Elon musk bitcoin tweet | எலான் மஸ்க் அப்படி என்னதான் ட்வீட் பண்ணாரு? பிட்காய்ன் மதிப்பு சரிவுக்கு இதுதான் காரணமா?
கொரோனா காலக்கட்டத்தில் அனைத்து பொருளாதாரமும் சரிவினை சந்தித்த நிலையில் பிட்காயின் மதிப்பு மட்டும் 220 சதவீதம் உயர்ந்தது என்ற புள்ளி விபரங்கள் வெளிவந்தது. ஒரு பிட்காயின் மதிப்பு இந்திய ரூபாயின்படி 36.56 லட்ச ரூபாய் ஆகும் என்பது குறிப்பிடத்தக்கது.
உலகின் மிகப்பெரிய பணக்காரரும், டெஸ்லா எனும் மின்சார கார் தயாரிப்பு நிறுவனத்தின் நிறுவனருமான எலான் மஸ்க் தன்னுடைய முதலீட்டுக்கு மெய் நிகர் நாணயம் எனப்படும் பிட்காயினை அறிமுகம் செய்திருந்தார். ஆரம்ப காலத்தில் முதலீட்டாளர்கள் அனைவரும் பேசும் பொருளாக தன்னுடைய அறிவிப்பினை எலான் மஸ்க் வெளியிட்டிருந்தார். அதன்படி தங்கள் நிறுவனத்தின் பொருள்களை வாங்கவேண்டும் என்றால் இந்த மெய் நிகர் நாணயமான பிட்காயினை பயன்படுத்தலாம் என அறிவித்திருந்தார்.
இதனையடுத்து அதிகளவில் மக்கள் பயன்படுத்தியதால் டெஸ்லா நிறுவனத்தின் பொருள்கள் எல்லாம் தாறுமாறாக உயர்ந்தது. மேலும் இதன் காரணமாக பிட்காயின் மதிப்பும் சந்தையில் அதிகரிக்க தொடங்கியது. ஒரு பிட்காயின் மதிப்பு இந்திய ரூபாயின் படி 36.56 லட்ச ரூபாய் ஆகும் என்பது குறிப்பிடத்தக்கது.
கொரோனா காலக்கட்டத்தில் அனைத்து பொருளாதாரமும் சரிவினை சந்தித்த நிலையில் பிட்காயின் மதிப்பு மட்டும் 220 சதவீதம் உயர்ந்தது என்ற புள்ளி விபரங்கள் வெளிவந்தது. ஆனால் தற்போது டெஸ்லா நிறுவனத்தலைவர் எலான் மஸ்க் போட்ட ஒரு ட்வீட்டால் அனைத்தும் நேர்மாறாக மாறி பிட்காய்ன் மதிப்பு சரிவினை சந்தித்துள்ளது. அப்படி என்ன ட்விட்டர் செய்துள்ளார் தெரியுமா? இத்தனை நாட்காளாக டெஸ்லா நிறுவனத்தின் தயாரிக்கும் பொருட்களை வாங்க இந்த பிட்காய்ன் பயன்படுத்திக்கொள்ளலாம் என அறிவித்திருந்த நிலையில், தற்போது இதனை பயன்படுத்தமுடியாது எனவும், பிட்காய்ன் ஏற்கப்படாது என ட்விட்டர் வாயிலாக தெரிவித்துள்ளார். இதனையடுத்து தற்போது மெய் நிகர் நாணயமான பிட்காய்ன் மதிப்பு 17 சதவீதம் அளவுக்கு பங்குச்சந்தையில் சரிவினை கண்டுள்ளது.
Tesla & Bitcoin pic.twitter.com/YSswJmVZhP
— Elon Musk (@elonmusk) May 12, 2021
உலகம் முழுவதும் உள்ள ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட பல்பொருள் அங்காடி தொடர்கள் மற்றும் வணிக வளாகங்களில் பிட்காயின்கள் ஏற்றுக்கொள்ளப்படுகின்றனர். இதனைக்கொண்டு இணையதளங்களில் பொருட்களை வாங்குவதோடு, விரும்பிய நாட்டின் பணமாகவும் மாற்றிக்கொள்ளலாம் என இருந்தது. மேலும் மெய் நிகர் நாணயம் எனப்படும் பிட்காயின்கள் மூலம் மேற்கொள்ளப்படும் அனைத்து பரிமாற்றங்களும் பிளாக்செயின் என்னும் பாதுகாப்பு வழிமுறையில் மேற்கொள்ளப்பட்டுவந்தது. தற்போது இதனை ஏற்றுக்கொள்ள முடியாது என்ற அறிவிப்பினால் இதன் மதிப்பு சரிவினை சந்தித்துள்ளது.
இந்தியாவில் பிட்காய்ன் வர்த்தகத்திற்கு அனுமதியில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இதே போல் ரஷ்யா மற்றும் அர்ஜென்டினாவை தவிர்த்து பெரும்பாலான நாடுகளில் பிட்காய்ன் வர்த்தக்கங்கள் அனுமதிக்கப்பட்டுள்ளன.