Provident Fund : தொழிலாளர் கணக்கில் சேகரிக்கப்படும் வைப்பு நிதி(PF) : எப்படி கணக்கிடப்படுகிறது?
இந்தியாவில் ஊதியம் பெறும் ஊழியர்களுக்குத் தொழிலாளர் வைப்பு நிதி நிறுவனத்தில் கணக்கு தொடங்கப்பட்டுள்ளது. இதன்மூலமாக தொழிலாளர்களின் ஓய்வுக்குப் பிறகு, அவர்களுக்கான வாழ்வாதாரம் உறுதி செய்யப்படுகிறது.
இந்தியாவில் ஊதியம் பெறும் பெரும்பாலான ஊழியர்களுக்குத் தொழிலாளர் வைப்பு நிதி நிறுவனத்தில் கணக்கு தொடங்கப்பட்டுள்ளது. இதன்மூலமாக தொழிலாளர்களின் ஓய்வுக்குப் பிறகு, அவர்களுக்கான வாழ்வாதாரம் உறுதி செய்யப்படுகிறது. ஒவ்வொரு மாதமும், தொழிலாளர்கள் ஊதியத்தில் இருந்து பிடித்தம் செய்யப்படும் குறிப்பிட்ட தொகை, அவரின் ஓய்வுக்குப் பிறகு, அவர்களுக்கே வழங்கப்படுகிறது. மேலும், ஒவ்வொரு மாதமும் அதே அளவிலான தொகையை தொழிலாளி பணியாற்றும் நிறுவனமும் அந்தக் கணக்குகளில் செலுத்துகிறது. மத்திய அரசின் முன்னணி ஓய்வூதியத் திட்ட நிறுவனமான தொழிலாளர் வைப்பு நிதி நிறுவனம் தொழிலாளர்களின் ஓய்வு நலனைப் பாதுகாக்கப் பயன்பட்டு வருகிறது.
தங்கள் அடிப்படைக் கூலியில் இருந்து சுமார் 12 சதவிகிதம் என்பதே வைப்பு நிதியாக கருதப்பட்டாலும், அது குறைந்தபட்சத் தொகை மட்டுமே. தொழிலாளர்கள் தங்களுக்கு விருப்பம் இருந்தால், தங்கள் ஊதியத்தில் இருந்து 100 சதவிகிதம் வரை வைப்பு நிதிக்காக ஒதுக்க முடியும். எனினும் அதே அளவை அவர் பணியாற்றும் நிறுவனமும் வழங்க வேண்டும் என்ற நிர்பந்தம் இல்லை. இந்த இரண்டு ஒதுக்கீடுகளும் கூட்டப்பட்டு, அதோடு வட்டித் தொகையும் சேர்க்கப்பட்டு தொழிலாளர்களுக்கு இறுதியில் வழங்கப்படுகிறது.
வைப்பு நிதி எவ்வாறு கணக்கிடப்படுகிறது?
தொழிலாளர் வைப்பு நிதி திட்டம் 1952 என்ற ஆவணத்தின் 60வது பத்தியில், வைப்பு நிதி ஒதுக்கீட்டுக்கான வட்டியைக் கணக்கிடுவதன் விதிகள் கொடுக்கப்பட்டுள்ளன. மேலும், வைப்பு நிதிக் கணக்கில் உள்ள தொகையின் அடிப்படையில் தொழிலாளர்களுக்கு வட்டி வழங்கப்படுவது குறிப்பிடத்தக்கது, தற்போது மத்திய அரசு தொழிலாளர் வைப்பு நிதி ஒதுக்கீடுகளுக்கு 8.5 சதவிகிதம் வட்டி வகிதம் அளித்து வருகிறது.
வைப்பு நிதியின் கணக்கீடு என்பது மூன்று விவகாரங்களின் அடிப்படையில் மேற்கொள்ளப்படுகிறது. கணக்கைத் தொடங்கும் போது இருக்கும் தொகை, ஆண்டு முழுவதும் செலுத்தப்படும் தொகை, ஆண்டு முழுவதும் வெளியில் எடுக்கப்படும் தொகை ஆகியவற்றின் அடிப்படையில் வைப்பு நிதி கணக்கிடப்படுகிறது. ஆண்டு இறுதியில் வைப்பு நிதிக் கணக்கில் இருக்கும் தொகையின் அடிப்படையில் 12 மாதங்களுக்கான வட்டி செலுத்தப்பட்டு, அந்த ஆண்டில் வெளியில் எடுக்கப்பட்ட தொகையின் அளவு அதில் இருந்து குறைக்கப்படுகிறது.
வைப்பு நிதியைக் கணக்கிடும் ஃபார்முலா!
ஒவ்வொரு நிதியாண்டும் மத்திய அரசு வட்டி விகிதத்தை அறிவித்த பிறகும், நிதியாண்டு முடிவடையும் போதும், தொழிலாளர் வைப்பு நிதி நிறுவனம் அந்தந்த மாதங்களுக்கு ஏற்ப வைப்புத் தொகையைக் கணக்கிடுகிறது. அதன் அடிப்படையில் அந்த முழு ஆண்டுக்கும் ஏற்ப வட்டி சேர்க்கப்படுகிறது. அதனைத் தொடர்ந்து வட்டி விகிதத்தோடு பெருக்கப்பட்டு, அது 1200 என்ற எண்ணால் வகுக்கப்படுகிறது.
உதாரணமாக, வட்டி விகிதம் 8.1 சதவிகிதம் என்றாலும், மாதந்தோறும் செலுத்தப்பட்ட 10 லட்சம் ரூபாய் என்பதாக இருந்தால், 1104740x 8.1/1200= Rs 6,750 என்ற கணக்கில் வட்டி வழங்கப்படும்.