Time 100 : `டைம்’ இதழின் டாப் 100 தொழில் நிறுவனங்கள் பட்டியலில் இடம்பெற்ற இந்தியப் பெண் தொழிலதிபர்!
சர்வதேச அளவில் புகழ்பெற்றுள்ள `டைம்' இதழ் வெளியிட்டுள்ள உலகின் டாப் 100 செல்வாக்கு மிக்க நிறுவனங்களின் பட்டியலில் இந்தியாவைச் சேர்ந்த ஃபால்குனி நய்யாரின் `நீகா’ ஃபேஷன் நிறுவனம் இடம்பெற்றுள்ளது.
சர்வதேச அளவில் புகழ்பெற்றுள்ள `டைம்' இதழ் வெளியிட்டுள்ள உலகின் டாப் 100 செல்வாக்கு மிக்க நிறுவனங்களின் பட்டியலில் இந்தியாவைச் சேர்ந்த ஃபால்குனி நய்யாரின் `நீகா’ ஃபேஷன் நிறுவனம் இடம்பெற்றுள்ளது.
தானாக முயன்று பில்லியனர்களான பெண் தொழிலதிபர்களின் டாப் 10 பட்டியலில் சமீபத்தில் இடம்பெற்றிருந்தார் ஃபால்குனி நய்யார். அவரின் சொத்து மதிப்பு மொத்தமாக 7.6 பில்லியன் அமெரிக்க டாலர் எனக் கூறப்பட்டுள்ளது. மேலும், ஹுருன் ஆய்வு நிறுவனம் நடத்தியுள்ள ஆய்வுகளின் அடிப்படையில், பெண் பில்லியனர்கள் பட்டியலில் புதிதாக நுழைந்திருப்பவர் ஃபால்குனி நய்யார்.
`டைம்’ நிறுவனம் வெளியிட்டிருந்த குறிப்பில், `இந்தியப் பெண்களுக்கு ஊக்கம் அளிக்கும் விதமாக தொழிலதிபர் ஃபால்குனி நய்யார் தொடங்கிய நீகா நிறுவனம், சுமார் 10 ஆண்டுகளில் இந்தியாவின் மிகப்பெரிய காஸ்மெடிக்ஸ் மற்றும் லைஃப்ஸ்டைல் சார்ந்த பொருள்களை விற்பனை செய்யும் முன்னணி பிராண்ட்களுள் ஒன்றாக மாறியிருக்கிறது’ எனக் கூறப்படுள்ளது.
மேலும், அதில் `தோராயமாக சுமார் 10 மில்லியன் மக்கள் நீகா தயாரிப்புகளை வாங்குகின்றனர். மேலும், கடந்த நவம்பர் மாதம் விற்பனை செய்யப்பட்ட ஐ.பி.ஓ பங்குகளின் மூலமாக நீகா நிறுவனம் சுமார் 700 மில்லியன் அமெரிக்க டாலர்களை 13 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பீட்டில் பெற்றுள்ளது. இதன்மூலம், இந்தியாவின் பெண் தொழிலதிபர்களுள் தன் உழைப்பால் முன்னேறியவராகக் கருதப்படுவோரில் அதிக சொத்து மதிப்பு கொண்டவராக மாறினார் நீகா நிறுவனர் ஃபால்குனி நய்யார். நீகா நிறுவனத்தை விரிவு செய்வது, விளம்பரப்படுத்துவது முதலான பணிகளின் காரணமாக மொத்த லாபத்தில் சுமார் 23 சதவிகித இழப்பைப் பெற்றிருந்தாலும், அடுத்த ஆண்டில் வருவாய் சுமார் 65 சதவிகிதம் அதிகரித்து, மொத்தமாக சுமார் 376 மில்லியன் அமெரிக்க டாலர் பணம் ஈட்டியுள்ளது நீகா’ எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
நம் எதிர்காலத்தை உருவாக்கும் தொழில்களும், தொழில்துறையின் தலைவர்களும் யார் என்பதற்குப் பதில் தேடும் விதமாக இந்த ஆண்டின் `டைம் 100’ நிறுவனங்களின் பட்டியல் உருவாக்கப்பட்டுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.
`இந்தப் பட்டியலை உருவாக்குவதற்காக, `டைம்’ இதழ் சுகாதாரம், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம் முதலான துறைகளில் இருந்து பரிந்துரைகளை சர்வதேச அளவிலான செய்தி ஆசிரியர்கள், செய்தியாளர்கள் ஆகியோரிடமும், துறைசார் வல்லுநர்களிடமும் பெறுகிறோம். அதன் பிறகு, ’ என `டைம்’ இதழ் இந்தப் பட்டியலைப் பற்றி தெரிவித்துள்ளது. தொடர்ந்து காலப் பொருத்தம், தாக்கம், புதுமை, தலைமைப் பண்பு, லட்சியம், வெற்றி முதலான காரணிகளின் அடிப்படையில் வெவ்வேறு சமூகப் பின்னணிகளைக் கொண்ட 100 தொழில் நிறுவனங்களின் பட்டியல் தயாரிக்கப்பட்டு எதிர்காலத்திற்குப் பாதை வகுக்கப்படுகிறது’ என இந்தப் பட்டியலை உருவாக்குதைக் குறித்து `டைம்; இதழ் தெரிவித்துள்ளது.