LPG Cylinder | IMPS பரிவர்த்தனை மாற்றம் முதல் சிலிண்டர் விலை வரை.. பிப்ரவரி மாத மாற்றங்கள் என்னென்ன?
மாதத்தின் முதல் நாளான இன்று சிலிண்டர் விலையில் மாற்றம் செய்யப்பட்டும் வாய்ப்பு உள்ளது.
மத்திய பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்படுகிறது. இந்தச் சூழலில் பல்வேறு பொருட்களின் விலைகளில் மாற்றம் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஒவ்வொரு மாதம் முதல் நாளன்று ஒரு சில பொருட்களின் விலை மற்றும் ஒரு சில சேவைகளுக்கான விலை மாற்றங்கள் இருப்பது வழக்கம். அந்தவகையில் தற்போது பிப்ரவரி முதல் நாளில் சில பொருட்கள் மற்றும் சேவைகளுக்கான விலை மாற்றங்கள் நடைபெற்றுள்ளன. அவை என்னென்ன?
எஸ்பிஐ ஐஎம்பிஎஸ் பரிமாற்றம்:
எஸ்பிஐ வங்கி வாடிக்கையாளர்களுக்கு இன்று முதல் ஐஎம்பிஎஸ் முறையில் ஒரு முக்கிய மாற்றம் ஏற்பட்டுள்ளது. அதாவது இனிமேல் எஸ்பிஐ வாடிக்கையாளர்கள் தங்களுடைய கணக்கிலிருந்து 2 லட்சத்திற்கு பதிலாக 5 லட்சம் வரை ஐஎம்பிஎஸ் மூலம் பணம் பரிமாற்றம் செய்ய முடியும். மேலும் இந்த வகை பரிமாற்றத்திற்கு 20 ரூபாய் மற்றும் ஜிஎஸ்டி சேர்த்து கூடுதல் வரிகள் விதிக்கப்படும் என்று எஸ்பிஐ தெரிவித்துள்ளது. எனினும் 2 லட்சம் ரூபாய் வரை ஐஎம்பிஎஸ் மூலமாக பரிவர்த்தனை செய்பவர்களுக்கு எந்தவித கூடுதல் செலவும் இருக்காது.
பங்க் ஆஃப் பரோடா:
பங்க் ஆஃப் பரோடா வங்கியின் வாடிக்கையாளர்களுக்கு காசோலை பணப் பரிவர்த்தனைகளுக்கு இன்று முதல் புதிய விதிகளை அறிவித்துள்ளது. அதாவது அந்த வங்கியின் வாடிக்கையாளார்கள் 10 லட்சம் ரூபாய்க்கு மேல் காசோலை வழங்கினால் அதை பாசிட்டிவ் பே என்ற தளத்தில் சென்று உறுதி செய்ய வேண்டும். அப்படி செய்யாத பட்சத்தில் அந்த காசோலை பரிவரித்தனைகள் செல்லுபடியாகாது என்று வங்கி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிலிண்டர் எரிவாயு விலை:
ஒவ்வொரு மாதமும் முதல் நாளில் சமையல் சிலிண்டர் எரிவாயுவின் விலையில் மாற்றம் செய்யப்படுவது வழக்கம். அந்தவகையில் கடந்த மாதம் வரை சென்னையில் சிலிண்டர் எரிவாயுவின் விலை 915 ரூபாயாக இருந்து வருகிறது. இந்த விலையில் மாற்றம் உள்ளதா என்பது இன்று தெரியவரும். விலையில் மாற்றம் எதுவும் இல்லாத பட்சத்தில் ஒரு வீட்டு உபயோகத்திற்கான ஒரு சிலிண்டரின் விலை 915 ரூபாயாக தொடர்ந்து நீடிக்கும்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
மேலும் படிக்க: மாதத்தின் முதல் நாளன்று பெட்ரோல், டீசல் நிலவரம் இதுதான்..