Income Tax Alert: மக்களே உஷார்..! உங்களது இந்த 5 பரிவர்த்தனைகள் வருமான வரித்துறையால் கண்காணிக்கபப்டும்..!
Income Tax Alert: பொதுமக்களின் குறிப்பிட்ட 5 பரிவர்த்தனைகளை, வருமான வரித்துறை தீவிரமாக கண்காணித்து வரி விதிப்புகளை மேற்கொண்டு வருகிறது.
Income Tax Alert: குறிப்பிட்ட வரம்பை மீறிய கார்ட் பேமண்ட்ஸ், யுபிஐ பரிவர்த்தனை உள்ளிட்டவை கண்காணிக்கப்படுகிறது.
வருமான வரித்துறையின் கண்காணிப்பு முறை:
அண்மைக்காலமாக வருமான வரித்துறையின், ரொக்கமில்லா பரிவர்த்தனைகளை கண்டுபிடிப்பது குறித்து மக்களிடையே தவறான கருத்து நிலவுகிறது. பரவலான நம்பிக்கைகளுக்கு மாறாக, பரிவர்த்தனைகளை ஆய்வு செய்ய வருமான வரித்துறை பல்வேறு மேம்பட்ட கருவிகளைப் பயன்படுத்துகிறது. வரி ஏய்ப்புகளை தவிர்க்க இந்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது. குறிப்பிட்ட வரம்புகளை மீறும் பரிவர்த்தனைகள், கார்ட் பேமண்ட்ஸ், UPI பரிவர்த்தனைகள் அல்லது ரொக்க டெபாசிட்கள் மற்றும் திரும்பப் பெறுதல்கள் குறித்து, வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களால் வரி அலுவலகங்களுக்கு உடனடியாக தகவல் தெரிவிக்கப்படும்.
அதிநவீன தரவு பகுப்பாய்வுகளைப் பயன்படுத்தி, வருமான வரித்துறை இந்தத் தகவலை பல்வேறு ஆதாரங்களுடன் சரிபார்த்து, அறிவிக்கப்பட்ட வருமானம் மற்றும் செலவுகளுக்கு இடையே உள்ள வேறுபாடுகளைக் கண்டறிய விரிவான நிதி விவரத்தை உருவாக்குகிறது. நிதி பரிவர்த்தனைகளை ஆராய்வதில் வருமான வரித்துறையின் செயலூக்கமான நடவடிக்கைகள், வரி ஏய்ப்பை எதிர்ப்பதற்கும் வெளிப்படைத்தன்மையை ஊக்குவிப்பதற்கும் அரசாங்கத்தின் உறுதிப்பாட்டை காட்டுகிறது.
அதன்படி வருமான வரித்துறையின் கவனத்தை ஈர்க்கும், ஐந்து முக்கிய பரிவர்த்தணைகள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.
பெரிய ரொக்க வைப்புத்தொகை:
சேமிப்புக் கணக்குகளில் ஒரு நிதியாண்டில் ரூ.10 லட்சத்துக்கும் அதிகமான ரொக்கம் வரவு வைக்கப்பட்டால், அது வருமான வரித்துறையின் கவனத்தை ஈர்க்கும். பல கணக்குகளில் வைப்புத்தொகை பரவியிருந்தாலும் கூட, வரம்புக்கு அப்பாற்பட்ட மொத்தத் தொகை ஆய்வுக்குஉட்படுத்தப்படும்.
நிரந்தர வைப்புத் தொகை:
ஒரு நிதியாண்டிற்குள் நிலையான வைப்புத்தொகையில் ரூ. 10-லட்சம் அதிகமாக வரவு வைக்கப்பட்டால், வரி ஏய்ப்பைத் தடுக்கும் முயற்சியாக, உங்களது நிதி ஆதாரம் தொடர்பாக வருமான வரித்துறை விசாரணை நடத்தலாம்.
பத்திரங்களில் முதலீடுகள்:
பங்குகள், மியூட்சுவல் ஃபண்ட்ஸ் மற்றும் ரூ.10 லட்சத்துக்கும் அதிகமான பத்திரங்களில் ரொக்க முதலீடுகள், வரி விதிப்புகளுக்கு வழிவகுக்கும். இது நிதி பரிவர்த்தனைகளில் வெளிப்படைத்தன்மையின் முக்கியத்துவத்தை எடுத்துக்காட்டுகிறது.
கிரெடிட் கார்ட் பில் பேமண்ட்ஸ்:
ரூ. 1 லட்சத்துக்கும் அதிகமான கிரெடிட் கார்ட் பில்களுக்கான பணப் பரிவர்த்தனைகள் ஆய்வுக்கு உட்பட்டவை ஆகும்.
சொத்து பரிவர்த்தனைகள்:
ரூ. 30 லட்சத்திற்கு மேல் சொத்து கையகப்படுத்தும்போது, உங்களது நிதி ஆதாரத்தை வெளிப்படுத்துவது கட்டாயமாகும். வரி ஏய்ப்பு மற்றும் பணமோசடி ஆகியவற்றைக் கட்டுப்படுத்தும் நோக்கத்துடன், குறிப்பிட்ட சில பகுதிகளில் கடுமையான வரம்புகளுடன் இது பின்பற்றப்படுகிறது.
இணக்க நடவடிக்கைகள் மற்றும் விளைவுகள்
அபராதம் மற்றும் விசாரணைகளைத் தவிர்ப்பதற்கு, பொதுமக்கள் வரி விதிகளுக்கு இணங்குவதை உறுதி செய்வது மிக முக்கியமானது. வங்கி அறிக்கைகள் மற்றும் முதலீட்டு பதிவுகள் உட்பட நிதி ஆதாரத்தை உறுதிப்படுத்தும் முறையான ஆவணங்கள், வருமான வரித்துறையின் விசாரணைகளை எதிர்கொள்ளும்போது முக்கியமானது.