மேலும் அறிய

IRCTC | ஒரு லட்சம் கோடி ரூபாயை எட்டிய IRCTC-யின் சந்தை மதிப்பு... சட்டென சரிந்தது... காரணம் தெரியுமா?

கடந்த ஆகஸ்ட் மாதம் முதல், ஐஆர்சிடிசியின் சந்தை விலை இருமடங்காக அதாவது 172 சதவீதம் உயர்ந்துள்ளது

ஐ.ஆர்.சி.டி.சி எனும், இந்திய ரயில்வே சுற்றுலா மற்றும் உணவு கழகத்தின் சந்தை மதிப்பு ஒரு லட்சம் கோடி ரூபாயை எட்டியுள்ளது. இன்றைய காலை வர்த்தகத்தில் ஐஆர்சிடிசி பங்குகள் 6,369.30 ரூபாய் என்ற வரலாற்று உச்சத்தை அடைந்தது. இதனையடுத்து இதன் சந்தை மதிப்பு அதிகரித்துள்ளது. ஆனால் இது வர்த்தக நேர முடிவில் சரிந்துவிட்டது. 

இந்திய பங்குச் சந்தை இன்று ஏற்ற இறக்கமாக இருந்தது.  இந்நிலையில் ஐஆர்சிடிசியின் பங்குகள் இன்று ஏறத்தாழ 8 சதவிகிதம் அதிகரித்தது மற்றும் கடந்த ஐந்து வர்த்தக நாட்களில் 33 சதவிகிதம் அதிகரித்தது. தற்போது, ஐஆர்சிடிசி ஒட்டுமொத்த எம்-கேப் (market capitalization)  தரவரிசையில் 57 வது இடத்தில் உள்ளது. இன்றைய சாதனையின் மூலம், நிறுவனம் இண்டஸ்இண்ட் வங்கி மற்றும் ஐசிஐசிஐ ப்ரூடென்ஷியல் லைஃப் இன்சூரன்ஸ் நிறுவனங்களைப் பின்னுக்கு தள்ளி முன்னேறியுள்ளது. 

IRCTC | ஒரு லட்சம் கோடி ரூபாயை எட்டிய IRCTC-யின் சந்தை மதிப்பு... சட்டென சரிந்தது... காரணம் தெரியுமா?

கடந்த  ஜூலை 30, 2021 அன்று பங்குப் பிரிப்புத் திட்டத்தை (Stock Split Plan) அறிவித்த பிறகு ஆகஸ்ட் மாதம் முதல், ஐஆர்சிடிசியின் சந்தை விலை இருமடங்காக அதாவது 172 சதவீதம் உயர்ந்துள்ளது. ஜூலை - செப்டம்பர் காலாண்டில் மட்டும் ஐஆர்சிடிசி பங்குகள் இரண்டு மடங்கு வளர்ச்சி அடைந்துள்ளது. இந்திய ரயில்வே துறையில் டிக்கெட் புக்கிங் சேவையில் ஐஆர்சிடிசி மோனோபோலியாக உள்ளது.
இதையடுத்து ஐஆர்சிடிசி  நிறுவனத்தின் சந்தை மதிப்பு 1.1 லட்சம் கோடி ரூபாயை எட்டியுள்ளது. இதற்கு முன்பாக, ‘எஸ்.பி.ஐ., கோல் இந்தியா, என்.எம்.டி.சி., இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன், பவர் கிரிட் கார்ப்பரேஷன், எஸ்.பி.ஐ., லைப் இன்சூரன்ஸ்.‘பாரத் பெட்ரோலியம், எஸ்.பி.ஐ., கார்ட்ஸ்’ ஆகிய நிறுவனங்கள், 1 லட்சம் கோடி ரூபாய் சந்தை மதிப்பை எட்டிஉள்ளன. இந்நிலையில் ஐஆர்சிடிசிக்கு இது புதிய சாதனையாக பார்க்கப்படுகிறது. 

IRCTC | ஒரு லட்சம் கோடி ரூபாயை எட்டிய IRCTC-யின் சந்தை மதிப்பு... சட்டென சரிந்தது... காரணம் தெரியுமா?

ஆனால் வர்த்தக நேர முடிவில் ஐஆர்சிடிசி பங்குகள் 6,369.30 ரூபாயில் இருந்து 4,996.05 ரூபாய்க்கு குறைந்துள்ளது. இதன் மூலம் ஐஆர்சிடிசி நிறுவனத்தின் மொத்த சந்தை மதிப்பு ஒரு லட்சம் கோடி ரூபாய் அளவீட்டில் இருந்து 85,750 கோடி ரூபாய்க்கு சரிந்துள்ளது. இதன் மூலம் அதன் பங்கு கிட்டத்தட்ட சுமார் 15% குறைந்துள்ளது. முதலீட்டாளர்கள் ஐஆர்சிடிசி பங்குகளை விற்பனை செய்ததே அதற்கு காரணம் எனக் கூறப்படுகிறது. 

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடிபில் வீடியோக்களை காண

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

மகளிர் உரிமைத் தொகைக்கு புதிதாக விண்ணப்பித்தவர்களா? - பேரவையில் துணை முதலமைச்சர் சொன்ன குட் நியூஸ்!

TN Assembly Session LIVE: அந்த சார் யாராக இருந்தாலும் கடும் நடவடிக்கை.. முதல்வர் ஸ்டாலின் பதில்

Watch Video: அச்சச்சோ..! திருவிழாவில் மதம் பிடித்த யானை.. பக்தர்களை காலை பிடித்து தூக்கி வீசும் வீடியோ

Flyover : கிளாம்பாக்கம் To செங்கல்பட்டு.. 15 நிமிஷம் தான் ட்ராவல்.. வருகிறது 6 வழி மேம்பாலச்சாலை..!
கிளாம்பாக்கம் To செங்கல்பட்டு.. 15 நிமிஷம் தான் ட்ராவல்.. வருகிறது 6 வழி மேம்பாலச்சாலை..!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

ISRO Narayanan Profile | ISRO தலைவராகும் தமிழர்! சந்திராயன் 3-ன் SUPER HERO..யார் இந்த வி.நாராயணன்?Erode By Election | ஈரோடு இடைத்தேர்தல் சீட் கேட்கும் EVKS மகன் மக்கள் ராஜன் போர்க்கொடி  DMK AllianceKanguva in Oscar | OSCAR ரேஸில் கங்குவா தேர்வான பின்னணி என்ன? விமர்சனங்களுக்கு சூர்யா பதிலடி!Allu arjun meet Sritej | ”பையனை நான் பாத்துக்குறேன்”தந்தையிடம் கண் கலங்கிய அல்லு அர்ஜுன் | Pushpa 2

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
மகளிர் உரிமைத் தொகைக்கு புதிதாக விண்ணப்பித்தவர்களா? - பேரவையில் துணை முதலமைச்சர் சொன்ன குட் நியூஸ்!
மகளிர் உரிமைத் தொகைக்கு புதிதாக விண்ணப்பித்தவர்களா? - பேரவையில் துணை முதலமைச்சர் சொன்ன குட் நியூஸ்!
TN Assembly Session LIVE: அந்த சார் யாராக இருந்தாலும் கடும் நடவடிக்கை.. முதல்வர் ஸ்டாலின் பதில்
TN Assembly Session LIVE: அந்த சார் யாராக இருந்தாலும் கடும் நடவடிக்கை.. முதல்வர் ஸ்டாலின் பதில்
Watch Video: அச்சச்சோ..! திருவிழாவில் மதம் பிடித்த யானை.. பக்தர்களை காலை பிடித்து தூக்கி வீசும் வீடியோ
Watch Video: அச்சச்சோ..! திருவிழாவில் மதம் பிடித்த யானை.. பக்தர்களை காலை பிடித்து தூக்கி வீசும் வீடியோ
Flyover : கிளாம்பாக்கம் To செங்கல்பட்டு.. 15 நிமிஷம் தான் ட்ராவல்.. வருகிறது 6 வழி மேம்பாலச்சாலை..!
கிளாம்பாக்கம் To செங்கல்பட்டு.. 15 நிமிஷம் தான் ட்ராவல்.. வருகிறது 6 வழி மேம்பாலச்சாலை..!
மக்களே ரெடியா? நாளை முதல் பொங்கல் பரிசு தொகுப்பு! என்ன ஸ்பெஷல்? என்ன செய்ய வேண்டும்?

Champions Trophy 2025: கில் vs ஜெய்ஸ்வால்! ரோகித்துடன் களமிறங்க போவது யார்? சாம்பியன்ஸ் டிராபி 2025

ISRO Chairman: தமிழ்நாடே பெருமிதம் - இஸ்ரோவின் புதிய தலைவராக வி.நாராயணன் நியமனம், யார் இவர்?

முடிஞ்சிப்போன கதை! இப்போ ஏன்? - உதயநிதி அரசியல் குறித்த கேள்விக்கு மனைவி கிருத்திகா கொடுத்த பதில்

Embed widget