LIVE | Kerala Lottery Result Today (13.11.2025): லாட்டரி மழை கொட்டுமா? தமிழகத்தில் தடை, கேரளாவில் சூடுபிடித்த விற்பனை!
Kerala Lottery Result Today LIVE: இன்று (நவம்பர் 13, 2025) காருண்யா லாட்டரிக்கான குலுக்கல் நடைபெற உள்ளது. இதில் வெற்றி பெறுவோருக்கான விவரங்களை இங்கேயே அறியலாம்.
LIVE

Background
Kerala Lottery Result Today LIVE Tamil (13.11.2025): தமிழகத்தில் தடை செய்யப்பட்ட லாட்டரி விற்பனை கேரளாவில் மிகவும் பிரபலமாக உள்ளது. கேரளா செல்லும் அனைவருமே, பெரும்பாலான இடங்களில் லாட்டரி கடைகளை அதிக அளவில் காண முடியும். ரயிலிலும் டிக்கெட் விற்பனை ஜோராக நடைபெறும்.
தமிழ்நாட்டில் இருந்து கேரளா செல்லும் சுற்றுலா பயணிகள் சிலர், மாநில எல்லையைத் தாண்டி லாட்டரி டிக்கெட்டுகளை வாங்கி செல்கின்றனர். கேரள அரசே அங்கு லாட்டரி விற்பனையை நடத்தி வருகிறது. தினசரி ரூ. 1 கோடிக்கான லாட்டரி டிக்கெட் குலுக்கல் நடைபெற்று வருகிறது. அடுத்தடுத்த பரிசுகளும் லாட்டரிக்கு ஏற்ற வகையில் அளிக்கப்படுகின்றன.
அதேபோல் வருடத்திற்கு 6 பம்பர் டிக்கெட் குலுக்கலும் நடைபெறுகிறது. ஒவ்வொரு சீசனுக்கு ஏற்றதுபோல் பம்ப்பர் டிக்கெட் குலுக்கல் நடைபெறுகிறது. கிறிஸ்துமஸ், புது வருட பிறப்பு, பம்ப்பர், சம்மர் பம்ப்பர், விஷு பம்ப்பர், மான்சூன் பம்ப்பர், ஓணம் பம்ப்பர், பூஜா பம்ப்பர் என ஆறு பம்ப்பர் லாட்டரி டிக்கெட் குலுக்கல்கள் நடைபெறுகின்றன. இந்த பம்பர் டிக்கெட்டுகளுக்கு முதல் பரிசாக பல கோடி பரிசு அளிக்கப்படுகிறது.
அதிர்ஷ்டம் அடித்து விடாதா?
இந்த சூழலில் நமக்கு அதிர்ஷ்டம் அடித்து விடாதா? என்ற எதிர்பார்ப்பில், பல்வேறு தரப்பினர்கள் ஆர்வத்துடன் இந்த டிக்கெட்டுகளை வாங்குவதை பார்க்க முடிகிறது. கேரளாவிற்கு செல்லும் வெளி மாநிலச் சுற்றுலாப் பயணிகள் பலர் இந்த லாட்டரி டிக்கெட்டுகளை வாங்குவதைப் பார்க்க முடிகிறது.
இந்த நிலையில் இன்று (நவம்பர் 13, 2025) காருண்யா லாட்டரிக்கான குலுக்கல் நடைபெற உள்ளது. இதில் வெற்றி பெறுவோருக்கான விவரங்களை இங்கேயே அறியலாம்.
பொறுப்புத் துறப்பு: லாட்டரிகள் புத்திசாலித்தனமாக மட்டுமே விளையாடப்பட வேண்டும், ஏனெனில் அவை அடிமையாகிவிடும். இந்தப் பக்கத்தின் உள்ளடக்கத்தை உத்வேகமாகவோ அல்லது வழிகாட்டியாகவோ பயன்படுத்தக் கூடாது; மாறாக, இந்த செய்திகள் கேரளாவில் லாட்டரி குறித்த தகவல்களை மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும் என்பதே நோக்கம். ஏபிபி நாடு டிஜிட்டல் எந்த வகையிலும் லாட்டரிகளை விளம்பரப்படுத்தாது என்பதை தெரிவித்துக்கொள்கிறோம்.
Kerala Lottery Result LIVE: லாட்டரி டிக்கெட் வாங்குவோர், வாங்க நினைப்போர் கவனத்துக்கு!
லாட்டரி அடிமையாக்கக் கூடியது என்பதால் பொறுப்புடனே வாங்க வேண்டியது முக்கியம். இங்கு அளிக்கப்படும் விவரங்கள் அனைத்தும் தகவல் காரணங்களுக்காக மட்டுமே தவிர, லாட்டரிக்கான விளம்பரம் அல்ல. ஏபிபி நாடு எந்த வகையிலும் லாட்டரி விற்பனையை ஆதரிக்கவில்லை.
கேரள லாட்டரிகளில் அதிர்ஷ்ட எண்ணை எவ்வாறு தேர்ந்தெடுப்பது? 5 முக்கிய விதிகள்
பெரும் பரிசை வெல்லும் வாய்ப்புகளை மேம்படுத்த, நீங்கள் இந்த 5 முக்கியமான விதிகளைப் பின்பற்ற வேண்டும்.
- குழுவாக விளையாடுங்கள்
- பிரபலமான எண் சேர்க்கைகளைத் தவிர்க்கவும்
- பெரிய எண்களைப் பயன்படுத்தவும்
- ரேண்டமான (சீரற்ற) எண்களைத் தேர்வு செய்யவும்
- முந்தைய வெற்றியாளர்களை ஆராயுங்கள்





















