LIC Jeevan Labh Policy: எல்ஐசியின் ஜீவன் லாப் பிரீமியம் திட்டம் என்றால் என்ன? ஏன் பிரபலம் அடைகிறது?
காப்புத்தொகை (காப்புத் தொகையாக பாலிசியில் குறிப்பிடப்படும் அடிப்படை காப்புத்தொகை(அல்லது) பாலிசி காலத்தில் செலுத்தும் மொத்த பிரியத்தின் 105% மடங்கு.
எல்ஐசியின் ஜீவன் லாப் பிரீமியம் வரம்புள்ள எண்டோமென்ட் பிளான் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
இந்தத் திட்டத்திற்கும், பங்குச் சந்தைக்கும் எந்தத் தொடர்பும் இல்லாததால், பங்குச் சந்தையில் ஏற்படும் ஏற்ற இறக்கங்கள் உங்கள் முதலீட்டின் மீது எந்தப் பாதிப்பையும் ஏற்படுத்தாது. உங்கள் நிதி பாதுகாப்பாக இருக்கும். உங்கள் குழந்தைகளின் திருமணச் செலவு, கல்விக் கட்டணம், சொந்த வீடு வாங்கும் கனவு முதலானவற்றை நிறைவேற்ற இந்தத் திட்டத்தின் முதலீடு செய்யலாம். இதில் ஆயுள் காப்பீடும் இருப்பதால், மேலும் நன்மைகள் கிடைக்கின்றன.
முதிர்வு பயன் : காப்புத்தொகை + போனஸ்+ இறுதிக்கூடுதல் போனஸ்
இறப்பு பயன் : காப்புத்தொகை (காப்புத் தொகையாக பாலிசியில் குறிப்பிடப்படும் அடிப்படை காப்புத்தொகை (அல்லது) செலுத்தும் வருடாந்திர பிரீமியத்தின் 10 மடங்கு (அல்லது) பாலிசி காலத்தில் செலுத்தும் மொத்த பிரியத்தின் 105% மடங்கு. இவற்றில் எது அதிகமோ அத்தொகை வழங்கப்படும் + போனஸ் + இறுதிக் கூடுதல் போனஸ்.
இந்தத் திட்டத்தின் கீழ் முதலீடு செய்பவர் மரணமடைந்தால் அவரது குடும்பத்தினருக்குக் கூடுதல் பணமாக, மரணம் அடைந்ததற்கான தொகை, ஒவ்வொரு ஆண்டும் கூடுதலாக வழங்கப்படும் போனஸ் ஆகியவை வழங்கப்படும், இந்தத் திட்டம் முடிவடைவதற்குள் திட்டதாரர் தன் முதலீடு முழுவதுமாக செலுத்தியிருந்தால், மேலே கூறப்பட்டிருப்பவற்றைத் தாண்டி கூடுதலாக போனஸ் சேர்த்து வழங்கப்படும்.
ஜீவன் லாப் பாலிசி: இதில் 8 வயது முதல் 55 வயது உள்ளவர்கள் பங்கேற்கலாம்.
திட்ட காலம் | பிரிமீயம் செலுத்தும் காலம் | அதிகபட்ச நுழைவு வயது |
16 ஆண்டுகள் | 10 ஆண்டுகள் | 59 ஆண்டுகள் |
21 ஆண்டுகள் | 15 ஆண்டுகள் | 54 ஆண்டுகள் |
25 ஆண்டுகள் | 16 ஆண்டுகள் | 50 ஆண்டுகள் |
அதிகபட்ச முதிர்வு வயது: 75 ஆண்டுகள்
பிரீமியம் செலுத்தும் முறை: ஆண்டு, அரையாண்டு, காலாண்டு, ECS மற்றும் ESS
குறைந்தபட்ச காப்புத் தொகை : ரூ. 2 லட்சம் (அதற்கு மேல் ரூ. 10,000-ன் மடங்குகளில்)
அதிகபட்ச காப்புத் தொகை: உச்சவரம்பு எதுவும் இல்லை
அதிகபட்ச காப்புத் தொகைக்கான தள்ளுபடி:
- 5 லட்சம் : 1.25%
- 10 லட்சம் : 1.50%
- 15 லட்சம் : 1.75%
திட்டத்தின் சிறப்பம்சங்கள்:
- கல்வி மற்றும் திருமண காலத்திற்கு உபயோகமானது
- குறைவான காலத்திற்கு பணம் செலுத்தி நீண்ட கால காப்பீடுப் பயன் மற்றும் அதிக பலன்கள் பெறும் வாய்ப்பு
- 80cன் கீழ் வரி விலக்கு (ரூ. 1.50 லட்சம் வரை) முதிர்வு தொகைக்கு வரி விலக்கு உண்டு.
- விபத்து மற்றும் உடல் செயலிழப்பிற்கு ரூ. 1 கோடி வரை காப்புத் தொகை பெற்றுக் கொள்ளும் வசதி.
- கூடுதல் காப்பீடு ரைடர் பெறும் வசதி
- பாலிசி கடன் மற்றும் சரண்டர் வசதி உண்டு
- முன் தேதியிட்டு பாலிசி பெறும் வசதி உண்டு.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்