(Source: ECI/ABP News/ABP Majha)
LIC Policyholders | எல்ஐசி பாலிசிதாரரா நீங்கள்? உங்களுக்கு ஒரு Good நியூஸ்..
இன்சூரன்ஸ் என்றாலே நமக்கெல்லாம் முதலில் நினைவுக்கு வருவது எல்ஐசி தான். காரணம் அதன் நம்பகத்தனமை. எல்ஐசி பல அற்புதமான திட்டங்களை மக்களுக்காக கொடுத்து வருகின்றது.
இன்சூரன்ஸ் என்றாலே நமக்கெல்லாம் முதலில் நினைவுக்கு வருவது எல்ஐசி தான். காரணம் அதன் நம்பகத்தனமை. எல்ஐசி பல அற்புதமான திட்டங்களை மக்களுக்காக கொடுத்து வருகின்றது. குழந்தைகள், பெரியோர், மாணவர்கள், திருமண வயதினர், மருத்துவம், ஓய்வுக்காலம் என பல தரப்பினருக்கும், பல்வேறுபட்ட தேவைகளுக்கும் அவ்வப்போது நல்ல திட்டங்களை வழங்கி வருகிறது.
இதனால், இந்திய மக்களில் பெரும்பாலானோர் எல்ஐசியின் நூற்றுக் கணக்கான பாலிஸி திட்டங்களில் ஏதேனும் ஒன்றை தேர்வு செய்திருப்பார்கள்.
சரி நம்பகத்தன்மை வாய்ந்த ஆயுள் காப்பீட்டு நிறுவனத்தில் அருமையான பாலிஸியும் எடுத்துவிட்டோன் என்று வைத்துக் கொள்ளுங்கள், அதன் ஸ்டேட்டஸ் பற்றி அறிவது தான் பெரும் பிரச்சினை. அதை எளிதாக்க புதிய திட்டத்தை எல்ஐசி அறிவித்துள்ளது. பாலிஸி மெச்சூரிட்டி, ப்ரீமியம் ஸ்டேட்டஸ் என எதுவாக இருந்தாலும் அதை இனி ஆன்லைனிலேயே பாலிஸிதாரர்கள் தெரிந்து கொள்ளலாம்.
ஆன்லைனில் செக் செய்வது எப்படி?
முதலில் எல்ஐசியின் அதிகாரப்பூர்வ இணையதளமான https://www.licindia.in/ என்ற இணைய முகவரியைச் சுட்டி தகுந்த பக்கத்துக்கு செல்லவும். இந்தப் பக்கத்தில் நீங்கள் பதிவு செய்ய வேண்டும். உங்களின் பாலிஸி எண் உள்ளிட்ட தகவல்களைப் பதிவு செய்தால் நீங்கள் அடுத்தக் கட்டத்துக்குச் செல்ல வேண்டும்.
எப்படி பதிவு செய்வது?
இந்தப் பக்கத்தில் பதிவு செய்ய கட்டணம் இல்லை. உங்களின் பிறந்த தேதி, பெயர், பாலிஸி எண் ஆகியனவற்றை பயன்படுத்தி பதிவு செய்து கொள்ளலாம்.
இது தொடர்பாக உதவி தேவைப்பட்டால் நீங்கள் 022 6827 6827 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம். இல்லாவிட்டால், LICHELP <PolicyNumber> என்று பதிவு செய்து 9222492224 என்ற எண்ணுக்கு அழைத்து தெரிந்து கொள்ளலாம்.
அதேபோல் குறுந்தகவல் அனுப்பியும் பாலிஸி ஸ்டேட்டஸை அறியலாம். அதற்கு உங்களின் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணில் இருந்து, 56677 என்ற எண்ணுக்கு குறுந்தகவல் அனுப்ப வேண்டும். ASKLIC PREMIUM என்று டைப் செய்து 56677 என்ற எண்ணுக்கு அனுப்பி உங்கள் பாலிஸியின் ப்ரீமியம் தொகையைத் தெரிந்து கொள்ளலாம். ASKLIC REVIVAL என்று டைப் செய்து 56677 என்ற எண்ணுக்கு அனுப்பி பாலிஸி லீக் ஆனது குறித்த விவரங்களைப் பெறலாம்.
இந்த சேவைகள் எல்லாமே கட்டணம் இல்லா சேவை என்பது குறிப்பிடத்தக்கது.
அதேபோல் ப்ரீமியம் தொகை, லோன் தொகை என அனைத்தையுமே எல்ஐசியின் மொபைல் அப்ளிகேஷன் மற்றும் இணையதளம் வாயிலாகவே செய்து முடிக்கலாம். இப்போது ஆன்லைன் பேமென்ட் முறையுடன் இன்னொரு சலுகையும் அறிவிக்கப்பட்டுள்ளது. இனி நிங்கள் பேடிஎம் பேமென்ட் கேட்வே மூலம் எல்ஐசி ப்ரீமியம் தொகையை செலுத்தலாம்.