TN Budget 2022: பண்டைய பழங்குடியினருக்கு மேலும் 1000 வீடுகள் - பட்ஜெட்டில் அறிவிப்பு
இருளர் உள்ளிட்ட பண்டைய பழங்குடியினருக்கு மேலும் 1000 வீடுகள் ரூ. 50 கோடியில் கட்டித்தரப்படும் என நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.
தமிழக அரசின் 2022-23ம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கை இன்று தாக்கல் செய்யப்பட்டு வருகிறது. இந்த நிதிநிலை அறிக்கையை நிதியமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்து வருகிறார். சென்னை, புனித ஜார்ஜ் கோட்டையில் உள்ள சட்டப்பேரவையில் இன்று காலை 10 மணிக்கு பட்ஜெட் தாக்கலுக்கு முன்பு பேச வாய்ப்பு அளிக்குமாறு எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி வாய்ப்பு கேட்டார்.
ஆனால், சபாநாயகர் அப்பாவு பேசுவதற்கு வாய்ப்பு அளிக்க மறுத்தார். இதனால், அ.தி.மு.க.வினர் அமளியில் ஈடுபட்டனர். அ.தி.மு.க.வினர் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டதால் நிதிநிலை அறிக்கையை படித்து வந்த நிதியமைச்சர் பட்ஜெட் வாசிப்பதை சில நிமிடங்கள் நிறுத்தி அமர்ந்தார்.
அதனைதொடர்ந்து, அதிமுக வெளிநடப்பு செய்ததால் நிதிநிலை அறிக்கையை தொடர்ந்து நிதியமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் வாசிக்க தொடங்கினார். பட்ஜெட் உரையில் நிதியமைச்சர் பல்வேறு முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டு பேசி வருகிறார். அதில், இருளர் உள்ளிட்ட பண்டைய பழங்குடியினருக்கு மேலும் 1000 வீடுகள் ரூ. 50 கோடியில் கட்டித்தரப்படும் என அறிக்கையில் தெரிவித்தார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்