மேலும் அறிய

தங்கம் & வெள்ளி விலை உச்சம்: சாமானிய மக்கள் அதிர்ச்சி! திருமண கனவு கலையுமா?

24 கேரட் தங்கம் ஒரு கிராம் 16,734 ரூபாய்க்கும் ஒரு சவரன் 1,33,872 ரூபாய்க்கும் விற்பனையாகிறது. 10 கிராம் தங்கம் 1, 67,340 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

லட்சக்கணக்கான சாமானிய மக்களுக்கு அதிர்ச்சி அளிக்க கூடிய வகையில்  இன்று ஆபரண தங்கம் மற்றும் வெள்ளி ஆகிய இரண்டும் புதிய வரலாற்று உச்சத்தை தொட்டுள்ளன. குறிப்பாக தங்கம் விலை 1.5 லட்சத்தையும், வெள்ளி விலை 4 லட்சத்தையும் தொட்டுவிட்டன.


தங்கம் & வெள்ளி விலை உச்சம்: சாமானிய மக்கள் அதிர்ச்சி! திருமண கனவு கலையுமா?

 திங்கட்கிழமை அன்று 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு 275 ரூபாய் உயர்ந்து 15,025 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. நேற்றைய தினம் அதிசயமாக தங்கத்தின் விலை குறைந்தது. கிராமுக்கு 65 ரூபாய் விலை சரிந்து 14,960 ரூபாய்க்கு விற்பனையானது. பரவாயில்லை தங்கம் விலை குறைகிறது என மக்கள் மகிழ்ச்சி அடைவதற்குள் நேற்றைய விட பல மடங்கு வேகமாக இன்று தங்கத்தின் விலை உயர்ந்து விட்டது.

ஆபரண தங்கம் ஒரு கிராமுக்கு 370 ரூபாய் விலை உயர்ந்து 15,330 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. இன்று ஒரு சவரன் ஆபரண தங்கம் நேற்றைய விட 2,960 ரூபாய் விலை உயர்ந்து 1,22,640 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. 10 கிராம் தங்கம் 1.5 லட்சம் ரூபாயை கடந்துவிட்டது. அதாவது 1, 53,300 ரூபாய்க்கு விற்பனையாகிறது.  அதாவது ஆபரண தங்கத்தின் விலை இப்படி பல மடங்கு உயர்ந்திருப்பது திருமணம் உள்ளிட்ட நிகழ்வுகளை வைத்திருக்கும் குடும்பங்கள் மத்தியில் கண்ணீரை வரவழைத்து இருக்கிறது. தங்கத்தின் விலை இந்த மாதத்தில் மட்டும் ஒரு கிராமுக்கு 2,890 ரூபாயும் ஒரு சவரனுக்கு 23,120 ரூபாயும் விலை உயர்ந்திருக்கிறது.

24 கேரட் தங்கம் ஒரு கிராம் 16,734 ரூபாய்க்கும் ஒரு சவரன் 1,33,872 ரூபாய்க்கும் விற்பனையாகிறது. 10 கிராம் தங்கம் 1, 67,340 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. 18 கேரட் தங்கமும் விலை உயர்வு கண்டிருக்கிறது. ஒரு கிராம் 12,785 ரூபாய்க்கும் ஒரு சவரன் 1,02,280 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.தங்கம் தான் இப்படி இருக்கிறது என்று பார்த்தால் வெள்ளி விலை இன்று புதிய வரலாற்று உச்சத்தை தொட்டுவிட்டது.  இன்று ஒரு கிராம் வெள்ளி 13 ரூபாய் விலை உயர்ந்து 400 ரூபாய்க்கு விற்பனையாகிறது. ஒரு கிலோ வெள்ளி 4 லட்சம் ரூபாய் என வரலாற்று உச்சபட்ச விலையில் இருக்கிறது.


தங்கம் & வெள்ளி விலை உச்சம்: சாமானிய மக்கள் அதிர்ச்சி! திருமண கனவு கலையுமா?

ஜனவரி ஒன்றாம் தேதி அன்று ஒரு கிராம் வெள்ளியின் விலை 256 ரூபாய், அதுவே இன்றைய தினம் 400 ரூபாய்.ஜனவரி மாதத்தில் இந்த 28 நாட்களில் வெள்ளி விலை கிராமுக்கு 144 ரூபாயும் ஒரு கிலோவுக்கு 1,44,000 ரூபாயும் விலை உயர்வு கண்டிருக்கிறது. அமெரிக்க மத்திய வங்கியின் நிதிக் கொள்கை குழு கூட்டம் நடைபெற்று வருகிறது. இந்திய நேரப்படி இன்று இரவு அமெரிக்க மத்திய வங்கியின் தலைவர் ஜெரோம் பாவெல் வட்டி குறைப்பு நடவடிக்கை குறித்து அறிவிப்பை வெளியிட இருக்கிறார் என எதிர்பார்க்கப்படுகிறது. வட்டி குறைப்பு நடவடிக்கை எடுக்கப்படும் என்ற எதிர்பார்ப்பு வலுவாக எழுந்ததே இன்று தங்கம், வெள்ளி விலை உயர காரணம். ஒரு வேளை வட்டி குறைக்கப்பட்டால் நாளைய தினம் தங்கம் மற்றும் வெள்ளியின் விலை உயர்வதை யாராலும் தடுக்க முடியாது.

தலைப்பு செய்திகள்

Gold and silver rate today : மீண்டும் உயர்ந்தது தங்கம் விலை.! ஒரு சவரன் இவ்வளவா.? இன்றைய தங்கம், வெள்ளி விலை நிலவரம் இதோ..
மீண்டும் உயர்ந்தது தங்கம் விலை.! ஒரு சவரன் இவ்வளவா.? இன்றைய தங்கம், வெள்ளி விலை நிலவரம் இதோ..
Vivo S2 Sales Begins: அசத்தலான அம்சங்களுடன் அறிமுகமான விவோ S2-ன் விற்பனை தொடக்கம்; மெகா பேட்டரி; விலை என்ன.?
அசத்தலான அம்சங்களுடன் அறிமுகமான விவோ S2-ன் விற்பனை தொடக்கம்; மெகா பேட்டரி; விலை என்ன.?
LIVE | Kerala Lottery Result Today (12.08.2026): தனலட்சுமி தேடி வருவாளா? கேரளா லாட்டரி குலுக்கல் முடிவுகள்!
LIVE | Kerala Lottery Result Today (12.08.2026): தனலட்சுமி தேடி வருவாளா? கேரளா லாட்டரி குலுக்கல் முடிவுகள்!
Amazon- ல் டிவி விலைகள் தடாலடி சரிவு! சாம்சங், எல்.ஜி, ஷாவ்மி மாடல்களுக்கு அள்ளும் தள்ளுபடி!
Amazon- ல் டிவி விலைகள் தடாலடி சரிவு! சாம்சங், எல்.ஜி, ஷாவ்மி மாடல்களுக்கு அள்ளும் தள்ளுபடி!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Vettri Investment Conclave: தொழில் முதலீடுகள் - எந்தெந்த மாவட்டங்களுக்கு எவ்வளவு நிதி? வேலை வாய்ப்புகள் - முழு விவரம்
தொழில் முதலீடுகள் - எந்தெந்த மாவட்டங்களுக்கு எவ்வளவு நிதி? வேலை வாய்ப்புகள் - முழு விவரம்
Senthil Balaji: அவுட் ஆஃப் ரேஞ்சில் செந்தில் பாலாஜி? ”திமுகவை நம்பி இனி பயனில்லை” டெல்லிக்கு சகோதரர்கள் தூது
அவுட் ஆஃப் ரேஞ்சில் செந்தில் பாலாஜி? ”திமுகவை நம்பி இனி பயனில்லை” டெல்லிக்கு சகோதரர்கள் தூது
RB Udhayakumar: ”மோசடி செய்த CM விஜய்” மதுபானங்களால் கஜானாவை நிரப்புவது ஏன்? ஆர்.பி. உதயகுமார் கேள்வி
”மோசடி செய்த CM விஜய்” மதுபானங்களால் கஜானாவை நிரப்புவது ஏன்? ஆர்.பி. உதயகுமார் கேள்வி
TVK Govt: அடித்து ஆடும் தவெக அரசு - 95 நாட்கள், 97 ஒப்பந்தங்கள், ரூ.67ஆயிரத்து 452 கோடி முதலீடு - இன்று ஒப்பந்தம்
அடித்து ஆடும் தவெக அரசு - 95 நாட்கள், 97 ஒப்பந்தங்கள், ரூ.67ஆயிரத்து 452 கோடி முதலீடு - இன்று ஒப்பந்தம்
TVK Vijay: பொறாமையில் பொங்கும் Ex.அதிமுகவினர்.. முக்கிய பதவியை சிங்கைக்கு வழங்கும் CM விஜய்? என்ன தெரியுமா?
பொறாமையில் பொங்கும் Ex.அதிமுகவினர்.. முக்கிய பதவியை சிங்கைக்கு வழங்கும் CM விஜய்? என்ன தெரியுமா?
Maruti SUV: ரூ.6 லட்சத்திற்கே புதிய எஸ்யுவி..! டர்போ & CNG எடிஷன் - அம்சங்கள், வசதிகள்.. மாருதியின் லாஞ்ச் எப்போ?
ரூ.6 லட்சத்திற்கே புதிய எஸ்யுவி..! டர்போ & CNG எடிஷன் - அம்சங்கள், வசதிகள்.. மாருதியின் லாஞ்ச் எப்போ?
JOB ALERT : இன்டர்வியூக்கு வந்தாலே போதும்.! கொட்டிக்கிடக்கும் 10,000 காலிப்பணியிடம்- இளைஞர்களுக்கு ஜாக்பாட் அறிவிப்பு
இன்டர்வியூக்கு வந்தாலே போதும்.! கொட்டிக்கிடக்கும் 10,000 காலிப்பணியிடம்- இளைஞர்களுக்கு ஜாக்பாட் அறிவிப்பு
TNEB: 200 யூனிட் இலவச மின்சாரம் இல்லையா?.. தமிழக அரசு பரபரப்பு விளக்கம்.. வசமாக மாட்டிய நடிகை!
TNEB: 200 யூனிட் இலவச மின்சாரம் இல்லையா?.. தமிழக அரசு பரபரப்பு விளக்கம்.. வசமாக மாட்டிய நடிகை!
Embed widget