Icici Bank Credit Card: ஐசிஐசிஐ கிரெடிட் கார்ட் இருக்கா? வங்கி வைத்த ஆப்பு, நாளை முதல் புதிய விதிகள் அமல்..!
Icici Bank Credit Card: ஐசிஐசிஐ வங்கி கிரெடிட் கார்ட் பயனாளர்களுக்கான புதிய விதிகள் நாளை முதல் அமலுக்க வரவுள்ளன.
Icici Bank Credit Card: ஐசிஐசிஐ வங்கி கிரெடிட் கார்ட் பயனாளர்களுக்கான புதிய விதிகளின், சாதக பாதகங்கள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.
ஐசிஐசிஐ வங்கி:
நாட்டில் கோடிக்கணக்கான பயனர்கள் கிரெடிட் கார்டுகளைப் பயன்படுத்துகின்றனர். மேலும் அவ்வப்போது அவற்றில் வரும் மாற்றங்கள், பயனாளர்கள் இடையே பெரும் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. நாட்டில் கிரெடிட் கார்ட் சேவைகளை வழங்கும் தனியார் வங்கிகளின் பெயர்களில் ஐசிஐசிஐ வங்கியும் உள்ளது. இந்நிலையில், உங்களிடம் ஐசிஐசிஐ வங்கி கிரெடிட் கார்ட் இருந்தால், இந்த செய்தி உங்களுக்கு முக்கியமானது. ஒரு நாளுக்குப் பிறகு, அதாவது நவம்பர் 15, 2024 முதல், ஐசிஐசிஐ வங்கிக் கிரெடிட் கார்டின் விதிகள் மாறப் போகிறது. உங்களது கிரெடிட் கார்ட் பயன்பாட்டில் மாற்றத்தை ஏற்படுத்தக் கூடிய பல விதிகள் இதில் உள்ளன.
ஐசிஐசிஐ கிரெடிட் கார்ட் விதிகள்:
- கல்வி பரிவர்த்தனைகளுக்கு கட்டணம் இல்லை
- தாமதமான கார்ட் கட்டணத்திற்கான கட்டணங்களில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன
- பயன்பாடு மற்றும் எரிபொருள் கொடுப்பனவுகளில் புதிய வகை கட்டணம்
கல்வி பரிவர்த்தனைகளுக்கு கட்டணம் இல்லை
இனி ஐசிஐசிஐ கிரெடிட் கார்ட் மூலம் சர்வதேச கல்வி அல்லது பள்ளி-கல்லூரி கட்டணம் செலுத்த கட்டணம் ஏதுமில்லை. இருப்பினும், மூன்றாம் தரப்பு பயன்பாடுகள் மூலம் நீங்கள் அத்தகைய கட்டணம் அல்லது கல்வி பரிவர்த்தனை செய்தால், 1 சதவிகித கட்டணம் செலுத்த வேண்டும்
நவ.15 முதல் தாமத கட்டணங்களில் மாற்றம்:
நவம்பர் 15 முதல் தாமதமாக செலுத்தும் கட்டணங்களில் மாற்றங்கள் அமலுக்கு வரவுள்ளன. அதன்படி இனி, ஐசிஐசிஐ வங்கி கிரெடிட் கார்டு பில் தாமதமாக செலுத்தும் கட்டணம் மாறும்.
- ரூ.101 முதல் ரூ.500- ரூ.100 கட்டணம்
- ரூ.501 முதல் ரூ.1,000- ரூ.500 கட்டணம்
- ரூ.1,001 முதல் ரூ.5,000- ரூ.600 கட்டணம்
- ரூ.5,001 முதல் ரூ.10,000- ரூ. 750 கட்டணம்
- ரூ.10,001 முதல் ரூ.25,000 - ரூ.900 கட்டணம்
- ரூ.25,001 முதல் ரூ.50,000 - ரூ.1100 கட்டணம்
- ரூ.50,000-க்கு மேல் - ரூ.1300 கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
அதேநேரம், நிலுவைத் தொகை ரூ.100 வரை இருந்தால், அதற்கு தாமதமாக கட்டணம் வசூலிக்கப்படாது என்பது குறிப்பிடத்தக்கது.
இதர கட்டண மாற்றங்கள்:
- கிரெடிட் கார்ட் மூலம் ரூ.50,000க்கு மேல் யூட்டிலிட்டி பேமெண்ட்டுகள் செய்தால், 1 சதவிகிதம் கட்டணம் செலுத்த வேண்டும்.
- ரூ.1000க்கு மேல் எரிபொருள் செலுத்தும் பரிவர்த்தனை செய்தால், அதற்கு 1 சதவ்கிதம் கட்டணம் செலுத்த வேண்டும்.
- நீட்டிக்கப்பட்ட கடன் மற்றும் ரொக்க முன்பணங்கள் ஒரு மாதத்திற்கு 3.75 சதவிகிதம் என்ற விகிதத்தில் காலாவதியான வட்டியை ஈர்க்கும்.
- அதே சமயம் வருடாந்திர வட்டி விகிதம் 4.5 சதவிகிதமாக இருக்கும்.