Financial Tasks: மார்ச்-31 ஆம் தேதிக்குள் நீங்கள் செய்யவேண்டிய நிதிசார்ந்த லிஸ்ட் இதுதான்..மறக்காதீங்க மக்களே..
தாமதமான வருமான வரி கணக்கை தாக்கல் செய்யும் கடைசி நாள் முதல் உங்கள் பான்-ஆதாரை இணைப்பது வரை என மார்ச் மாதத்தில் நீங்கள் செய்து முடிக்க வேண்டியவைகளுக்கு முக்கியமான காலக்கெடு பற்றி பார்க்கலாம்.
இந்தாண்டின் 2021-22 நிதியாண்டின் கடைசி மாதம் மார்ச். நிறுவனங்கள்,வங்கி,அரசு உள்ளிட்டவைகள் காலண்டர் ஆண்டினைக் கணக்கில் கொள்ளாது. தங்களின் வரவு செலவுத் திட்டத்திற்காகப் பயன்படுத்தும் முறைதான் fiscal year. ஒரு நிதியாண்டு ஏப்ரல் மாதம் முதல் மார்ச் மாதம் வரை கணக்கிடப்படுகிறது.
வரி திட்டமிடலுக்கு மார்ச் மிகவும் முக்கியமானது. இவை தவிர, தாமதமான வருமான வரிக் கணக்கை தாக்கல் செய்யும் கடைசி நாள் முதல் உங்கள் பான்-ஆதாரை இணைப்பது வரை என மார்ச் மாதத்தில் நீங்கள் செய்து முடிக்க வேண்டியவைகளுக்கு முக்கியமான காலக்கெடு பற்றி பார்க்கலாம்.
வரி திட்டமிடலுக்கான கடைசி மாதம்:
வரி செலுத்துவோர் பல்வேறு பிரிவுகளின் கீழ் வரிச் சலுகைகளைப் பெறுவதற்கான கடைசி வாய்ப்பாகும். இந்த காலக்கெடுவை அறிந்திருந்தாலும், பெரும்பாலான முதலீட்டாளர்கள் தங்கள் வருமான வரி திட்டத்தை கடைசி நிமிடத்திற்கு ஒத்திவைக்கின்றனர். இதுவரை உங்கள் வரிச் சேமிப்பு முதலீடுகளைத் திட்டமிடவில்லை என்றால், அதைச் சீக்கிரம் செய்து, பொதுவான முதலீட்டுத் தவறுகளைத் தவிர்க்கவும்.
பான்-ஆதார் இணைப்பு:
மார்ச் 31, 2022க்குள் உங்கள் நிரந்தரக் கணக்கு எண்ணை (PAN) ஆதார் அட்டையுடன் இணைப்பதற்கான கடைசித் தேதி. கொடுக்கப்பட்ட காலக்கெடுவிற்குள் செய்யாவிட்டால், PAN கார்டு செல்லாது, மேலும் PAN கார்டை இணைக்க ரூ. 1,000 கட்டணம் தேவைப்படலாம். அதன் பிறகு ஆதாருடன். பான் கார்டு ஆதாருடன் இணைக்கப்படவில்லை என்றால், ஒரு தனிநபரால் மியூச்சுவல் ஃபண்டுகள், பங்குகளில் முதலீடு செய்யவோ அல்லது வங்கிக் கணக்கைத் திறக்கவோ முடியாது.
தாமதமான வருமான வரி தாக்கல் செய்வதற்கான கடைசி தேதி:
2021-2022 நிதியாண்டிற்கான வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதற்கான காலக்கெடு நீட்டிக்கப்பட்டுள்ளது. டிசம்பர்,31 ஆம் தேதி ஐடிஆர் தாக்கல் செய்ய வேண்டிய கடைசி தேதி. இருப்பினும்,நீங்கள் இம்மாதம் வருமான வரி கணக்கு தாக்கல் செய்யலாம். தாமதமாக செய்வதற்காக அபராதத் தொகையை சேர்த்து செலுத்த வேண்டும். இதுகுறித்த வருமான வரி துறையின் அதிகாரப்பூர்வ தளத்தில் வெளியிடப்பட்டுள்ள விதிகளையும் கவனமாக படித்துத் தெரிந்து கொள்ளவும்.
வங்கிக் கணக்குகளில் KYC அப்டேட்ஸ்:
வங்கி வாடிக்கையாளர்கள் KYCஐப் புதுப்பிப்பதை இம்மாத இறுதிக்குள் முடிக்க வேண்டும் கொரோனா பரவல் தொற்று காரணமாக ரிசர்வ் வங்கி கடந்த ஆண்டு டிசம்பர், 31 தேதி காலக்கெடுவை இந்தாண்டு மார்ச்,31 வரை நீட்டித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
வாடிக்கையாளர்கள் முகவரி சான்று, அடையாள அட்டை உள்ளிட்ட ஆவணங்களுடன் வங்கியில் சென்று பதிவு செய்யலாம். வாடிக்கையாளர்களின் வசதிக்கேற்ப, குறிப்பிடப்பட வேண்டிய முழு விவரங்கள் அடங்கிய ஆவணங்களை டிஜி-லாக்கர்கள் மூலம் ஆன்லைனிலும் பதிவேற்றம் செய்யலாம். ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா (SBI) போன்ற சில முன்னணி வங்கிகளும் வாடிக்கையாளர்கள் தங்கள் KYC குறித்த விவரங்களை அப்டேட் செய்ய மின்னஞ்சல் அல்லது தபால் மூலம் தங்கள் ஆவணங்களை சமர்ப்பிக்க அனுமதிக்கின்றன. KYC-ஐப் புதுப்பிப்பதற்கான கடைசி தேதியை தவறவிட்டால், வங்கி கணக்கு முடக்கப்படும்.
Advance Tax Installment
நிதி ஆண்டிற்கான Advance Tax, அதாவது முன்னதாகவே வரி தாக்கல் செய்வதற்கான கடைசி மாதம் மார்ச்தான். மதிப்பிடப்பட்ட பொறுப்பு வரி ரூ. 10,000 அல்லது அதற்கு மேற்பட்டதாக இருக்கும் நபர் முன்கூட்டியே வரி செலுத்த வேண்டும். இந்த வரியை நிதியாண்டிலேயே நான்கு தவணைகளில் செலுத்த வேண்டும். அட்வான்ஸ் வரியின் நான்காவது தவணையை செலுத்துவதற்கான கடைசி தேதி மார்ச் 15, 2022 ஆகும்.
இது அனைத்து வரி செலுத்துவோர், சம்பளம் பெறுபவர்கள், ஃப்ரீலான்ஸர்கள் மற்றும் வணிகங்களுக்கும் பொருந்தும். இருப்பினும், மூத்த குடிமக்கள் (60 வயது அல்லது அதற்கு மேற்பட்ட தனிநபர்) தொழில் மூலம் வருமானம் இல்லாதவர் அட்வான்ஸ் வரி செலுத்த வேண்டிய அவசியம் இல்லை. சம்பளத்தைத் தவிர வேறு வருமானம் இல்லாத சம்பளக்காரர் ஒருவர், அட்வான்ஸ் வரித் தவணைகளைச் செலுத்தத் தேவையில்லை. ஏனெனில் முதலாளிகள் அவர்களுக்குப் பொருந்தக்கூடிய வரியை மாதச் சம்பளத்திலிருந்து கழித்து, வருவாம வரி துறைக்குச் செலுத்த வேண்டும். சரியான நேரத்தில் அட்வான்ஸ் வரி செலுத்தவில்லை என்றால் அபராத கட்டணம் செலுத்த வேண்டும்.