Car Loan Interest Rate: லோன் போட்டு கார் வாங்க திட்டமா? - எந்த வங்கியில் குறைந்த வட்டியில் கடன் கிடைக்கும்?
Car Loan Interest Rate 2024: கார் லோனிற்கு எந்த வங்கியில் எவ்வளவு வட்டி வசூலிக்கப்படுகிறது என்ற விவரங்கள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.
Car Loan Interest Rate 2024: வங்கிகளில் கடன் வாங்கி கார் வாங்க விரும்புவோர், குறைந்த வட்டியில் எந்த வங்கியில் கடன் வாங்கலாம் என்ற விவரங்களை இந்த தொகுப்பில் அறியலாம்.
கார் லோன்:
அன்றாட பயன்பாட்டிற்காக கார் வாங்க வேண்டும் என்பது பலரின் கனவாக உள்ளது. அதை நிறைவேற்ற பலரது முதன்மையான திட்டமாக இருப்பது, வங்கிகளில் கடன் வாங்குவது தான். அப்படி கடன் வாங்குபவர்கள் முதலில் கவனிக்க வேண்டியது வங்கிகளுக்கான கடன் விகிதம் தான். அதன் அடிப்படையில் தான் நாம் பெற்ற கடனுக்கு, மொத்தமாக எவ்வளவு வட்டி செலுத்த வேண்டும் என்பது கணக்கிட முடியும். அந்த வகையில் இந்தியாவில் உள்ள முக்கியமான வங்கிகளில், கார் லோனுக்கு விதிக்கப்படும் வட்டி விகிதம் என்ன என்பது கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.
SBI Car Loan:
எஸ்பிஐ கார் கடன் வட்டி விகிதம் 8.85% முதல் 9.80% வரை மாறுபடும். இது ஒரு வருட மார்ஜினல் காஸ்ட் ஆஃப் லெண்டிங் ரேட் (MCLR) என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மின்சார கார்களுக்கான வட்டி விகிதம் 8.75% முதல் 9.45% வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த வட்டி விகிதம் கிரெடிட் ஸ்கோரைப் பொறுத்து விகிதங்கள் மாறுபடும். 800 மற்றும் அதற்கு மேல் உள்ள கிரெடிட் ஸ்கோருக்கு, 3-5 ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்திற்கு 8.85% வட்டியாக வசூலிக்கப்படுகிறது. 775 - 799 வரையிலான கிரெடிட் ஸ்கோருக்கு, 9% வட்டி விதிக்கபப்டுகிறது. 757-774க்கு இடைப்பட்ட கிரெடிட் ஸ்கோருக்கு வங்கி 9.10% வட்டியை வசூலிக்கின்றன.
HDFC Bank car loan:
8.75% வட்டி விகிதத்தில் எச்டிஎஃப்சி கார் லோன் வழங்குகிறது. HDFC வங்கி ஆட்டோமொபைல் லோன்கள் மூலம், 25 லட்சம் வரை வாகனக் கடனைப் பெறலாம். உங்களின் புதிய காருக்கான கடனில் 100% வரை ஆன்-ரோட் ஃபைனான்ஸை அனுபவிக்க முடியும். குறிப்பிட்ட மாடல் கார்களுக்கு 100% ஆன்-ரோட் நிதியுதவியை HDFC வங்கியில் இருந்து பெறமுடியும்.
ICICI Bank car loan:
CIBIL ஸ்கோர் மற்றும் கார் பிரிவின் அடிப்படையில் 12-35 மாதங்களுக்கு இடைப்பட்ட காலத்திற்கு 10.20% முதல் கார் லோனை ஐசிஐசிஐ வங்கி வழங்குகிறது. அதேநேரம், சிபில் ஸ்கோர் மற்றும் கார் மாடல் அடிப்படையில் 9.10 சதவிகித வட்டியில் லோன் வழங்கப்படுகிறது. அதாவது, உங்கள் கார் லோனின் திருப்பி செலுத்தும் காலம் குறுகியதாக இருந்தால், கார் கடனுக்கான வட்டி விகிதம் நீண்ட காலத்துடன் ஒப்பிடும்போது அதிகமாக இருக்கும்.
Canara Bank car loan:
15 லட்சம் வரையிலான கார் லோனிற்கு கனரா வங்கி 9.20 முதல் 11.95 சதவிகிதம் வரையில் வட்டி விதிக்கிறது. கனரா வங்கி புதிய வாகனத்திற்கு 90 சதவிகிதம் வரை நிதியுதவி வழங்குகிறது.
Axis Bank car loan:
ஆக்சிஸ் வங்கி ரூ.1 லட்சத்தில் தொடங்கி 100% வரையிலான கார் கடனை வழங்குகிறது. 36 மாதங்கள் வரையிலான காலத்திற்கான வட்டி விகிதம் 9.20% முதல் 13.85% வரை மாறுபடும். வங்கி செயலாக்கக் கட்டணமாக ரூ.3500-ரூ.12000 மற்றும் ஆவணக் கட்டணம் ரூ.700 வரை வசூலிக்கப்படுகிறது.