புதுச்சேரி 2024 - 25 ஆண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்தார் முதல்வர் ரங்கசாமி
புதுச்சேரியில் பாராளுமன்ற தேர்தல் அமைதியான முறையில் நடைபெற்றதற்கு அனைவருக்கும் பாராட்டை தெரிவித்துக்கொள்கிறேன்.
புதுச்சேரி: புதுச்சேரி பட்ஜெட் இன்று காலை 9:00 மணிக்கு முதல்வர் ரங்கசாமி தாக்கல் செய்தார்.
புதுச்சேரி சட்டப்பேரவை கூட்டத் தொடர் நேற்று முன்தினம் ஆளுநர் உரையுடன் துவங்கியது. இரண்டாம் நாள் அமர்வு நேற்று காலை 9:30 மணிக்கு துவங்கியது. சபாநாயகர் செல்வம் திருக்குறள் வாசித்து சபையை துவக்கி வைத்தார்.
அதைத்தொடர்ந்து, மறைந்த முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள் மற்றும் வயநாடு நிலச்சரிவில் உயிரிழந்தோர்க்கு இரங்கல் தீர்மானம் வாசிக்கப்பட்டு இரண்டு நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது. அதைத் தொடர்ந்து ஆளுநர் உரை மீது நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது விவாதம் நடந்தது.
அதில், 9 சட்டமன்ற உறுப்பினர்கள் தங்கள் கருத்துக்களை பதிவு செய்தனர். அதை தொடர்ந்து மதியம் 12:20 மணிக்கு சபை நடவடிக்கை முடிந்து ஒத்தி வைப்பதாகவும், இன்று காலை 9:00 மணிக்கு சபை துவங்கும் என சபாநாயகர் செல்வம் அறிவித்தார்.
நிதித்துறை பொறுப்பு வகிக்கும் முதலமைச்சர் ரங்கசாமி இன்று காலை 9:00 மணிக்கு புதுச்சேரியில் 2024 - 25 நிதியாண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.
பட்ஜெட் தாக்கல் என்பது முதல்வர் ரங்கசாமி வாசிக்கையில்...
3-வது முறையாக பிரதமராக மோடியை தேர்ந்தெடுத்த மக்களுக்கு பாராட்டுகளை தெரிவித்துக்கொள்கிறேன். புதுச்சேரியில் பாராளுமன்ற தேர்தல் அமைதியான முறையில் நடைபெற்றதற்கு அனைவருக்கும் பாராட்டை தெரிவித்துக்கொள்கிறேன். மேலும் புதுச்சேரியில் தனி நபர் வருமானம் நிலையாக உள்ளது.
2024-25 ஆம் ஆண்டிற்கு ரூ.12,700 கோடிக்கு பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது.
உள்நாட்டு நிதி வருவாயாக ரூ.6,914 கோடியாகவும், மத்திய அரசின் கொடை ரூ.3,268 கோடியும், நிதி பற்றாக்குறையை போக்க ரூ.2, 066 கோடி கடன் வாங்கவும் அனுமதிக்கப்பட்டுள்ளதாக ரங்கசாமி பேரவையில் தகவல்.
மானிய விலையில் கோதுமை பருப்பு, சர்க்கரை, எண்ணெய் வழங்கப்படும் :
காரைக்காலில் பழைமையான அருங்காட்சியகம் அமைக்கப்படும்.பா ரதியார் மற்றும் பாரதிதாசன் அருங்காட்சியகம் மேம்படுத்தப்படும், இலவச அரிசி மாணிய விலையில் கோதுமை பருப்பு, சர்க்கரை, எண்ணெய் வழங்கப்படும் என ரங்கசாமி அறிவிப்பு.