Gold Rate Today: ஏறிய வேகத்தில் இறங்கிய தங்கம் விலை.! இன்று ஒரு கிராம் என்ன விலை தெரியுமா.?
Gold Rate Today: தங்கத்தின் விலை நேற்று இரண்டு முறை சரசரவென உயர்ந்தது. அந்த வகையில் ஒரே நாளில் 4120 ரூபாய் உயர்ந்த நிலையில், இன்று அதிரடியாக குறைந்துள்ளது. இதனால் நகைப்பிரியர்கள் சற்று நிம்மதி அடைந்துள்ளனர்.

ஏறி இறங்கும் தங்கத்தின் விலை
தங்கத்தின் விலையானது தினந்தோறும் புதிய உச்சத்தை தொட்டு வருகிறது. கடந்த 2025ஆம் ஆண்டு ஜனவரி மாதம் ஒரு சரவன் தங்கம் 59 ஆயிரம் முதல் 62 ஆயிரம் ரூபாய் அளவிற்கு விற்பனையானது. ஆனால் இந்த ஒரே வருடத்தில் தங்கத்தின் விலையானது இரண்டு மடங்காக உயர்ந்து ஒரு சவரன் 1லட்சத்து 15ஆயிரத்தை தாண்டியுள்ளது. அந்த வகையில் தங்கத்தின் விலையானது கடந்த 3 நாட்களில் மட்டும் ஒரு சவரனுக்கு 8ஆயிரம் ரூபாய் வரை உயர்ந்திருந்தது. இதனால் திருமணத்திற்கு நகைகளை வாங்க முடியாமல் நடுத்தர வர்க்க மக்கள் தவித்து வருகிறார்கள்.
தங்கத்தின் விலையை உயர்த்துவது எது?
- முதலீட்டாளர்கள் பணத்தைப் பாதுகாப்பான சொத்துக்களில் (தங்கம்) முதலீடு செய்வது
- புவிசார் அரசியல் பதற்றம் + வர்த்தகப் போர் அச்சங்கள்
- பலவீனமான அமெரிக்க டாலர் + வேகமான கொள்முதல்
இத்தகைய வேகமான ஏற்றத்திற்குப் பிறகு, விலை ஏற்ற இறக்கங்கள் அதிகமாக இருக்கலாம் என நகை வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.
தங்கத்தின் விலை என்ன.?
நேற்று காலை சென்னையில் சவரனுக்கு 2800 ரூபாய் விலை உயர்ந்து, ஒரு சவரன் 1,14,000ரூபாய்க்கும், ஒரு கிராம் 350 ரூபாய் விலை உயர்ந்து 14,250 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது. அதே நேரம் நேற்று மாலை யாரும் எதிர்பார்க்காத வகையில் மீண்டும் அதிரடியாக தங்கத்தின் விலை உயர்ந்தது. கிராமிற்கு மேலும் 165 ரூபாய் விலை உயர்ந்து, ஒரு கிராம் 14,415 ரூபாய்க்கும், சவரனுக்கு மேலும் 1,320 ரூபாய் விலை உயர்ந்து, ஒரு சவரன் 1,15,320 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது இதனால் நகைப்பிரியர்களை அதிர்ச்சி அடைய செய்துள்ளது.
இந்த நிலையில் இன்று காலை வர்த்தகம் தொடங்கியதும் தங்கத்தின் விலையானது அதிரடியாக குறைந்துள்ளது. ஒரு கிராமிற்கு 215 ரூபாய் குறைந்து 14ஆயிரத்து 200 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. ஒரு சவரனுக்கு 1720 ரூபாய் குறைந்து 1 லட்சத்து 13ஆயிரத்து 600 ரூபாய்க்கு விற்பனையானது. தங்க நகை விலை சற்று குனைந்திருப்பது நகைப்பிரியர்களை மகிழ்ச்சி அடைய செய்துள்ளது.
இதே போல நேற்று மாலை வெள்ளி கிராமிற்கு 5 ரூபாய் விலை உயர்ந்து, ஒரு கிராம் 345 ரூபாய்க்கும், ஒரு கிலோ பார் வெள்ளி 3 லட்சத்து 45 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது. இந்த நிலையில் இன்று காலை வெள்ளியின் விலையும் குறைந்துள்ளது. ஒரு கிராமிற்கு 5 ரூபாய் குறைந்து 340 ரூபாய்க்கு விற்பனையானது. ஒரு கிலோவிற்கு 5ஆயிரம் ரூபாய் குறைந்து ஒரு கிலோ பார் வெள்ளி 3 லட்சத்து 40 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.





















