மேலும் அறிய

Poultry Farming: நாட்டுக்கோழி வளர்ப்பில் ஆர்வமா ? உங்களுக்கான வாய்ப்பு இதுதான் ?

மாவட்டங்களிலிருந்து பெறப்படும் மாவட்ட ஆட்சியர் ஒப்புதல் பெறப்பட்ட பயனாளிகளின் பட்டியலிலிருந்து, முன்னுரிமை அடிப்படையில் 100 பயனாளிகள், இறுதி செய்யப்படும்.

கால்நடை பராமரிப்புத்துறை 2023-24 ம் ஆண்டில் மானியக் கோரிக்கை அறிவிப்பு எண். 4-ன்படி  செங்கல்பட்டு மாவட்டத்தில் நாட்டுக்கோழிகளை வளர்ப்பதில் திறமையும் ஆர்வமும் உள்ள 3 முதல் 6 தொழில் முனைவோர் பயனாளிகள் தேர்ந்தெடுக்கப்படவுள்ளனர். இதற்கான முக்கிய தகுதிகள் கீழ்க்கண்டவாறு தெரிவிக்கப்படுகிறது.

  • மேற்காணும் திட்டம் 2023 . 24 ஆம் ஆண்டில் அனைத்து (37) மாவட்டங்களிலும், குறிப்பாக  திட்டம் செயல்படுத்தப்படாத 27 மாவட்டங்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டு செயல்படுத்தப்படவுள்ளது.
  • நாட்டுக்கோழி வளர்ப்பு பண்ணைகளை நிறுவுவதற்கு தேவையான கோழி கொட்டகை கட்டுமானச் செலவு, உபகரணங்கள் வாங்கும் செலவு  (தீவனத்தட்டு  மற்றும் தண்ணீர் வைக்கும் தட்டு), மற்றும் 4 மாதங்களுக்கு தேவையான தீவன செலவு (கோழி வளரும் வரை) ஆகியவற்றிற்கான மொத்த  செலவில்  50 சதவீதம் மானியம் (ரூ. 1,50,625 மாநில அரசால் வழங்கப்படும் .
  • திட்டத்தின் மீதமுள்ள 50 சதவீதம் பங்களிப்பை வங்கி மூலமாகவோ (அ) தனது சொந்த ஆதாரங்கள் மூலமாகவோ பயனாளி   திரட்ட வேண்டும்.
  • ஒவ்வொரு பயனாளிக்கும் 250 எண்ணிக்கையிலான 4 வார வயதுடைய நாட்டுக்கோழி குஞ்சுகள் ஒசூர் மாவட்ட கால்நடை பண்ணையிலிருந்து இலவசமாக வழங்கப்படும். 
  • பயனாளிகளிடம் கோழி கொட்டகை கட்ட குறைந்தபட்சம் 625 சதுர அடி நிலம் இருக்க வேண்டும்.  இந்தப் பகுதி மனித குடியிருப்புகளிலிருந்து விலகி இருக்க வேண்டும்.
  • மேலும் பயனாளி அந்த கிராமத்தில் நிரந்தரமாக வசிப்பவராக இருக்க வேண்டும்.  விதவைகள், ஆதரவற்றோர்,  திருநங்கைகள் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கு முன்னுரிமை வழங்கப்பட வேண்டும். தேர்ந்தெடுக்கப்பட்ட பயனாளிகளில் 30 சதவிகிதம் தாழ்த்தப்பட்ட /  பழங்குடி இனத்தை சேர்ந்தவர்களாக இருக்க வேண்டும்.  2022 -23ஆம் ஆண்டிற்கான  நாட்டுக்கோழி வளர்ப்பு  திட்டத்தின்  கீழ்  பயனாளிகள் பயனடைந்திருக்கக் கூடாது.

  • கட்டுமான பணிகள், தீவனம் (ம) உபகரணங்கள் வாங்குதல் போன்ற அனைத்து செயல்முறைகளும் பயனாளியால் செய்யப்பட வேண்டும்.
  • ஒவ்வொரு மாவட்டத்திலும் இத்திட்டத்தின் கீழ் , நாட்டுக்கோழி வளர்ப்பில்  திறமையும் ஆர்வமும் உள்ள 3 முதல் 6 தொழில் முனைவோர் / பயனாளிகள் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும்.
  • விண்ணப்பிக்கும் பயனாளிகளிடமிருந்து  ஆதார் அட்டை நகல்,  பண்ணை அமையவிருக்கும் இடத்திற்கான சிட்டா / அடங்கல் நகல், 50% தொகை அளிப்பதற்கான ஆதார ஆவணங்கள் (வங்கி இருப்பு விவரம் / வங்கி கடன் ஒப்புதல் விவரம் ) 3 வருடத்திற்கு பண்ணையை பராமரிப்பதற்கான உறுதிமொழி,  2022 -23ஆம் ஆண்டிற்கான  நாட்டுக்கோழி வளர்ப்பு  திட்டத்தின்  கீழ்   பயனடையவில்லை  என்பதற்கான சான்றிதழ் பெறப்பட வேண்டும்.

மாவட்டங்களிலிருந்து பெறப்படும் மாவட்ட ஆட்சியர் ஒப்புதல் பெறப்பட்ட பயனாளிகளின் பட்டியலிலிருந்து, முன்னுரிமை அடிப்படையில் 100 பயனாளிகள்,  கால்நடை பராமரிப்பு  மற்றும்  மருத்துவப்பணிகள்  இயக்குநர்  அவர்களால் இறுதி செய்யப்படும் .

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Pongal 2025 Holiday: என்னாது? பள்ளிகள், அரசு அலுவலகங்களுக்கு 9 நாட்கள் பொங்கல் விடுமுறையா? அறிவிப்பு சொல்வது என்ன?
Pongal 2025 Holiday: என்னாது? பள்ளிகள், அரசு அலுவலகங்களுக்கு 9 நாட்கள் பொங்கல் விடுமுறையா? அறிவிப்பு சொல்வது என்ன?
Tamilisai Soundararajan : ”தமிழிசைக்கு விரைவில் புதிய பதவி” இதற்காகதான் காய் நகர்தினாரா அவர்?
Tamilisai Soundararajan : ”தமிழிசைக்கு விரைவில் புதிய பதவி” இதற்காகதான் காய் நகர்தினாரா அவர்?
யப்பா! நிம்மதி பெருமூச்சு விட்ட அல்லு அர்ஜுன்.. கிடைத்தது ஜாமீன்!
யப்பா! நிம்மதி பெருமூச்சு விட்ட அல்லு அர்ஜுன்.. கிடைத்தது ஜாமீன்!
TNPSC Annual Planner: அடுத்த வாரம் வெளியாகும் ஆண்டு தேர்வு அட்டவணை? டிஎன்பிஎஸ்சி சொன்னது என்ன?
TNPSC Annual Planner: அடுத்த வாரம் வெளியாகும் ஆண்டு தேர்வு அட்டவணை? டிஎன்பிஎஸ்சி சொன்னது என்ன?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Tamilisai vs Annamalai : EPS-ஐ வைத்து அ.மலைக்கு ஸ்கெட்ச்!டெல்லிக்கே போன தமிழிசை! பாஜக தலைவர் யார்?Yescon 2025 : சென்னையில் நாளை முதல்.. YESCON - 2025 மாநாடு துவக்கி வைக்கும் நிதியமைச்சர்செ.பாலாஜி..பொன்முடி வரிசையில்..  துரைமுருகன் வீட்டில் ED ரெய்டு!  பரபரக்கும் வேலூர்ஸ்டாலின் vs இபிஎஸ் vs விஜய் ! களமிறங்கிய MASTER MINDS ! 2026-ல் அரியணை யாருக்கு?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Pongal 2025 Holiday: என்னாது? பள்ளிகள், அரசு அலுவலகங்களுக்கு 9 நாட்கள் பொங்கல் விடுமுறையா? அறிவிப்பு சொல்வது என்ன?
Pongal 2025 Holiday: என்னாது? பள்ளிகள், அரசு அலுவலகங்களுக்கு 9 நாட்கள் பொங்கல் விடுமுறையா? அறிவிப்பு சொல்வது என்ன?
Tamilisai Soundararajan : ”தமிழிசைக்கு விரைவில் புதிய பதவி” இதற்காகதான் காய் நகர்தினாரா அவர்?
Tamilisai Soundararajan : ”தமிழிசைக்கு விரைவில் புதிய பதவி” இதற்காகதான் காய் நகர்தினாரா அவர்?
யப்பா! நிம்மதி பெருமூச்சு விட்ட அல்லு அர்ஜுன்.. கிடைத்தது ஜாமீன்!
யப்பா! நிம்மதி பெருமூச்சு விட்ட அல்லு அர்ஜுன்.. கிடைத்தது ஜாமீன்!
TNPSC Annual Planner: அடுத்த வாரம் வெளியாகும் ஆண்டு தேர்வு அட்டவணை? டிஎன்பிஎஸ்சி சொன்னது என்ன?
TNPSC Annual Planner: அடுத்த வாரம் வெளியாகும் ஆண்டு தேர்வு அட்டவணை? டிஎன்பிஎஸ்சி சொன்னது என்ன?
சனாதனம் பத்தி புரியாம பேசாதீங்க? கொதித்தெழுந்த துணை ஜனாதிபதி
சனாதனம் பத்தி புரியாம பேசாதீங்க? கொதித்தெழுந்த துணை ஜனாதிபதி
Kushboo :
Kushboo : "தந்தையால் பாலியல் தொந்தரவுக்கு ஆளானேன்"..நடிகை குஷ்பு ஓப்பன் டாக்
Madurai: அக்னி சட்டி, மிளகாய் அரைத்து போராட்டம் ; மதுரையில் குஷ்பு கைது
அக்னி சட்டி, மிளகாய் அரைத்து போராட்டம் ; மதுரையில் குஷ்பு கைது
"உங்களவிட்டு மனைவி ஓடிடுவாங்க.. பாத்துக்கோங்க" அதானி கொடுத்த அட்வைஸ்!
Embed widget