Markets Down: சரிவிலே தொடங்கிய பங்குச் சந்தை நிலவரம்: ஏற்றத்துடன் காணப்படும் ஏர்டெல் பங்குகள்.. இது மார்கெட் சீக்ரெட்ஸ்..
இன்று காலை தொடங்கிய பங்குச் சந்தைகளில் சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி ஆகிய இரண்டு புள்ளிகளும் சரிவிலே தொடங்கின. ஆனால் ஏர்டெல் நிறுவனத்தின் பங்குகள் ஏற்றத்தில் காணப்பட்டன.
சரிவிலே தொடங்கிய பங்குச் சந்தைகள்
வாரத்தில் இரண்டாம் நாளான பங்குச் சந்தையில் சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி ஆகிய இரண்டு புள்ளிகளும் சரிவிலே தொடங்கின.
மும்பை பங்குச் சந்தை:
மும்பை பங்குச் சந்தையின் குறியீடான சென்செக்ஸ் இன்ரு தொடக்கத்திலே 180.47 புள்ளிகள் குறைந்து 52,666.23 புள்ளிகளாக மேலும் குறைந்துள்ளது. நேற்று சென்செக்ஸானது 1,457 புள்ளிகள் சரிந்து 52,846 ஆக குறைந்துள்ளது.
Sensex 180.47 points down, trading at 52,666.23; Nifty declines 50.70 points to 15,723.70 pic.twitter.com/3n6IntfHbr
— ANI (@ANI) June 14, 2022
தேசிய பங்குச் சந்தை:
தேசிய பங்குச் சந்தையின் குறியீடான நிஃப்டி இன்று தொடக்கத்திலே 50.70 புள்ளிகள் குறைந்து 15,723.70 புள்ளிகளாக மேலும் குறைந்துள்ளது. நேற்று நிஃப்டியானது 427 புள்ளிகள் சரிந்து 15,774 ஆக குறைந்துள்ளது.
என்எஸ்இ- பட்டியலிடப்பட்ட நிறுவனங்கள் நிலவரம்:
என்எஸ்இ-ல் பட்டியலிடப்பட்ட நிறுவனங்களில் பவர் கிரிட், ஏர்டெல், என்டிபிசி, மஹிந்திரா & மஹிந்திரா மற்றும் டாடா ஸ்டீல் ஆகியவை அதிக லாபம் ஈட்டியுள்ளன, அதே நேரத்தில் ஏசியன் பெயிண்ட், டெக் மஹிந்திரா, எச்டிஎஃப்சி ட்வின்ஸ் மற்றும் டாடா மோட்டார்ஸ் ஆகியவை அதிக நஷ்டத்தில் உள்ளன.
பிஎஸ்இ- பட்டியலிடப்பட்ட நிறுவனங்கள் நிலவரம்:
பிஎஸ்இ-ல் பட்டியலிடப்பட்ட நிறுவனங்களில் பவர் கிரிட், ஏர்டெல், மஹிந்திரா & மஹிந்திரா, என்டிபிசி, டாடா ஸ்டீல், பஜாஜ் ஃபின்செர்வ், லார்சன் அண்ட் டூப்ரோ, இந்துஸ்தான் யூனிலீவர் மற்றும் நெஸ்லே இந்தியா ஆகியவை அதிக லாபம் ஈட்டியுள்ளன, அதே நேரத்தில் ஏசியன் பெயிண்ட், டெக் மஹிந்திரா, இண்டஸ்இண்ட் வங்கி, எச்டிஎஃப்சி ட்வின்ஸ், டைட்டன், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் மற்றும் மாருதி சுசூகி ஆகியவை அதிக லாபம் ஈட்டியுள்ளன.
லாபத்தில் ஏர்டெல்:
தொலைத்தொடர்பு நிறுவனமான ஏர்டெல் சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி ஆகிய இரண்டு புள்ளிகளிலும் ஏற்றத்துடன் லாபத்தில் உள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு சரிவில் காணப்பட்ட ஏர்டெல் நிறுவனத்தின் பங்குகள், தற்போது லாபத்தில் இருப்பது, ஏர்டெல் நிறுவனத்தில் முதலீடு செய்த முதலீட்டாளர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Also Read: Gold, Silver Price : அதிரடியாக குறைந்த தங்கம் விலை.. சேமிக்கணுமா.. இன்னைக்கு புறப்படுங்க மக்களே..!
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்