறு பல வசதிகளையும் வழங்குகிறது. தபால் அலுவலகத்தின் 9 திட்டங்களை பற்றிய தகவல்கள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளது. அதில் நீங்கள் முதலீடு செய்வதன் மூலம் உங்கள் பணத்தை இரட்டிப்பாக்கலாம்.
சுகன்யா சம்ரித்தி திட்டம் | Sukanya Samriddhi Scheme
உங்கள் மகளின் எதிர்காலத்தை நீங்கள் பாதுகாக்க விரும்பினால், தபால் அலுவலகத்தின் சுகன்யா சம்ரித்தி திட்டம் உங்களுக்கு பெரும் உதவியாக இருக்கும். இதன் கீழ், பணத்தை இரட்டிப்பாக்க சுமார் 9 ஆண்டுகள் மற்றும் 5 மாதங்கள் ஆகும். அஞ்சலகத்தின் இந்தத் திட்டத்தின் கீழ், ஆண்டுக்கு 7.6 சதவீத வட்டி கிடைக்கும்.
நேர வைப்பு திட்டம்
அஞ்சலகத் திட்டத்தில் பணத்தை முதலீடு செய்வதன் மூலம் இரட்டிப்பாக்க விரும்பினால், நேர வைப்புத் திட்டத்தின் விருப்பம் இதற்கு நல்லது. 1 முதல் 3 ஆண்டுகள் வரையிலான நேர வைப்புகளுக்கு ஆண்டுதோறும் 5.5 சதவிகிதம் வட்டி கிடைக்கும். இந்தத் திட்டத்தில் முதலீடு செய்வதன் மூலம், பணம் சுமார் 13 ஆண்டுகளில் இரட்டிப்பாகும். இது தவிர, 5 வருட கால வைப்புத்தொகைக்கு 6.7 சதவிகிதம் வட்டி கிடைக்கும், இதில் உங்கள் பணம் சுமார் 10 வருடங்கள் மற்றும் 8 மாதங்களில் இரட்டிப்பாகும்.
பொது வருங்கால வைப்பு நிதி (PPF திட்டம்)
PPF இல், 7.1 சதவீத வட்டி ஆண்டுதோறும் கிடைக்கும், இதன் கீழ் உங்கள் பணம் சுமார் 10 வருடங்கள் மற்றும் ஒரு மாதத்தில் இரட்டிப்பாகும். இதற்கு வரி விலக்கும் உண்டென்பதால் கூடுதல் சிறப்புடையதாக பார்க்கப்படுகிறது.
கிசான் விகாஸ் பத்ரா திட்டம் | Kisan Vikas Patra Scheme
கிசான் விகாஸ் பத்ரா திட்டம் ஆண்டுதோறும் 6.9 சதவீத வட்டி கிடைக்கும். இந்த தபால் அலுவலக திட்டத்தில் நீங்கள் பணத்தை முதலீடு செய்தால், உங்கள் பணத்தை 10 வருடங்கள் மற்றும் 4 மாதங்களில் இரட்டிப்பாக்கலாம்.
மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டம்
அஞ்சலகத்தின் இந்த சேமிப்புத் திட்டத்தின் கீழ், ஆண்டுதோறும் 7.4 சதவீத வட்டி வழங்கப்படுகிறது. இதன் கீழ், உங்கள் பணம் சுமார் 9 வருடங்கள் மற்றும் 7 மாதங்களில் இரட்டிப்பாகிறது. அஞ்சலக சேமிப்புகளில் அதிக வட்டியுடைய திட்டமாக இது பார்க்கப்படுகிறது.
மாதாந்திர வருவாய் திட்டம்
இந்த அஞ்சலகத் திட்டத்தின் கீழ், ஆண்டுக்கு 6.6 சதவீத வட்டி கிடைக்கும். இதில், உங்கள் பணம் சுமார் 10 வருடங்கள் மற்றும் 9 மாதங்களில் இரட்டிப்பாகிறது. மாத ஊதியம் போல ஒவ்வொரு மாதமும் வருவாய் வரும் வகையில் இந்த திட்டம் உள்ளது.
தேசிய சேமிப்பு சான்றிதழ் திட்டம்
இந்த திட்டத்தில் வட்டி ஆண்டுதோறும் 6.8 சதவிகிதத்தில் கிடைக்கும், இதில் முதலீடு செய்த 5 மாதங்களுக்குப் பிறகு சுமார் 10 வருடங்களுக்கு பணம் இரட்டிப்பாகும். கையிலிருக்கும் பணத்தை பாதுகாப்பான வழியில் முதலீடு செய்ய ஏற்றதாக இந்த திட்டம் இருக்கும்.
Also Read | Post Office MIS Scheme: மாதம்தோறும் வட்டி... அள்ளித்தரும் போஸ்ட் ஆஃபீஸ் மன்த்லி இன்கம் ஸ்கீம்!
சேமிப்பு வங்கி கணக்கு திட்டம்
அஞ்சலகத்தின் சேமிப்பு வங்கி கணக்கு திட்டத்தின் கீழ், ஆண்டுக்கு 4 சதவீதம் வரை வட்டி கிடைக்கும். இந்த வழியில், உங்கள் பணத்தை இரட்டிப்பாக்க சுமார் 18 ஆண்டுகள் ஆகும். இந்த அஞ்சலகத் திட்டத்தில் பணத்தை முதலீடு செய்வது மிகவும் பாதுகாப்பானதாகக் கருதப்படுகிறது.
தொடர் வைப்புத் திட்டம்
இந்த திட்டத்தின் வட்டி ஆண்டுக்கு 5.8 சதவீதம் ஆகும். இந்த வழியில் உங்கள் பணம் சுமார் 12 வருடங்கள் மற்றும் 4 மாதங்களில் இரட்டிப்பாகும். இவை போன்ற திட்டங்கள் அஞ்சலக சேமிப்பில் குறிப்பிட்ட கால இடைவெளிகளில் நமது சேமிப்புத் தொகையை பாதுகாப்பான வழியில் இரட்டிப்பாக்க உதவுகின்றன. வரவுக்கு ஏற்ற வகையில் திட்டமிட்டு நீங்களும் ஏதேனும் ஒரு திட்டத்தில் முதலீடு செய்து பயன்பெறுங்கள்.
சமீபத்திய வர்த்தக செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் வணிக செய்திகளைத் (Tamil Business News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
இந்தியா
உணவு
இந்தியா
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion