LIC | எல்ஐசி பலன்கள் கிடைக்கணுமா? பிப்ரவரி 28-க்கு முன்னாடி உடனே பான் கார்டை இத்துடன் இணைக்கணும்.. முழு விவரம்..
இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை நிறுவனமாக எல்ஐசி செயல்பட்டுவருகிறது. இந்நிலையில் மத்திய அரசு தன்னிடம் இருக்கும் எல்ஐசி நிறுவனத்தின் 5 சதவீத பங்குகளை ஐபிஓ மூலம் விற்பனை செய்ய இருக்கிறது.
எல்ஐசி ஐபிஓ(LIC IPO) ஏலத்தில் இணைவது தொடங்கி அதன் மூலம் பாலிசிதாரர்கள் பெறும் முழுப் பலனை அடைய வேண்டும் என்றால் கட்டாயம் அனைவரும் பான் எண்ணை ஆயுள் காப்பீடுடன் இணைத்திருக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை நிறுவனமாக எல்ஐசி செயல்பட்டுவருகிறது. இந்நிலையில் மத்திய அரசு தன்னிடம் இருக்கும் எல்ஐசி நிறுவனத்தின் 5 சதவீத பங்குகளை ஐபிஓ மூலம் விற்பனை செய்ய இருக்கிறது. எனவே எல்ஐசி ஐபிஓ ஏலத்தில் இணைவது மற்றும் எல்ஐசி பங்குகளின் பலன்களை நீங்கள் பெற வேண்டும் என்றால், ஒவ்வொரு பாலிசிதாரரும் தங்களது பான் விபரங்களை கட்டாயம் சேர்த்திருக்க வேண்டும். இல்லாவிடில் எந்த பலனையும் நீங்கள் பெற முடியாது என தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், பான் கார்டினை எல்ஐசியில் பாலிசியுடன் வருகின்ற பிப்ரவரி 28 ஆம் தேதிக்குள் இணைக்க வேண்டும். இதற்கு உங்களிடம் சரியான டிமேட் கணக்கு வைத்திருக்க வேண்டும். தற்போது 8 கோடி டிமேட் கணக்குகளுடன் ஒப்பிடுகையில் எல்ஐசியில் மட்டும் 25 கோடி பாலிசிதாரர்களைக் கொண்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் இந்தியாவில் வசிப்பவர்கள் பாலிசிதாரர் முன்பதிவு பகுதியின் கீழ் இந்த சலுகையில் விண்ணப்பிக்கத் தகுதியுடையவர்கள் மற்றும் தள்ளுபடியைப் பெறுவார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே பான் கார்டுடன் எல்ஐசி பாலிசி எண்ணை இணைப்பதுக் குறித்த வழிமுறையை இங்கே தெரிந்துக்கொள்வோம்.
முதலில் எல்ஐசியின் அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு செல்ல வேண்டும்.
பின்னர் முகப்பு பக்கத்தில் உள்ள PAN registration என்ற பக்கத்தில் கிளிக் செய்ய வேண்டும்.
PAN, LIC பாலிசி எண், மொபைல் எண் மற்றும் மின்னஞ்சல் முகவரி உள்ளிட்ட உங்கள் விவரங்களை வழங்க வேண்டும்.
இதனைப்பதிவு செய்த பிறகு கேப்சா எண்ணைக் குறிப்பிட்டு ஓகே செய்தால் மொபைல் எண்ணுக்கு ஒரு ஓடிபி வரும்.
இந்த ஓடிபியை பதிவு செய்து சப்மிட் என்பதைப் பதிவிட வேண்டும்.
இறுதியில் பான் எண்ணும், பாலிசி எண்ணும் இணைக்கப்பட்டதாக திரையில் மெசேஜ் வரும்.
தற்போது பான்கார்டு எல்ஐசி பாலிசியுடன் இணைக்கப்பட்டிருக்கும் என்பதைச் சரிப்பார்க்க கீழ்க்கண்ட முறைகளைப் பின்பற்றவும்.
முதலில் எல்ஐசியின் இணையதளத்திற்குள் நுழைய வேண்டும்.
இதனையடுத்து அப்பக்கத்தில் பாலிசியின் ஆயுள் காப்பீட்டு எண்ணை உள்ளிடவும். பின்னர் உங்களது பிறந்த தேதியை உள்ளீடு செய்ய வேண்டும்.
இப்போது PAN அட்டை எண்ணை உள்ளீடு செய்து, கேப்சா குறியீட்டை உள்ளீடு செய்யவேண்டும்.
இதனையடுத்து வரும் பக்கத்தில் உங்களது எல்ஐசி பாலிசி மற்றும் பான் இணைப்பு உங்களுக்குத் திரையில் தெரியவரும். எனவே மேற்கண்ட முறைகளில் எல்ஐசி பாலிசி மற்றும் பான் எண்ணை சுலபமாக உடனே இணைத்துக்கொள்ளுங்கள்..