அடிக்கடி ஏடிஎம்மில் பணம் எடுப்பவரா? இதை கவனியுங்கள்.. ஜனவரி 1 முதல் கட்டண உயர்கிறது!
வாடிக்கையாளர்கள் வங்கி கணக்கு வைத்திருக்கும் அதே வங்கி ஏடிஎம்களில் நிர்ணயிக்கப்பட்ட முறைகளை தாண்டி பணம் எடுத்தால், மாதம் 20 ரூபாய் தற்போது கூடுதலாக வசூலிக்கப்பட்டு வருகிறது.
![அடிக்கடி ஏடிஎம்மில் பணம் எடுப்பவரா? இதை கவனியுங்கள்.. ஜனவரி 1 முதல் கட்டண உயர்கிறது! ATM cash withdrawals to become expensive from January 1, 2022 அடிக்கடி ஏடிஎம்மில் பணம் எடுப்பவரா? இதை கவனியுங்கள்.. ஜனவரி 1 முதல் கட்டண உயர்கிறது!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/12/07/80ea8c8ae2dd5bbe6ac7ed83b4696218_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
வங்கி ஏடிஎம்களில் ஒவ்வொரு மாதமும் குறிப்பிட்ட முறை மட்டுமே கட்டமின்றி வாடிக்கையாளரகளால் பணம் எடுக்க முடியும். நிர்ணயிக்கப்பட்ட வரம்பைவிட அதிக முறை பணம் எடுத்தால், அதற்கு கூடுதல் கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகின்றது. இந்நிலையில், அதிக முறை பணம் எடுக்கும் வாடிக்கையாளர்களிடம் இருந்து வசூலிக்கப்படும் கட்டணம் 2022 ஜனவரி 1-ம் தேதி முதல் மேலும் அதிகரிக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
வாடிக்கையாளர்கள் வங்கி கணக்கு வைத்திருக்கும் அதே வங்கி ஏடிஎம்களில் நிர்ணயிக்கப்பட்ட முறைகளை தாண்டி பணம் எடுத்தால், ஒவ்வொரு பண வர்த்தனைக்கும் மாதம் 20 ரூபாய் தற்போது கூடுதலாக வசூலிக்கப்பட்டு வருகிறது. இனி அடுத்த மாதம் மூலம், இந்த கட்டணம் 1 ரூபாய் அதிகரித்து 21 ரூபாயாக வசூலிக்கப்பட உள்ளது.
இதனால், வங்கி கணக்கு வைத்திருக்கும் அதே வங்கி ஏடிஎம்களில் இருந்து ஒவ்வொரு மாதமும் ஐந்து பண பரிவர்த்தனைகளை இலவசமாக செய்து கொள்ளலாம் என தெரிவிக்கப்ப்ட்டுள்ளது. இந்த ஐந்து முறையை தாண்டிய ஒவ்வொரு பண பரிவர்த்தனைகளுக்கு குறிப்பிட்டுள்ள கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படும்.
வேறு வங்கி ஏடிஎம்களுக்கான கட்டணம்:
மேலும், வேறு வங்கி ஏடிஎம்களில் பணம் எடுப்பதற்கான கட்டண விதிமுறைகளிலும் சில மாற்றங்கள் கொண்டு வரப்பட்டுள்ளது. சென்னை, கோவை, மதுரை, சேலம், திருச்சி உள்ளிட்ட தமிழ்நாட்டைச் சேர்ந்த மெட்ரோ நகரங்களில் உள்ள வேறு வங்கி ஏடிஎம்களில் பண பரிவர்த்தனை செய்ய, மூன்று முறை இலவசமாகவும் அதற்கும் மேற்பட்ட முறை பரிவர்த்தனை செய்தால் கட்டணமும் வசூலிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதே போல, மெட்ரோ அல்லாத வேறு வங்கி ஏடிஎம்களில் பண பரிவர்த்தனை செய்ய, ஐந்து முறை இலவசமாகவும் அதற்கும் மேற்பட்ட முறை பரிவர்த்தனை செய்தால் கட்டணமும் வசூலிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Headlines Today, 7 Dec: நிலவில் மர்மம்... ரூ.50 ஆயிரம் நிவாரணம்... 22 பேர் பலி... இன்னும் பல!#HeadlinesToday #Morningheadlineshttps://t.co/VHDQwSyfIX
— ABP Nadu (@abpnadu) December 7, 2021
மேலும் இன்றைய முக்கியச் செய்திகள்...
ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)