Paytm Shares Down: பேடிஎம் நிறுவனத்தின் பங்கு விகிதம் 13 சதவீதம் வரை சரிந்தது!
இன்று முதலீட்டாளர்களுக்கான Lock இன் பீரியட் முடிவுற்ற நிலையில், தேசிய பங்கு சந்தையில் பங்கு விகிதம் 13.37 சதவீதம் (1,296.00) சரிந்தது. மும்பை பங்கு சந்தையில் 13.37% (1297.70) சரிந்தது
முதலீட்டாளர்களுக்கான Lock இன் பீரியட் முடிவுற்ற நிலையில்,பே.டிஎம் நிறுவனத்தின் பங்கு விகிதம் 13 சதவீதம் வரை சரிந்தது.
கடந்த, நவம்பர் 18-ம் தேதி காலை 10 மணிக்கு இந்த பங்கின் முதல் வர்த்தகம் தொடங்கியது. 10 சதவீதம் அளவுக்கு சரிவுடன் தொடங்கிய இந்த பங்கு அதிகம் 26 சதவீதம் வரை சரிந்தது. இந்த சரிவின் காரணமாக ஒரே நாளில் 38000 கோடி ரூபாய் வரை முதலீட்டாளர்களுக்கு இழப்பு ஏற்படிருக்கிறது.வர்த்தகத்தை தொடங்கும் முன்பு இந்த நிறுவனத்தின் சந்தை மதிப்பு 1.39 லட்சம் கோடியாக இருந்தது. ஆனால் முதல் நாள் வர்த்தகத்தில் 1.01 லட்சம் கோடியாக மட்டுமே இருக்கிறது.
இன்று முதலீட்டாளர்களுக்கான Lock இன் பீரியட் முடிவுற்ற நிலையில், தேசிய பங்கு சந்தையில் பங்கு விகிதம் 13.37 சதவீதம் (1,296.00) சரிந்தது. மும்பை பங்கு சந்தையில் 13.37% (1297.70) சரிந்தது.
கடந்த சில மாதங்களாக வெளியாக ஐபிஓகள் அனைத்தும் லாபத்தை கொடுத்ததால், ஐபிஓ குறித்து முதலீட்டாளர்களிடையே பெரும் எதிர்பார்ப்பு இருந்தது. பல மடங்கு அளவுக்கு விண்ணப்பங்கள் குவிந்தன. ஆனால் பேடிஎம் நிறுவனத்துக்கு முதலீட்டாளர்களிடம் எதிர்பார்ப்பு ஏதும் இல்லை. அப்போதே தள்ளுபடியில்தான் இந்த பங்கு வர்த்தகத்தை தொடங்கும் என பல பங்குச்சந்தை வல்லுநர்களும் தெரிவித்தனர். ஆனால் 26 சதவீத சரிவு என்பது கொஞ்சம் அதிகமே.
டிஜிட்டலுக்கு வந்த முதல் நிறுவனமாக இருக்கலாம், பெரிய வாடிக்கையாளர்களை வைத்திருக்கலாம். ஆனால் இந்த நிறுவனம் இன்னுமும் அதிக நஷ்டத்தை சந்தித்து வருவதால் சரிந்திருப்பதாக பங்குச்சந்தை வல்லுநர்கள் ஒரு மனதாக தெரிவித்திருக்கிறார்கள்.
IPOs This Week : ஐபிஓக்களின் இந்த வார வருகை: வரவிருக்கும் நான்கு நிறுவனங்களின் வெளியீட்டு விவரம்!
இந்த நிறுவனத்தின் பிஸினஸ் மாடல் கவனம் இல்லாமல் கட்டமைக்கப்பட்டிருப்பதாக புரோக்கிங் நிறுவனம் தெரிவித்திருக்கிறது. மேலும் பேடிஎம் செய்யும் அனைத்து தொழில்களையும், போட்டி நிறுவனக்கள் செய்துவருகின்றன. அதனால் வரும் காலத்திலும் பெரிய போட்டி இருக்கும் என்றே தெரிவித்திருக்கிறது. போட்டி காரணமாக லாபம் சம்பாதிப்பதற்கு கூடுதல் காலம் எடுத்துக்கொள்ளும் என்றே தெரிகிறது. இந்த சரிவு அதன் கடந்த கால வீழ்ச்சியுடன் ஒப்பிடப்படுகிறது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்