Electric Vehicle Fire: நடுரோட்டில் தீப்பிடித்து எரிந்த சம்பவம்..! இ ஸ்கூட்டர்களை திரும்ப பெறுவதாக பியூர் இ நிறுவனம் அறிவிப்பு..!
இ - ஸ்கூட்டர்களை திரும்ப பெற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக பியூர் இ நிறுவனம் அறிவித்துள்ளது.
பெட்ரோல் மற்றும் டீசல் பயன்பாட்டிற்கு மாற்றாக எலக்ட்ரானிக் வகை இயந்திரங்களின் பயன்பாட்டை அதிகரிக்க அரசு தொடர்ந்து ஊக்குவித்து வருகிறது. இதன்காரணமாக, இந்தியாவில் எலக்ட்ரானிக் ஸ்கூட்டர் எனப்படும் இ- ஸ்கூட்டர் பயன்பாடும் அதிகரித்து வருகிறது. முன்னணி நிறுவனங்கள் பலவும் இ - ஸ்கூட்டர் தயாரிப்பில் ஈடுபட்டு வருகிறது. இந்த நிலையில், கடந்த சில வாரங்களுக்கு முன்பு தெலுங்கானா மற்றும் தமிழ்நாட்டில் இ - ஸ்கூட்டர்கள் இரண்டு தீப்பற்றி எரிந்தது. இந்த விவகாரம் இ ஸ்கூட்டர் பயன்படுத்துவோர் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியது.
இந்த நிலையில், தீப்பிடித்த இ- ஸ்கூட்டர் நிறுவனமான பியூர் இ தனது இ ஸ்கூட்டர்களை திரும்ப பெறுவதாக அறிவித்துள்ளது. மேலும், தெலங்கானா மற்றும் தமிழகத்தில் இரு வகை ஸ்கூட்டர்களின் பேட்டரி வெடித்து தீப்பற்றியதால் இந்த நடவடிக்கை என அந்த நிறுவனம் அறிவித்துள்ளது. சென்னை மற்றும் நிசாமாபாத்தில் விற்பனை செய்யப்பட்ட 2,000 எலெக்ட்ரிக் வாகனங்களை திரும்ப பெறுவதாக அறிவித்துள்ளது. இ டிரன்ஸ் பிளஸ் மற்றும் இ புளூட்டோ 7 ஜி ஸ்கூட்டர்களை திரும்ப பெற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்