Small Savings Scheme: சிறுக சிறுக சேமிப்பவர்களுக்கு நற்செய்தி.. இந்த சிறுசேமித் திட்டங்களுக்கு வட்டி உயர்வு..
அஞ்சலகங்களில் வழங்கப்படும் 3 ஆண்டுகால டெபாசிட்டுக்கான வட்டி விகிதம் 5.5 சதவிகிதத்தில் இருந்து 5.8 சதவிகிதமாக உயர்த்தப்பட்டுள்ளது.
நடப்பு நிதியாண்டான 2022 -23ஆம் நிதியாண்டின் 3ஆவது காலாண்டுக்கான வட்டி விகிதத்தை மத்திய நிதி அமைச்சகம் மாற்றி அறிவித்துள்ளது.
அக்டோபர் முதல் டிசம்பர் மாதம் வரையிலான 3 மாதங்களுக்கான மத்திய நிதி அமைச்சகம் அறிவித்தது.
அதன்படி அஞ்சலகங்களில் வழங்கப்படும் 3 ஆண்டுகால டெபாசிட்டுக்கான வட்டி விகிதம் 5.5 சதவிகிதத்தில் இருந்து 5.8 சதவிகிதமாக உயர்த்தப்பட்டுள்ளது. அதேபோல் இரண்டு ஆண்டு கால டெபாசிட்டுக்கான் வட்டி விகிதம் 5.5 சதவிகிதத்தில் இருந்து 5.7 சதவிகிதமாக உயர்த்தப்பட்டுள்ளது.
மேலும், மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டத்துக்கான வட்டி 7.4 சதவிகிதத்தில் இருந்து 7.6 சதவிகிதமாக உயர்த்தப்பட்டுள்ளது. விவசாயிகளின் கடன் அட்டைக்கான கால வரம்பும் வட்டி விகிதமும் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. இந்த வட்டி உயர்வு நாளை, அக்டோபர் 1ம் தேதி தொடங்கி டிசம்பர் 31ஆம் தேதிவரை நடைமுறையில் இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Govt hikes interest rate on small savings schemes for Q3 of FY23.
— India ETFs & Index Funds (@IndiaEtfs) September 29, 2022
The interest rate for senior citizens savings scheme has been hiked to 7.6% frm 7.4%, Kisan Vikas Patra 7% vs 6.9%.
The interest rate for monthly income account scheme 6.7% vs 6.6%
அஞ்சலகங்களில் உள்ள சிறுசேமிப்புத் திட்டங்களுக்கான வட்டி விகிதங்கள் காலாண்டுக்கு ஒரு முறை மாற்றியமைக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
முன்னதாக கடந்த ஆகஸ்ட் 5ஆம் தேதி வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி வழங்கும் குறுகிய கால கடன்களுக்கு வட்டி விகிதமானது 0.50 விழுக்காடு உயர்த்தப்பட்டது.
View this post on Instagram
நாட்டின் சந்தைகள் நிலையற்றத் தன்மையில் உள்ளதாகவும், பிற நாடுகளின் பொருளாதாரங்களை விட இந்தியப் பொருளாதாரம் சிறப்பாக உள்ளது எனினும் பண வீக்கம் அதிகரித்துள்ளதாகவும் இதனால் ரெப்போ வட்டி விகிதம் உயர்த்தப்பட்டுள்ளதாகவும் ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்தி காந்த் தாஸ் இந்த நடவடிக்கை குறித்து தெரிவித்தார்.