ITR Last Date: வருமான வரி தாக்கலுக்கு இன்றே கடைசிநாள்: தவறினால் அபராதம் எவ்வளவு தெரியுமா?
Income Tax Returns 2024 Last Date: வருமான வரி தாக்கல் செய்ய இன்றே கடைசி நாள் என்பதால், தவறும்பட்சத்தில் ரூ. 5,000 வரை அபராதம் செலுத்த வேண்டிய நிலை ஏற்படும்

Income Tax Returns 2024 Last Date Today: 2023- 24 ஆம் நிதியாண்டுக்கான வருமான வரி தாக்கல் செய்வதற்கான கால அவகாசம் இன்றுடன், அதாவது ஜூலை 31ஆம் தேதியுடன் முடிவடைகிறது.
2023-24 நிதி ஆண்டு வருமான வரி:
மாத ஊதியம் பெறுவோர், தொழில் முனைவோர், வருடத்துக்கு ஒருமுறை வருமான வரி விவரங்களை தாக்கல் செய்ய வேண்டும் . இந்நிலையில், 2023-24 ஆம் ஆண்டு மார்ச் மாதத்துடன் நிறைவடைந்த நிலையில், நிதி ஆண்டுக்கான வரி விவரங்களை ஜூலை 31-ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டியது அவசியம். எனவே இன்றே கடைசி நாள் என்பதால், உடனே வருமான வரி தாக்கல் செய்ய வேண்டும்.
அபராதம்:
கடைசி தேதியை தவறவிட்டால், மறுநாள் ஆகஸ்ட் 1-ம் தேதிக்கு பிறகு சமர்ப்பிக்கப்படும் வருமான வரி கணக்குகளுக்கு தாமத கட்டணத்தை செலுத்த வேண்டும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஜூலை 31ஆம் தேதிக்குள் வருமான வரியை தாக்கல் செய்ய தவறினால், ஆகஸ்ட் 1 ஆம் தேதி முதல் ரூ.5,000 அபராதம் வசூலிக்கப்படும். மேலும், ஒருவரது வருமானம் 5 லட்சத்திற்கும் மிகாமல் இருந்தால் அவர் 1,000 ரூபாய் மட்டும் அபராதம் செலுத்த வேண்டும்.
மேலும் செலுத்த தவறினால், மாதம் 1 சதவிகிதம் வட்டி விதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேவையான ஆவணங்கள்:
வருமான வரி கணக்கை தாக்கல் செய்ய வங்கி கணக்கு விவரங்கள், பான் கார்டு, ஆதார் கார்டு, சம்பளம் பெறும் நபர்களுக்கான படிவம் 16, முதலீட்டு குறித்த, ஆதாரங்கள், வீட்டுக் கடன் வட்டி சான்றிதழ், இன்சூரன்ஸ் பிரீமியம் செலுத்திய ரசீதுகள் ஆகியவை சமர்ப்பிக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், வருமான வரி தாக்குதல் செய்யும் இணையத்தில் பிரச்னைகள் இருப்பதாக சிலர் சமூக வலைதளங்களில் தெரிவித்து வருகின்றனர். இந்த சூழ்நிலையில், கால நீட்டிப்பு செய்யப்படுமா அல்லது பிரச்னைகளை உடனடியாக தீர்க்கப்படுமா என்பது மத்திய அரசின் முடிவில்தான் உள்ளது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

